வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வந்திடும்!

உலகின் மிக நீளமான விமானம் அதன் இரண்டாம் கட்ட சோதனயில் வெற்றிகரமாக பறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் ரோக் (Stratolaunch Roc) அதன் இரண்டாம் கட்ட சோதனையை வெற்றி கரமாக முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 385 அடி நீளத்தில் இறக்கை, ஆறு போயிங் எஞ்ஜின்கள் மற்றும் டபுள் டெக்கர் பேருந்தை போல் இரட்டை ஜெட் (இரு விமான அமைப்பு) என பிரமாண்ட உருவத்தை இவ்விமானம் கொண்டிருக்கின்றது.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

இந்த விமானம் போர் வீரர்களை ஏற்றி செல்லும் வானூர்தி அல்ல என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏவுகனைகள் மற்றும் ஹைபர் சோனிக் வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விமானமே இந்த ஸ்ட்ரேடுலான்ச் ரோக். தெளிவாகக் கூற வேண்டுமானால் இது ஓர் கேரியர் வாகனம் ஆகும்.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

இந்த விமானமே தனது இரண்டாம் கட்ட சோதனையில் வெற்றி கரமாக 14 ஆயிரம் அடி வரை பறந்திருக்கின்றது. மேலும் 3.14 மணி நேரம் தொடர்ச்சியாக அவ்விமானம் பறந்ததாகவும் கூறப்படுகின்றது. தென்கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ள பாலை வன பகுதியிலே இவ்விமான சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

சோதனையின்போது ரோக் விமானம் மணிக்கு 320 கிமீ எனும் வேகத்தில் பறந்திருக்கின்றது. இது பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்திருக்கின்றது. இந்த வெற்றி கரமான சோதனையை அடுத்து விமானம் மிக விரைவில் சேட்டிலைட்களை அனுப்ப தயாராகிவிடும் என தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

கடந்த 2011ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலனால் தொடங்கப்பட்டதே ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது இரண்டாம் கட்ட சோதனையில் வெற்றிகரமாக பறந்திருக்கும் உலகின் பிரமாண்ட ரோக் விமானத்தை உருவாக்கிய நிறுவனம் ஆகும்.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

கடந்த 1941ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் தொழிலதிபர் ஹோவர்ட் ஹ்யூக்ஸ் என்பவரை சுமார் 700 வீரர்கள் பயணிக்கும் அளவிற்கு பிரமாண்ட விமானத்தை உருவாக்க பணியமர்த்தியது. இவர், ஸ்ப்ரூஸ் கூஸ் எனும் விமானத்தை 97.5 மீட்டர் அளவு கொண்ட றெக்கையுள்ள விமானத்தை உருவாக்கினார்.

வெற்றிகரமாக வானில் பறந்த உலகின் மிக பெரிய விமானம்... இதோட இறக்கை எத்தனை அடி நீளம் தெரிஞ்சா மயக்கமே வரும்

இதற்கு பின்னர் உலகின் அதிக நீளம் இறக்கைக் கொண்ட விமானமாக ஸ்ட்ராடோலான்ச் ரோக் உருவாகியுள்ளது. எனவேதான் இதன் பரிசோதனையோட்டம் உலக நாடுகள் பலவற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக, விமானம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's Largest Airplane Stratolaunch Roc Successfully Completes Second Test. Read In Tamil.
Story first published: Wednesday, May 5, 2021, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X