450 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய டிரக்!!
சுரங்கங்களில் பயன்படுத்து வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய டிரக்கை பெலாஸ் டிரக் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. BelAZ 75710 என்று பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்ட டிரக்கில் ஒரு பெரிய வீட்டையே வைத்து கொண்டு செல்ல முடியும்.
இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிரக் தற்போது சைபீரிய பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த டிரக்கை பற்றிய சுவாரசியமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அம்மாடியோவ்...
இந்த டிரக் 450 டன் எடை சுமக்கும் திறன் கொண்டது. பாரம் ஏற்றிய நிலையில் டிரக்கின் மொத்த எடை 810 டன்னாக இருக்கும்.

டயர் அளவு
இந்த டிரக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 8 ராட்சத தோற்றம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சராசரி மனிதனைவிட மூன்று மடங்கு உயரம் கொண்டது இந்த டயர்கள்.

வடிவம்
இந்த டிரக் 26 அடி உயரமும், 67 அடி நீளமும் கொண்டது.

இடவசதி
இந்த டிரக்கின் பின்புறத்தில் இரண்டரை போயிங் ஜெட் விமானங்களை நிறுத்தும் அளவுக்கு இட வசதி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த பிரம்மாண்ட டிரக்கில் 16 சிலிண்டர்கள் கொண்ட 65 லிட்டர் எம்டியு டர்போசார்ஜர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 4,600 எச்பி பவரையும், 18,626 என்எம் டார்க்கையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் ஸ்பீடு
உருவத்தில் மிகப்பிரம்மாண்டமாக இருந்தபோதிலும் மணிக்கு 64 கிமீ வேகம் வரை செல்லுமாம். மேலும், 10 டிகிரி கோணத்திலான சரிவுப் பாதைகளிலும் மணிக்கு 40 கிமீ வேகம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்னிங் ரேடியஸ்
இந்தளவு உருவத்தில் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த டிரக் வெறும் 20 மீட்டர் மட்டுமே டர்னிங் ரேடியஸ் கொண்டது.

கின்னஸில் இடம்பெறுமா?
உலகின் மிகப்பெரிய டிரக்காக வர்ணனைக்குள்ளாகியிருக்கும் இந்த புதிய டிரக் இதுவரை கின்னஸில் இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் அந்த சாதனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








