தண்டவாளங்கள் இல்லாமல் வெள்ளை கோடுகளை பின்பற்றி இயங்கும் சீனாவின் ’ஸ்மார்ட் ரயில்’!

இந்த ரயில் ஓட தண்டவாளங்கள் தேவையில்லை கோடுகளே போதும். அதுதான் ஸ்மார்ட் ரயில்.

இந்தியாவில் புல்லட் ரயில் கட்டுமான பணி அறிவிக்கப்பட்டு அப்படியே இருக்க, சீனாவில் தண்டவாளங்கள் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை சோதனை ஜோராக நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

வாகனங்கள் பயணிக்கும் சாலைகள் வழியாகவே வரையப்பட்ட வெள்ளை கோடுகளை பின்பற்றி இயங்கும்உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

சீனாவின் ஜூஜோ நகரில் பொதுமக்கள் முன்பு சோதனை செய்யப்பட்ட போது, ஸ்மார்ட் ரயிலிற்கு மிகப்பெரிய கரகோஷம் அவர்கள் மத்தியில் எழுந்தது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

300 பேர் வரை பயணிக்கும் அளவுக்கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மணிக்கு 70கி.மீ அல்லது 43 கி.மீ வேகத்தில் இயங்கும்.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

ஸ்மார்ட் ரயில் என்று குறிப்பிட்டாலும், இந்த தொழில்நுட்பத்தை சீனா ’வேகமான தானியங்கி ரயில் சேவை’ என்று தெரிவிக்கிறது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

உலகின் பெரிய ரயில் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் சிஆர்ஆர்சி கார்ப்பரேஷன் இந்த ஸ்மார்ட் ரயில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

பெரிய நீளமான பேருந்து மற்றும் பழைய டிராம் போக்குவரத்து ஊர்திகளுக்கு இடையிலான அளவுடன், இந்த ஸ்மார்ட் ரயில் தயாராகியுள்ளது.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

12.3 அடி நீளம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், சாலையில் வரையப்பட்டவரிசையான வெள்ளை நிற கோடுகளை பின்பற்றி இயங்கும். அந்த வெள்ளை கோடுகள் ஸ்மார்ட் ரயிலிற்கான மெய்நிகர் (வெர்ச்சுவல்) தண்டவாளங்களாக இயங்கும்.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

இதுப்பற்றி பேசிய ஸ்மார்ட் ரயில் கட்டுமானங்களுக்கான தலைமை பொறியாளர் ஃபெங் ஜியானிங்குவா, சாதரண ரயில் டிராம்களுக்கான தண்டவாளங்களை விட இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் மிகவும் செலவு குறைவு என்று கூறுகிறார்.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

சீனாவை பொறுத்தவரை டிராம்களுக்காக ஒரு கி.மீ நீளத்தில் தண்டவாளங்கள் அமைக்க சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

ஆனால் வெறும் 11.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு சீனாவின் ஜூஜோ நகரில் ஸ்மார்ட் ரயிலிற்கான மெய்நிகர் கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

பயணங்களுக்கான தகவல்களை சென்சார்கள் கொண்டு திரட்டி, செல்லக்கூடிய வழிகளை தானாகவே அறிந்து செயல்படுமாம் இந்த ஸ்மார்ட் ரயில்கள்.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

ஜூஜோ நகரில் நடைபெற்று வரும் முதற்கட்ட சோதனையின் மூலம் சீன அரசு மகிழ்ச்சி அடையும் முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

இருந்தாலும் அவசர மற்றும் ஆபத்து காலங்களில் ஸ்மார்ட் ரயில்கள் இயங்கும் திறனை பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

அனைத்து விதமான சோதனைகள் முடிக்கப்பெற்று, ஸ்மார்ட் ரயில்கள் சீனாவில் அடுத்தாண்டு வசந்த காலம் முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கவுள்ளன.

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்..!!

ஸ்மார்ட் ரயில் திட்டத்தில் கிடைக்கும் முடிவுகளை வைத்து, எதிர்காலத்தில் புல்லட் உட்பட அனைத்து ரக ரயில் போக்குவரத்துகளையும் ஆளில்லாமல் இயக்க சீனா அரசு திட்டமிட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2017, 12:38 [IST]
English summary
Read in Tamil: World's First Smart Railway Trail Runs in Hunan Province Zhuzhou City China. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+