360 கிமீ வேகத்தில் பறக்கும் கார்... இன்னும் ஒரு வாரத்துக்கு எல்லாரும் இந்த காரோட நெனப்பாவே சுத்த போறாங்க!
உலகின் முதல் எஃப்1 ரக பறக்கும் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் பறக்கும் திறன் மற்றும் சிறப்புகள் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விரிவான தகவலைக் காணலாம்.
தார் சாலை மற்றும் டிராக்குகளில் பறந்துக் கொண்டிருந்த ஃபார்முலா 1 ரக பந்தய வாகனங்கள் எதிர்காலத்தில் வானத்திலும் பறக்க இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓர் வாகன உற்பத்தி நிறுவனம் உலகின் முதல் ஃபார்முலா 1 ரக பறக்கும் காரை உருவாக்கி, அதனை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது.

என்ன ஹைட்ரஜனில் பறக்குமா?
இந்த வாகனத்தின் கூடுதல் சிறப்பு என்ன என்றால், இந்த பறக்கும் பந்தய வாகனம் ஹைட்ரஜனால் இயங்கக் கூடியது என்பது ஆகும். மின்சார வாகனம் மற்றும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் ஹைட்ரஜனில் இயங்கும் மிக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பானதே ஹைட்ரஜன். இதன் பயன்பாட்டால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.
மின்சாரத்திலும் இயங்குமா?
அதேவேளையில், அதிக மைலேஜ் மற்றும் சிறந்த திறன் வெளிப்பாடு ஆகியவற்றையும் ஹைட்ரஜன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய ஓர் ஃப்யூவலில் இயங்கும் பறக்கும் காராகவே ஃபார்முலா 1 ரக பறக்கும் வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது பறக்கும் கார் என்பதால் வீல்களுக்கு பதிலாக புரபெல்லர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த புரபெல்லர்கள் மின்சாரத்தால் இயங்கும் திறன் கொண்டவை.

டேக்-ஆஃப் செய்ய ஓடுதளம் தேவைப்படுமா?
ஆமாங்க, ஹைட்ரஜன் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாகவே இதனை ஆஸ்திரேலிய நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த புரபெல்லர்களே பறக்கும் காரை ஹெலிகாப்டர்களைப் போல் செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை செய்ய உதவும். ஆகையால், ஓர் சிறிய ஹெலிபேட் இருந்தாலே இந்த பறக்கும் காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். விமானத்திற்கு தேவைப்படுவதைபோல் ஓடுதளம் இந்த வாகனத்திற்கு தேவைப்படாது.
ஓஹோ இதுதான் பெயரா?
இத்தகைய பறக்கும் ஃபார்முலா ஒன் ரக காரையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலாவுதா ஏரோனாட்டிக்ஸ் (Alauda Aeronautics) நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த பறக்கும் காருக்கு ஏர் ஸ்பீடர் எம்கே 4 (Airspeeder MK4) என பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இந்த பெயருடனேயே பறக்கும் தற்போது வெளியீடும் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால், இதே பெயரிலேயே பறக்கும் எஃப்1 ரக ஹைட்ரஜன் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏஐ வசதியும் கொடுத்திருக்காங்க
ஆனால், இதன் விற்பனைக்கான வருகை எப்போது அமையும் என்கிற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே கூறியதைப் போல், உலகின் முதல் எஃப்1 ரக பறக்கும் ஹைட்ரஜன் காராக இருக்கும். அத்துடன், ஆட்டோ இன்டலிஜன்ஸ் அம்சமும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
பைலட் கண்டிப்பா தேவை
எனவே உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பறக்கும் காராகவும் இதன் வருகை இருக்கும். இந்த அம்சம் இருக்கின்ற போதிலும் ஏர்ஸ்பீடர் எம்கே4 பறக்கும் காரை இயக்க ஓர் பைலட் தேவைப்படுவார் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த பறக்கும் காரால் மணிக்கு 360 கிமீ வேகத்தில் பறக்க முடியுமாம். இதனை தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது.

30 செகண்டே போதும்
இதற்காக நான்கு புரபெல்லர்கள் ஏர்ஸ்பீடர் எம்கே4 இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஹைட்ரஜனில் இங்கும் டர்போ ஜெனரேட்டர் மோட்டார் ஒன்றும் ஏர்ஸ்பீடர் எம்கே4 இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 1,340 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுவே ஏர்ஸ்பீடர் எம்கே4-ஐ மணிக்கு 360 கிமீ பறக்க செய்கிறது. இந்த வேகத்தை வெறும் 30 செகண்டுகளிலேயே இந்த பறக்கும் கார் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இன்னும் சில மாதங்களில் வானத்தில் இதை பார்க்கலாம்
ஆகையால், கண் இமைக்கும் நேரத்தில் வானத்தில் இந்த வாகனத்தால் சீறி பாய முடியும். இது, ஏவுகனைகளுக்கே டஃப் கொடுக்கும் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. பறக்கும் காரின் ஒட்டுமொத்த எடை 950 கிலோ ஆகும். இன்னும் சில மாதங்களில் பறக்கும் கார்களுக்கான போட்டி நடைபெற இருக்கின்றது.

அதில் கட்டாயம் இந்த ரேஸ் கார் கலந்துக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வரலாற்று சாதனையை ஏற்படுத்த இருக்கின்றது. அதில், கலந்துக் கொண்டு ஏர் ஸ்பீடர் எம்கே4 தரமான சம்பவங்களை நிகழ்த்த இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
