டைட்டானிக் போல அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது! தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

பிரபல ரசாயன உற்பத்தி நிறுவனமான யாரா (Yara International) மிக விரைவில் தன்னாட்சி வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் சரக்கு கப்பலை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

நார்வே நாட்டை மையமாகக் கொண்டு ரசாயன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம், யாரா இன்டர்நேஷனல் (Yara International). இந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தியாக நைட்ரஜன் ஃபெர்டிலைசர் (nitrogen fertilizer) இருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல கெமிக்கல்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

இந்த நிலையிலேயே அனைத்து கெமிக்கல் தயாரிப்புகளையும் ஏற்றுமதி செய்வதற்காக விரைவில் மின்சாரத்தால் இயங்கும் கப்பலைப் பயன்படுத்த இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான கப்பல் ஏற்கனவே தயாராகிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. அந்த கப்பலையே யாரா தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

யாரா பர்க்லேண்ட் (Yara Birkeland) என அக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஓர் மின்சார கப்பல் மட்டுமல்ல, தானாக இயங்கும் திறன் கொண்ட தன்னாட்சி கப்பலும்கூட. சுமார் 80 மீட்டர் நீளத்தில் இந்த கன்டெய்னர் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் மின்சாரத்தால் இயங்கும் தன்னாட்சி கப்பல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

இக்கப்பலை நார்வே நாட்டைச் சேர்ந்த வார்ட் (Vard) நிறுவனமே யாரா நிறுவனத்திற்காக பிரத்யேகமாக வடிவமைத்திருக்குகின்றது. இதற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் சென்சார் போன்ற தொழில்நுட்ப கருவிகளை காங்க்ஸ்பெர்க் எனும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. உலகின் முன்னணி கப்பல் உற்பத்தி நிறுவனங்களில் வார்ட்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

யாரா நிறுவனம் தற்போது லாரிகள் மற்றும் ட்ரக்குகள் ஆகியவற்றின் வாயிலாகவே தனது பெருமளவிலான ரசாயன ஏற்றுமதியை செய்து வருகின்றது. இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே கப்பலை பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

அதிகளவில் லாரிகள், ட்ரக்குகள் பயன்படுத்தப்படுவதால், அதிகளவில் கார்பன் வெளியேறி அவை காற்றை கடுமையாக மாசுப்படுத்தும் நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டே தங்களின் நிறுவனம் இந்த மின்சார கப்பல் பயன்பாட்டிற்கு மாறுவதாக யாரா தெரிவித்திருக்கின்றது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

இதன் வாயிலாக ஆண்டிற்கு ஆயிரம் டன் கார்பன் வெளியேற்றத்தைத் தவிர்க்க முடியும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது. இது 40 ஆயிரம் டீசல் லாரிகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு சமம் ஆகும். உலகமே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

டைட்டானிக் மாதிரி அவ்வளவு சீக்கிரம் விபத்துல சிக்கிடாது... தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல்!

இதில் பங்கு கொள்ளும் விதமாகவே யாரா தற்போது செயல்படத் தொடங்கியிருக்கின்றது. இந்த கப்பல் தன்னாட்சி வசதிக் கொண்டது என்பதால் மனிதர்களின் உதவியின்றி அது இயங்கும். ஜிபிஎஸ் வழி காட்டுதலின்படி ஸ்டியரிங் தானாகவே இயங்கி உரிய இடத்திற்கு கப்பல் சென்று சேரும்.

தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார கப்பல்... 100 டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு இணையான பேட்டரி பேக்குடன் வெளியீடு!

தற்போதைய நிலவரப்படி ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் மட்டுமே தங்களின் புகழ்பெற்ற கார் மாடல்களில் தான்னாட்சி வசதியை வழங்குகின்றன. ஆகையால், உலகின் முதல் தன்னாட்சி கப்பலாகா யாரா பர்க்லேண்ட் பார்க்கப்படுகின்றது. இந்த கப்பல் யாராவின் போர்ஸ்க்ரன்-இல் உள்ள ரசாயன ஆலையில் இருந்து கெமிக்கலை ஏற்றிக் கொண்டு 14 கிமீ இடைவெளியில் இருக்கும் ப்ரெவிக் பகுதியில் டெலிவரி கொடுக்கும்.

தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார கப்பல்... 100 டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு இணையான பேட்டரி பேக்குடன் வெளியீடு!

இந்த பணியை அடுத்த ஆண்டில் மின்சார கன்டெய்னர் கப்பல் தொடங்கும் என யாரா தெரிவித்திருக்கின்றது. வாரத்திற்கு இரண்டு முறை கப்பல் அதன் பயணத்தை மேற்கொள்ளும். அதன் பயணத்தின்போது கடலில் இருக்கும் தடைகளைத் தானாக கண்டறிந்து, திசையை மாற்றி அது பயணிக்கும். மனிதன் செயல்படுவதை விட அதிக துள்ளியமாக இதன் செயல்பாடு இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தன்னாட்சி வசதி கொண்ட உலகின் முதல் மின்சார கப்பல்... 100 டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு இணையான பேட்டரி பேக்குடன் வெளியீடு!

மேலும், நீண்ட தூர பயணத்திற்காக மிக பெரிய பேட்டரி பேக் கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த பேட்டரி பேக் 100 டெஸ்லா மின்சார கார்களுக்கு சமம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பேட்டரிகளுக்கு என பிரத்யேகமாக 8 அறைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆகையால், ரேஞ்ஜும் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த துள்ளியமான தகவல் வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2022, 14:00 [IST]
English summary
World s first fully electric and self steering container ship yara birkeland
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+