ஊழல் வழக்கில் கைதான சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலாலின் பிரமிக்க வைக்கும் மோட்டார் உலகம்!

Written By:

உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் கராஜிற்கு உரிமையாளராக சவூதி பட்டத்து இளவரசர் அல் வாலீத் பின் தலால் கருதப்படுகிறார். இந்த நிலையில், அவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

கலியுக கர்ணன் என்று போற்றும் அளவுக்கு தனது லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அறக்கட்டளை மூலமாக சமூக நலப் பணிகளுக்கு செலவிட உள்ளதாக அறிவித்த அவரே ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவல் மற்றொரு புறம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. அவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பது அவர் பயன்படுத்தும் கார்கள், விமானம் மூலமாக உணர்ந்து கொள்ள முடியும். அவரிடம் பல நூறு கார்கள், உலகின் காஸ்ட்லியான தனி நபர் விமானங்கள் உள்ளன. ஆனால், பணத்தாசை விட்ட குறையாக தொடர்ந்துள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலாலிடம் போயிங் 747 விமானம் உள்ளது. இந்த விமானம் ஏராளமான விசேஷ வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டது. இந்த விமானத்தில் அரண்மனையில் உள்ள மன்னர் நாற்காலி போன்ற அமைப்புடன் காண்டது.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

உட்புறம் முழுவதும் தங்க வண்ண பாகங்கள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக உயர்தர இருக்கைகள், படுக்கை வசதி, சாப்பாட்டு அறை உள்ளிட்டவையும் இந்த விமானத்தில் உண்டு.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

இந்த விமானத்தின் சாப்பாட்டு அறையிலுள்ள மேஜை, நாற்காலிகள் 7 நட்சத்திர ஓட்டலை விட மிகவும் சிறப்பானதாக இருக்கின்றன. அந்தளவுக்கு உட்புறத்தில் நகாசு வேலைகளுடன் பாகங்கள் இழைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

கடந்த 2007ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380 இரண்டடுக்கு விமானத்தை தனி நபர் விமானமாக மாற்றித் தருவதற்கு முன்பதிவு செய்தார். பறக்கும் அரண்மனையாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு வந்த அந்த விமானத்தை, திடீரென வேறு ஒரு பில்லியனரிடம் விற்பனை செய்துவிட்டார்.

இதர சுவாரஸ்யச் செய்திகள்:

துபாயில் விற்பனையான உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லம்!

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

உலகின் அதிக விலை மதிப்பு கொண்ட கார் கராஜ்கள்!

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலால் விருப்பங்களுக்கு ஏற்ப அந்த இரண்டடுக்கு விமானம் கஸ்டமைஸ் செய்யப்பட்டு வந்தது. அரண்மனைக்கு இணையான உட்புறத்துடன் கட்டப்பட்ட இந்த விமானத்தில், 2 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 4 குதிரைகளை நிறுத்தும் இடவசதி கொண்டது.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

அந்த விமானத்தின் இறுதிக்கட்ட கஸ்டமைஸ் பணிகள் நடந்து வந்த போது அந்த விமானத்தை அவர் திடீரென விற்பனை செய்தார். உரிமையாளர் பெயரை தெரிவிக்காமல், அந்த விமானத்தை புதிய பில்லியனர் ஒருவரிடம் விற்று விட்டார். அந்த விமானத்தின் மதிப்பு ரூ.2,200 கோடியாக தெரிவிக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

அல் வாலீத் வசம் 5கேஆர் என்ற உல்லாச படகும் உண்டு. 1980ல் கட்டப்பட்ட அந்த படகில் சினிமா தியேட்டர், ஹெலிகாப்டர் இறங்கு தளம், படுக்கை வசதிகள் போன்றவை உண்டு. உலகின் மிகப்பெரிய உல்லாச படகு என்ற பெருமையும் அதற்கு உண்டு. அடுத்து 500 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய உல்லாச படகு ஒன்றையும் முன்பதிவு செய்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

உலகிலுள்ள பெரும் பணக்காரர்கள் அனைவரிடம் விலை உயர்ந்த கார், பைக்குகள், விமானங்கள், படகுகள் இருப்பது வியப்பல்ல. ஆனால், சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலால் பிறரிடமிருந்து ஒவ்வொன்றும் வித்தியாசப்படும் வகையில் என்று விரும்புபவர்.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

அதன்படியே, அவரிடம் வைர கற்கள் பதிக்கப்பட்ட டுகாட்டி பைக் மாடல் ஒன்றும் உண்டு. இந்த பைக் 4.8 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. அதேநேரத்தில், வைர கற்கள் பென்ஸ் கார் இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்தது நினைவிருக்கலாம்.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

சவூதியில் பெண்களுக்கு கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில், அந்நாட்டு இளவரசரான அல் வாலீத் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருபவர். அண்மையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

ஊழல் வழக்கில் சிக்கிய சவூதி இளவரசர் அல் வாலீத் மோட்டார் உலகம்!

அந்தளவு பொருளாதாரத்தில் திறன் வாய்ந்தவர் ஊழல் புகாரில் சிக்கி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து நிறுவனங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் படத் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
world's most expensive car garage owner arrested against corruption charges.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark