விண்ணில் பறக்கத் தயாராகும் உலகின் பிரம்மாண்ட விமானம்!

By Meena

விசித்திரமான உருவ அமைப்பு கொண்ட எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அவை உடனே சமூகத்தில் ஒரு தனி கவன ஈர்ப்பை உருவாக்கிவிடும். உலகின் பருமனான மனிதர், பெரிய சிலை, நீளக் கடல், உயரமான யானை, அகலமான மரம் என வித்தியாசமான தோற்றம் உடைய அனைத்துமே அதிசயம்தான். இயற்கை மட்டுமின்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

அப்படி ஒரு ஆச்சரியம்தான் ஏர்லேண்டர் 10 எனப்படும் உலகில் மிகப் பெரிய விமானமும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் ராயல் விமானப்படைத் தளத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது அந்த விமானம்.

ஏர்லேண்டர் 10

93 மீட்டர் நீளம், 43.5 மீட்டர் அகலம், 26 மீட்டர் உயரமுடைய இந்த ஹல்க் விமானம் சுமார் 20 டன் எடை கொண்டது. 10 டன் எடை வரை தாங்கிச் செல்லும் திறன் இந்த விமானத்துக்கு உள்ளதாம். மார்த்தா க்வைன் எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் மேற்பரப்பு அளவு 38,000 சதுர மீட்டர்கள்.

அம்மாடி என்று வாயைப் பிளக்க வைக்கும் இந்த அமேஜான் விமானம், எப்போது விண்ணில் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. பிரிட்டனின் ராயல் விமானப் படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொட்டகையின் கீழ்தான் ஏர்லேண்டர் 10, இத்தனை நாளாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அந்த கொட்டகை எவ்வளவு பெரியது தெரியுமா? 247 மீட்டர் நீளம், 124 மீட்டர் அகலம், 48 மீட்டர் உயரம் கொண்டது. இப்போது ஹாட்டான விஷயம் என்னவென்றால், மூன்று ஆண்டுகளாக அந்த ராட்சதக் கொட்டகைக்குள் அடைபட்டிருந்த ஏர்லேண்டர் 10 விமானம், இப்போது வெளியே வந்துள்ளது.

தரை வழியே அதன் முதல்கட்ட சோதனை ஓட்டம் நிறைவடைந்ததாகத் தெரிகிறது. அதேவேளையில், அந்த விமானத்தை விண்ணில் எப்போது பறக்க விட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டால், வானி்ல் பறந்த மிகப் பிரம்மாண்ட விமானம் என்ற பெருமை ஏர்லேண்டர் 10-க்கு கிடைக்கும்.

நான்கு 4.0 லிட்டர் சூப்பர் சார்ஜுடு டீசல் எஞ்சின் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1380 குதிரை சக்தியை வெளிப்படுத்தும் திறன் அந்த எஞ்சினுக்கு உண்டு. இத்தனை சிறப்பம்சங்களைக் கேட்ட பிறகு, அந்த ஜம்போ விமானத்தில் ஜாலியாகப் பறக்க வேண்டும் என்ற ஆசை மனதில் எழுவதைத் தடுக்க முடியவில்லை....

Most Read Articles
English summary
World's Largest Aircraft Leaves Hangar For 1st Time.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X