வங்கி ஏடிஎம் போன்று கார்களை டெலிவிரி வழங்கும் தானியங்கி எந்திரம் அறிமுகம்!

By Ravichandran

தானியங்கி முறையில் கார்களை டெலிவிரி தரும், உலகின் முதல் கார் வெண்டிங் மிஷின் அமெரிக்காவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

கூல் டிரிங்க்ஸ் வெண்டிங் மிஷின்கள், டிக்கெட் வெண்டிங் மிஷின்கள், பணம் எடுக்கும் இயந்திரமான ஏடிஎம் உள்ளிட்டவற்றை நமது அன்றாட வாழ்வில், பயன்படுத்தி வருகிறோம். ஆனால், முதல்முறையாக அமெரிக்கர்களுக்கு ஓர் புதுமையான முறையில் எளிதாகவும், விரைவாகவும் எந்திரத்தின் உதவியுடன் கார் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த அதிர்ஷ்டக்காரர்கள்..

அந்த அதிர்ஷ்டக்காரர்கள்..

அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் உள்ள டென்னஸி என்னும் இடம் நாட்டுபுற இசை உள்ளிட்டவற்றுகாக புகழ் வாய்ந்ததாக இருந்தது. அங்கு தான் உலகின் முதல் கார் வெண்டிங் மிஷின் நிறுவபட்டுள்ளது.

அடுக்குமாடி ஷோரூம்

அடுக்குமாடி ஷோரூம்

இது ஆன்லைன் கார் விற்பனை நிறுனமான "கார்வானா" என்னும் நிறுவனத்தால் உருவாக்கபட்டுள்ளது. இந்த "கார்வானா" கார் ஷோரூம் கண்ணாடியால் ஆன அடுக்குமாடி கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

விரைவான டெலிவிரி

விரைவான டெலிவிரி

"கார்வானா" கார் வெண்டிங் மிஷினில், ஒரே நேரத்தில் 3 கார்களை டெலிவரி வழங்குவதற்கான வழிகள் உள்ளன.

டோக்கன்...

டோக்கன்...

பிடித்த காரின் மதிப்புக்கு ஏற்ற கட்டணம் செலுத்திய பின், டோக்கன் ஒன்று வழங்கபடுகிறது. அந்த டோக்கனை, "கார்வானா" கார் வெண்டிங் மிஷினில் செலுத்தினால், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த கார், சரியான முறையில் டெலிவரி செய்யபடுகிறது. வெறும் 20 நிமிடங்களில் காரை டெலிவிரி பெற்று விடலாம்.

சிறப்புச் சலுகைகள்

சிறப்புச் சலுகைகள்

டென்னிஸி நகரை தவிர்த்து, வெளியூர்களிலிருந்து காரை டெலிவிரி பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு விமானக் கட்டணத்தில் 200 டாலர்களை தள்ளுபடியாக பெறும் சலுகையையும், விமான நிலையத்திலிருந்து, கார் டெலிவிரி பெறுவதற்கான இடத்திற்கு வருவதற்கான போக்குவரத்து செலவீனத்தையும் கார்வானா நிறுவனமே ஏற்கிறது.

கனவு நனவாகும் நாள்...

கனவு நனவாகும் நாள்...

வங்கி ஏடிஎம் எந்திரங்கள் போன்று, வருங்காலத்தில், உலகம் முழுவதிலும் கூட இத்தகைய கார் வெண்டிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

கார்களை டெலிவிரி வழங்கும் வீடியோ

"கார்வானா" கார் வெண்டிங் மிஷின், தானியங்கி முறையில் கார்களை டெலிவிரி தரும் வீடியோ, உங்கள் பார்வைக்கு வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்

இதர தொடர்புடைய செய்திகள்

  • ஃபோக்ஸ்வேகன் கார் பார்க்கிங் டவர்...
    • உலகின் பெரிய ஆட்டோமேட்டிக் கார் பார்க்கிங் டவர்

More from DriveSpark

Article Published On: Saturday, November 14, 2015, 13:57 [IST]
English summary
World's First Vending Machine For Cars is opened in Nashville in US. The Carvana showroom features a five-story tall glass building acting as vending machine for cars. The glass vending machine can hold 20 cars and has 3 delivery bays.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+