இன்று ஹைதராபாத்தில் தரையிறங்கிய உலகின் மிக பிரம்மாண்ட விமானம்: காணத்தவறாதீர்கள்!

Written By:

உலகின் மிக பிரம்மாண்ட அன்டோனோவ் ஏஎன்-225 மிரியா சரக்கு விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரை இறங்கி உள்ளது.

மத்திய ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுரங்கத்திற்கான ராட்சத ஜெனரேட்டரை சுமந்து வரும் இந்த விமானத்தை காண்பதற்கு கேமராவும் கையுமாக, ஆஸ்திரேலியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு

தயாரிப்பு

கடந்த 1980ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்டது இந்த விமானம். இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப்பெரியதும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே விமானம் என்ற பெருமைக்குரியது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

இந்த விமானம் 640 டன் வரை எடை சுமந்து மேலே எழும்பும் திறன் கொண்டது. மேலும், 180 டன் முதல் 230 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். தற்போது 117 டன் எடையுடைய மின் உற்பத்தி ஜெனரேட்டரை ஆஸ்திரேலியாவுக்கு சுமந்து செல்லும் வழியில் இந்தியாவில் தரை இறங்குகிறது.

 டெலிவிரி

டெலிவிரி

செக் குடியரசு நாட்டிலிருந்து மினசார ஜெனரேட்டரை சுமந்து கொண்டு ஆஸ்திரேலியா பறக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒர்ஸ்ட்லி அலுமினியா என்ற சுரங்க நிறுவனத்துக்கு இந்த ஜெனரேட்டர் டெலிவிரி கொடுக்க கொண்டு செல்லப்படுகிறது. டிபி ஷெங்கர் என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஜெனரேட்டரை கொண்டு சென்று டெலிவிரி கொடுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

வழித்தடம்

வழித்தடம்

தாயகமான உக்ரைன் நாட்டிலிருந்து புறப்பட்டு செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிரேக் நகருக்கு வந்தது. அங்கிருந்து ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு தற்போது துர்க்மெனிஸ்தான், ஹைதராபாத், ஜகார்த்தா வழியாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு செல்கிறது.

சுரங்க ஜெனரேட்டர்

சுரங்க ஜெனரேட்டர்

சுரங்கத்தில் பயன்படுத்தக்கூடிய 117 டன் எடையுடைய ராட்சத ஜெனரேட்டரை சுமந்து கொண்டு இந்த விமானம் ஹைதராபாத்தில் நாளை தரையிறங்க உள்ளது. மேலும், நாளை இரவு முழுவதும் ஹைதராபாத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதிகபட்சமாக 4,000 கிமீ தூரம் மட்டுமே பயணிக்கும். இதனாலேயே, வழித்தடத்தில் பூகோள ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த விமானத்தை கையாளும் வசதி கொண்ட விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. சரக்கு ஏற்றப்படவில்லையெனில், தொடர்ந்து 18 மணி நேரம் பறக்கும்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்த விமானம் 84 மீட்டர் நீளமும், 88.4 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. போயிங் 747 விமானத்தை விட 20 மீட்டர் கூடுதல் இறக்கை அகலம் கொண்டது. லேண்டிங் கியர்களில் 42 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானத்தில் 6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அபரிமிதமான சக்தியை வாரி இறைத்து இந்த விமானத்தை மேல் எழும்பி பறக்க செய்யும்.

சாதனை

சாதனை

ஏற்கனவே இந்த விமானம் சோவியத் யூனியனின் தி புரான் விண்வெளி ஓடத்தை தன் முதுகில் சுமந்து பறந்தது மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடப்படுகிறது.

கனவு

கனவு

உக்ரைன் மொழியில் மிரியா என்றால் கனவு என்று அர்த்தமாம். ஆமாங்க, இந்த விஷயங்களை பார்க்கும்போது ஒரு கனவு விமானத்தை பற்றி படிப்பது போலத்தான் இருக்கிறது. என்ன ஹைதராபாத் வாசகர்களே, நாளை கேமராவும், கையுமாக விமான நிலையத்தில் ஆஜராகிவிடுவீர்கள்தானே!! ஆமாங்க, இந்த வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது.

ஏன் ஹைதராபாத்!

ஏன் ஹைதராபாத்!

ஓடுபாதை நீளம், அகலமான இறக்கை கொண்ட இந்த விமானத்தை தரையிறக்குவதற்கான போதிய இடவசதி, தொழில்நுட்ப ரீதியிலான அம்சங்கள் மட்டுமின்றி, பூகோள ரீதியிலும் ஹைதராபாத் விமான நிலையம் இந்த பிரம்மாண்ட விமானத்தை தரையிறக்குவதற்கான கட்டமைப்புகளை பெற்றிருப்பதையடுத்து, தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஹைதராபாத்தில் இல்லையே என்று அங்கலாய்க்கும் வாசகர்கள் இந்த விமானத்தின் பிரம்மாண்டத்தை இந்த வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

விமானத்தின் உட்பகுதியை காண்பதற்கான வீடியோ!

ஹைதராபாத்தில் தரிசனம் தந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!

ஹைதராபாத்தில் தரிசனம் தந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The world's largest cargo aircraft, Antonov AN -225 Mriya -- or the Dream, is scheduled to make its first landing in India on May 13 at the Rajiv Gandhi International Airport at Hyderabad, the Ukraine company's collaborators here said on Wednesday.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark