அலேக்காக மேலே ஏறி, இறங்கும் சிறிய ரக தனி நபர் விமானம்... புதிய புரட்சி!

Written By:

சிறிய ரக தனி நபர் ஜெட் விமானங்களுக்கு மேலே எழும்புவதற்கும், தரையிறக்குவதற்கும் குறைந்தபட்சமான ஓடுபாதை தேவைப்படுகிறது. ஆனால், தற்போது நீங்கள் படிக்கப்போகும் இந்த குட்டி விமானத்துக்கு ஓடுபாதை தேவையில்லை.

சிறிய அளவிலான தளம் இருந்தாலே, இந்த புதிய குட்டி விமானத்தை தரையிறக்கவும், மேலே எழுப்பவும் முடியும். இந்த விமானம் குறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

லிலியம்...

லிலியம்...

மூனிச் நகரை சேர்ந்த பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர் குழு இந்த புதிய பறக்கும் காரை உருவாக்கியிருக்கிறது. இந்த விமானம் தனி நபர் விமான மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார விமானம்

மின்சார விமானம்

இந்த குட்டி விமானம் முழவதும் பேட்டரியில் இயங்கும். அதாவது, பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலமாக இந்த விமானம் பறக்கும். ஃப்ளை பை ஒயர் ஜாய்ஸ்டிக் கன்ட்ரோல் மூலமாக இயக்க முடியும்.

பெயர்

பெயர்

இந்த குட்டி விமானத்துக்கு லிலியம் என பெயரிடப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். காரில் தினசரி அலுவலகம் செல்வது போன்று, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய ரக விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் நிலை

பறக்கும் நிலை

பகல்நேரத்தில் நல்ல சீதோஷ்ண நிலையில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்ததாக குறைந்த உயரத்தில் பறக்கும்.

வேகம்

வேகம்

இந்த விமானத்தில் 320kW திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் வரை பறக்கும். இந்த விமானம் மணிக்கு 402 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.

 பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம்

தரையிறக்கும்போதும், மேலே எழுப்பும்போதும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும். மேலும், காற்றின் வேகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த கோணத்தில் தரையிறங்கும் என்பதும் இதன் விசேஷம். அதிகபட்சமாக 3 கிமீ உயரத்தில் பறக்கும்.

ஹெலிபேட் போதும்...

ஹெலிபேட் போதும்...

இந்த விமானத்தை தரையிறக்குவதற்கும், மேலே எழுப்புவதற்கும் 50க்கு 50 அடி பரப்பு கொண்ட தளம் அல்லது ஹெலிபேட் இருந்தால் போதுமானது.

பைலட் பயிற்சி

பைலட் பயிற்சி

இந்த புதிய பறக்கும் காரை இயக்குவதற்கு 20 மணி நேர பைலட் பயிற்சி பெற்றால் போதுமானது. அதன் பிறக்கு சுயமாகவே இயக்க முடியும்.

கட்டணம் இருக்காது...

கட்டணம் இருக்காது...

ஹெலிகாப்டர் அல்லது தனி நபர் விமானங்களை விமான நிலையங்களில் நிறுத்தி வைப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தும்போது அதற்கு கட்டணம் செலுத்த நேரிடும். இதற்கு அந்த தொல்லை இல்லை. வீட்டு மாடியில் உள்ள ஹெலிபேடிலேயே இதனை தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் முடியும் என்பதோடு, நிறுத்தி வைக்கவும் முடியும்.

 அறிமுகம்

அறிமுகம்

வரும் 2018ம் ஆண்டு இந்த புதிய தனிநபர் விமானம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வான்வழி போக்குவரத்தில் இந்த விமானம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தை ரெடி பண்ணுங்கோ... அடுத்து ஒரு பறக்கும் கார் ரெடியாகருகிறது புதிய பிஏஎல் வி-ஒன் பறக்கும் கார்!

பணத்தை ரெடி பண்ணுங்கோ... அடுத்து ஒரு பறக்கும் கார் ரெடியாகருகிறது புதிய பிஏஎல் வி-ஒன் பறக்கும் கார்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's first electric VTOL personal flight vehicle.
Story first published: Tuesday, May 10, 2016, 10:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark