அடேங்கப்பா... கடலில் பறக்கும் எலெக்ட்ரிக் படகு... முழு சார்ஜில் எவ்வளவு தூரம் போகும் தெரியுமா?
சுவீடன் நாட்டில் பல நவீன வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் படகு அறிமுகமாகியுள்ளது. இந்த படகில் அப்படி என்னென்ன வசதிகள் இருக்கிறது? இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

இன்று உலகில் பெட்ரோல் டீசல் வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகன உலகம் ஆக்கிரமித்து வருகிறது. நாளுக்கு நாம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதை மக்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்னும் மார்கெட்டிற்கு வரவில்லை எனச் சொல்லலாம். மக்கள் எதிர்பார்க்கும் பைக் வந்தால் மக்கள் அதையும் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இப்படியாக மோட்டார் உலகை எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று எலெக்ட்ரிக் படகு ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் தான்.கேண்டில் இந்நிறுவனம் ஹைட்ரோ ஃபாயில் எலெக்ட்ரிக் படகு ஒன்றை உருவாக்கியுள்ளது. தண்ணீருக்கு மேலே பறக்கும் இந்த படகிற்கு P-8வாயேஜர் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த படகு ஹைட்ரோஜாயில் சிஸ்டத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் 50KWமின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் படகு சவாரியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த படகிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் பல எலெக்ட்ரிக் படகுகள் அறிமுகமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த படகு முழு சார்ஜில் நீண்ட தூரம் பயணிக்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படகு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும், ஒலி மாசு ஏற்படுத்தாமலும் இயங்கும் திறன் கொண்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலில் நீங்கள் பயணித்த தடமே இல்லாத அளவிற்கு இந்த படகு பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ குட்சவ் ஹசல்ஸ்கோக் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த படகில் ஃபிளைட் கண்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இது படகு 16 நாட்களுக்கு அதிகமான வேகத்தில் செல்லும் போது தானாக நீர் மட்டத்திலிருந்து படகு மேலே வந்து ஃபாசிலில் படகு பயணிக்கத் துவங்கிவிடும்.

நீர்மட்டத்திலிருந்து 4-5 அடி உயரம் வரை படகு உயரமாக வந்துபயணிக்கும் திறன் கொண்டது. இந்த படகில் 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த படகு எல்லா காலசூழ்நிலைக்கும் ஏற்ற வாகனமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. வெயில் காரில் இந்த காருக்குள் ஏசியை பயன்படுத்தி வெப்ப நிலையைச் சமன் செய்யும் குளிர் காலத்தில் ஹீட்டரை பயன்படுத்தி வெப்ப நிலையைச் சமன் செய்யும். இதனால் இந்த படகில் பயணிக்கும் பயணிகளுக்குச் சொகுசான பயணம் அமையும்.

இந்த படகு முழு சார்ஜில் 40 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குப் பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 22 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும். இதுவரை பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் படகை விட இந்த படகு 4 மடங்கு அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. அதாவது சென்னை துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் சுமார் 328.8 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருக்கிறது. இந்த படகில் முழு சார்ஜில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்துவிடலாம்.

இந்த படகின் அதிகபட்ச வேகமான 22நாட்ஸ் வேகத்தில் பயணித்தால் சென்னையிலிருந்து தூத்துக்குடி வருவதற்கு 14 மணி நேரம் ஆகும். தற்போது கப்பல்களில் வருவதற்கே 12.5 மணி நேரம் ஆகும் நிலையில் கிட்டத்தட்டக் கப்பலின் வேகத்தில் இந்த படகு பயணிக்கிறது என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications








