துருக்கியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய ஆட்டோமால்
உலகின் மிகப்பெரிய ஆட்டோமால் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆட்டோபியா ஈரோப்பியா என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும் இந்த ஆட்டோமால் கார் வாங்குவோருக்கு ஏதுவான வசதிகளை ஒரே குடையின் கீழ் வழங்கும் வகையில் கட்டப்படுகிறது.
2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டதாக, 5 தளங்களுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த ஆட்டோமாலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கூடுதல் விபரங்கள் மற்றும் மாதிரி படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே குடையின் கீழ்
இந்த ஆட்டோமாலில் புதிய மற்றும் பழைய கார்களுக்கான 200 கார் ஷோரூம்கள் அமைக்கப்படுகிறது. 400 கார் பிராண்டுகளின் கார்களை இங்கே வாங்க முடியும். ஒரே நேரத்தில் 2,400 புதிய மற்றும் பழைய கார்களை இங்கே வைக்க முடியும்.

இதர சேவைகள்
இந்த வளாகத்தில் 56 உணவகங்களும், 24 வங்கிகளும், 42 இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களின் அலுவலங்களும் இயங்க உள்ளன.

கார் சர்வீஸ் வசதி
இந்த ஆட்டோமாலில் 48 கார் பராமரிப்பு பணிமனைகள் அமைக்கப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் டிராக்
கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் காரை ஓட்டிப் பார்ப்பதற்கு ஏதுவாக இந்த பிரம்மாண்ட ஆட்டோமாலின் மேல் தளத்தில் டெஸ்ட் டிரைவ் டிராக் அமைக்கப்படுகிறது.

பார்வையாளர்கள்
ஆண்டுக்கு 6 மில்லியன் பார்வையாளர்கள் இந்த ஆட்டோமாலுக்கு வருகை தருவர் என எதிர்பார்ப்புடன் கட்டப்படுகிறது.

ஒரே குடையின் கீழ்
இந்த ஆட்டோமாலில் ஒரே நேரத்தில் 900 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட கார் நிறுத்தும் வளாகமும் கட்டப்படுகிறது.

ஒரே குடையின் கீழ்
நியூயார்க்கை தலைமயிடமாக கொண்ட குளோபல் ஆர்க்கிடெக்சுரல் டெவலப்மென்ட்(ஜிஏடி)நிறுவனம் இந்த வாகன விற்பனை வளாகத்தை கட்டி வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப்பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்

உலகின் மிகப் பெரிய ஆட்டோமால்



Click it and Unblock the Notifications








