ஒருவருக்கான படுக்கை வசதியுடன் உலகின் சிறிய மினி கேம்பர் வேன்!
ஒருவருக்கான படுக்கை வசதி கொண்ட உலகின் மிகச்சிறிய கேம்பர் வேனை மினி பிராண்டு அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளப்வேன் வேனின் அடிப்படையிலான இந்த கேம்பர் வேனில் போதுமான வசதிகளை அடக்கியுள்ளனர்.
வார இறுதியில் ஒருவர் பயணம் செல்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மினி வேனில் அடக்கப்பட்டிருக்கும் வசதிகளை ஸ்லைடரில் காணலாம்.

சொகுசு வசதிகள்
வெளியிடங்களுக்கு காரில் செல்லும்போது தங்குவதற்கான அனைத்து வசதிகளும் இந்த கேம்பர் வேனில் செய்யப்பட்டுள்ளன.

படுக்கை வசதி
டிரைவர் இருக்கை மட்டுமே கொண்ட இந்த காரில் ஒருவர் மட்டும் தூங்குவதற்கான படுக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சமையல் வசதி
சிறிய அடுப்பபு மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

சமையல் செய்யும் வசதி
அடுப்பு அமைக்கப்பட்டிருக்கும் பகுதியை வெளியே இழுத்து வெளியே நின்று கொண்டு சமையல் செய்யலாம்.

குளியல் வசதி
குளிப்பதற்கு வசதியாக ஷவர் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவி திரை
பொழுதுபோக்கு சாதனமாக டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் டிவி திரை பொருத்தப்பட்டுள்ளது.

கண்ணாடி கூரை
இந்த கேம்பரில் ஹீட்டர், கண்ணாடி கூரை பொருத்தப்பட்டுள்ளன.

குடை
இந்த காரில் மடக்கி விரிக்கும் வசதி கொண்ட நாற்காலி மற்றும் குடை ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் வைக்க வசதி
படுக்கையின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் கூடுதல் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

கான்செப்ட்
இது கான்செப்ட் மாடலாக மட்டுமே மினி அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு உங்கள் காரில் சில கூடுதல் வசதிகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications