ராக்கெட்டை விண்ணுக்கு ஏந்தி செல்லும் திறன் படைத்த உலகின் முதல் பிரம்மாண்ட விமானம் அறிமுகம்..!!

Written By:

விண்வெளிக்கு சென்று ராக்கெட்டை செலுத்தும் அளவிற்கு திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானத்தை ஸ்ட்ராடோலாஞ்ச் என்று நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஏலன் சுமார் 6 ஆண்டுகளாக கடினமாக உழைத்து தற்போது இந்த விமானத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

வட அமெரிக்காவின் மோஜவா பாலைவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், பொதுமக்கள் பார்வைக்காக முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

ஸ்ட்ராடோலாஞ்ச் ஏர்கிராஃப்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகள் மட்டும் சுமார் 385 அடி நீளம் கொண்டது. ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை விட பெரியது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

இந்த விமானத்தின் மொத்த எடை 2,26,000 கிலோ கிராம். இதனால் சுமார் 2,49,476 கிலோ கிராம் வரை எடையை தூக்கி பறந்து செல்ல முடியும்.

மொத்தமாக 103,357 சதுர அடி கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஸ்ட்ராடோலாஞ்ச் விமானத்தில் 747 போயிங் ரக எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் லேண்டிங்கிற்கு ஏற்றவாறு 28 சக்கரங்கள் ஸ்ட்ராடோலாஞ்ச் விமானத்தின் உள்ளன.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

பல கஸ்டமைஸ் வசதிகளுடன் 4 ஆண்டுகளாக பல பொறியாளர்களின் ஆக்கத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம் முற்றிலும் மோஜாவே பாலைவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

இந்த விமானத்திற்கான தயாரிப்பு பணிகள் நிறைவுப்பெற்று விட்டாலும் எஞ்சின், எஞ்சின் ஓட்டம் மற்றும் எரிவாயூ சோதனைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படவுள்ளன.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

ஸ்ட்ராடோலாஞ்ச் விமானத்திற்கான வடிவமைப்பு, சோதனைகள் ஆகியவை முடிக்கப்பட்டு வரும் 2019ம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

வான் ஊர்திகள் மற்றும் அதற்கு தேவைப்படக்கூடிய கட்டமைப்புகளை தயாரிக்கும் நோக்கில் மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனரான பால் ஜி. ஏலன் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஸ்டார்டோலாஞ்ச் நிறுவனத்தை தொடங்கினார்.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

ராகெட்டுகள் பூமியில் இருந்து ஏவப்படுவதால், அதற்கு அதிக எரிவாயு செலவு ஏற்படுகிறது. அதை தடுக்கவே தற்போது இதுபோன்று பயன்படக்கூடிய விமானங்களை தயாரிக்க ஸ்டார்டோலாஞ்ச் நிறுவனம் போன்று பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

ஸ்டார்டோலாஞ்சிற்கு அடுத்தப்படியாக ’வெர்ஜின் ஆர்பிட்’ என்ற நிறுவனம் 35,000 அடியில் விண்வெளிக்கு ராகெட்டுகளை ஏந்தி செல்லும் விமானங்களை தயாரித்து வருகிறது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

ஸ்டார்டோலாஞ்ச் விமானம் போலவே மற்றோரு கஸ்டமைஸ் தேவைகளை கருதி ஒரு விமானத்தை பால் ஏலன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவும் ராகெட்டுகளை ஏந்தி செல்லும் திறனுடனே தயாரிக்கப்பட்டு வருகிறது.

ராகெட்டை சுமந்து விண்ணில் செலுத்தும் விமானம் அறிமுகமானது!

வானில் பறப்பதற்கு முன்னரே, ஸ்டார்டோலாஞ்ச் விமானத்திற்கு முதல் கஸ்டமர் கிடைத்துவிட்டார். ’ஆர்பிட்டல் ஏ.டி.கே’ என்ற நிறுவனத்தின் ராகெட்டை 2019ம் ஆண்டில் ஸ்டார்டோலாஞ்ச் விமானம் விண்வெளிக்கு ஏந்தி செல்ல ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's Largest Aircraft is designed to carry rockets into the the stratosphere, has rolled out after four years of Construction at Mojave Desert. Click for Details...
Story first published: Thursday, June 1, 2017, 11:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark