உலக சுற்றுச்சூழல் தினம்: காற்று மாசுபடுதலை குறைக்க உதவுங்களேன்!!

Written By:

நீர், நிலம், காற்று என அனைத்தையும் பாதுகாப்பதை வலியுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல விதங்களிலும் மாசுபட்டு வரும் சுற்றுச்சூழலை காப்பதில் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பையும், பங்கையும் உணர்ந்துகொள்ளவே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. வாகன புகையால் ஏற்படும் விபரீதங்களை பற்றிய ஆய்வுகளும், செய்திகளும் நம்மை மிரட்டி வருகின்றன. இந்த நிலையில், காற்றுக்கும், அதனால் மனித குலத்திற்கும் எமனாக மாறிவரும் வாகன புகையை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.

ஒவ்வொருவரும் செய்யும் சிறு செயல்களால் பெருமளவு வாகன புகையை தவிர்க்க உதவிபுரியும். காற்று மாசுபடுதலை தவிர்க்க, கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

 01. தவிர்க்கலாம்...

01. தவிர்க்கலாம்...

அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு கார் பயன்படுத்துவதை தவிர்த்து, பைக் அல்லது பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாம். மேலும், கார் பூலிங் எனப்படும் கார் பகிர்மான திட்டங்களில் சேர்ந்து அலுவலகம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

02. தேவையற்ற பயணங்கள்

02. தேவையற்ற பயணங்கள்

பக்கத்தில் இருக்கும் கடை மற்றும் வணிக வளாகங்களுக்கு நடந்து செல்ல பழகிக் கொள்ளலாம். கார், பைக் எடுப்பதை தவிர்த்து நடந்து செல்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் கூடும். எரிபொருள் பயன்பாடு, வீண் பண விரயம், காற்று மாசுபாடு என பலவற்றை தவிர்க்க முடியும்.

03. பராமரிப்பு

03. பராமரிப்பு

சரியான கால அளவுகளில் காரை பராமரிப்பு செய்வது அவசியம். இதன்மூலம், காரிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முடியும்.

04. தரமான ஆயில்

04. தரமான ஆயில்

எரிசக்தி விரயத்தை தவிர்க்கும் தரத்திலான எஞ்சின் ஆயிலை தேர்வு செய்து பயன்படுத்தவும்.

05. பயண திட்டமிடல்

05. பயண திட்டமிடல்

ஒவ்வொரு பயணத்தையும் திட்டமிட்டு செல்வது அவசியம். இதன்மூலம், எரிபொருள் விரயத்தை தவிர்ப்பதுடன், காற்று மாசுபடுதலையும் தவிர்க்கலாம்.

06. பார்க்கிங்

06. பார்க்கிங்

சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், இடத்திலும் காரை நிறுத்த வேண்டும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அந்த வாகனங்களிலிருந்து அதிகளவு புகை வெளியேறுவதற்கு நீங்கள் காரணகர்த்தாவாக மாற வேண்டாம்.

07. டயரில் காற்றழுத்தம்

07. டயரில் காற்றழுத்தம்

டயரில் எப்போதும் சரியான அளவிலான காற்றழுத்தத்தை பராமரிப்பது அவசியம். அதேபோன்று, டயர்கள் அலைன்மென்ட் சரியாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்வது அவசியம்.

08. கேரியர்

08. கேரியர்

காருக்கு மேலே பொருத்தப்படும் கேரியர்களை தேவையில்லாத சமயங்களில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். இது காரின் ஏரோடைனமிக்ஸை பாதித்து, கூடுதல் எரிபொருள் விரயத்தையும், அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதற்கும் காரணமாக அமையும்.

09. பழைய வாகனங்கள்

09. பழைய வாகனங்கள்

அதிகமாக புகையை வெளியேற்றும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக புகையை கக்கும் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

10. சைக்கிள்தான் பெஸ்ட்..

10. சைக்கிள்தான் பெஸ்ட்..

புகை பிரச்சனை இல்லாத மிதிவண்டி அல்லது ஸீரோ எமிசன் என்று சொல்லப்படும், மின்சார வாகனங்களை பயன்படுத்தலாம்.

11. மாடிஃபிகேஷன்

11. மாடிஃபிகேஷன்

கார்களில் அலங்காரத்துக்காக மாறுதல்களை செய்வதை தவிர்ப்பது நலம். இது வாரண்டிக்கு மட்டுமல்ல, காரின் செய்யப்படும் மாறுதல்கள் மற்றும் பொருத்தப்படும் கூடுதல் ஆக்சஸெரீகளால், காரிலிருந்து வெளியேறும் புகையின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

12. இது உங்கள் சொத்து...

12. இது உங்கள் சொத்து...

மனது வைத்தால் முடியாதது இல்லை. இந்த விஷயங்களை பின்பற்றும்போது, வாகன புகையை குறைப்பதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் உங்களின் பங்களிப்பாக இருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் பொன், பொருளை விட நல்ல காற்று, சுத்தமான தண்ணீர், சுகாதாரமான நிலத்தை கொடுப்பதே சிறந்த சொத்தாக இருக்க முடியும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World Environment Day Special: How to reduce Air pollution.
Story first published: Friday, June 5, 2015, 13:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark