2014 கின்னஸ் சாதனை பதிப்பில் இடம்பெற்ற பெரிய பைக், சிறிய கார்
2014ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தக பதிப்பில் ஆயிரக்கணக்கான புதிய சாதனைகள் இடம் பிடித்துள்ளன. அதில், சுவாரஸ்யமான பல சாதனைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் சார்ந்த இரண்டு முக்கிய சாதனைகள் பற்றிய செய்திதான் இது. கின்னஸ் புத்தகத்தில் புதிதாக இடம் பிடித்துள்ள சாலையில் செல்லத்தக்க உலகின் மிகச்சிறிய கார் மற்றும் பெரிய பைக் ஆகியவற்றை படங்களுடன் தகவல்களையும் சேர்த்து ஸ்லைடரில் காணலாம்.

குரூஸர்
கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு பெரிதாக மாற்றி ஒரு குரூஸர் பைக்கை வடிவமைத்துள்ளனர். இதில், பெரிதாக தெரியும் ஹேண்டில்பார் வெறும் டம்மிதான். ஓட்டுவதற்கு சிறிய அளவிலான கைப்பிடிகள் தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்
ரோடு ரோலர் போந்று மெதுவாக நகர்ந்து செல்லும் இந்த பைக்கின் எடையை சமாளித்து இழுப்பதற்காக 280 எச்பி ஆற்றலை வழங்கும் 5.7 லிட்டர் வி8 எஞ்சினை பொருத்தியுள்ளனர். முன்புறம் செல்வதற்கு 3 கியர்களும், ரிவர்ஸ் கியரும் உண்டு.

நாலு கால் பைக்
இந்த மோட்டார்சைக்கிளில் 2 மெகா சைஸ் சக்கரங்கள் தவிர, பக்கவாட்டில் தாங்கி பிடிப்பதற்கு ஏதுவாக 2 சிறிய துணை சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தாலி டிசைனர்
கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த பைக்கை இத்தாலிய டிசைனர் ஃபேபியோ ரெஜியானி வடிவமைத்துள்ளார்.

வடிவம்
16 அடி நீளம் கொண்ட இந்த பைக் அரை டன் எடை கொண்டது.

அமெரிக்க டிசைனர்
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கார் கஸ்டமைஸ் நிபுணரான ஆஸ்டின் கல்சன் என்பவர் டிசைன் செய்த கார் இது.

வடிவம்
இந்த கார் 2 அடி நீளம், 1.75 அடி அகலம், 25 இஞ்ச் உயரம் கொண்டது.

அனுமதி
சாலையில் செல்லத்தக்க சட்ட ரீதியிலான காராக இருக்கும் வகையில், சீட் பெல்ட், இன்டிகேட்டர் விளக்குகள், ஹாரன், வைன்ட்ஷீல்டு என சாதாரண கார்களை போன்ற பல்வேறு பாதுகாப்பு விதிகளுக்கான அம்சங்களுடன் இந்த காரை உருவாக்கியுள்ளார் கல்சன்.

கின்னஸ் வெறி
எனக்கு தெரிந்த ஆட்டோமொபைல் துறையில் ஏதாவது புதிதாக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அந்த வேட்கையில் உருவானதுதான் இந்த கார் என்று கூறியுள்ளார் கல்சன்.


Click it and Unblock the Notifications








