கண்களுக்கு அறுசுவை விருந்து படைக்கும் உலகின் அழகிய விமான ஓடுதள அமைவிடங்கள்!

Written By:

கோடிகளை கொட்டி இப்போது விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பயணிகளை கவர்வதற்காக சொர்க்க லோகம் போன்ற வடிவமைப்பு, பொழுதுபோக்கு வசதிகள், ஷாப்பிங் வளாகங்களுடன் இப்போது பல விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 

ஆனால், சில விமான நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதி இயற்கையாகவே மிகச்சிறப்பான அமைவிடத்துடன் பயணிகளை கவர்ந்து வருகிறது. இவை விமானம் தரையிங்கும்போது அதில் பயணிப்பவர்களுக்கு சொர்க்கததை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. 

அதுபோன்று, மிக அழகிய சுற்றுவட்டாரப்பகுதிகளை கொண்டிருக்கும் விமான ஓடுபாதை அமைந்திருக்கும் பகுதிகளை privatefly.com என்ற விமான டிக்கெட் புக்கிங் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் டாப் 10 இடங்களை பிடித்த விமான நிலையங்களை பட்டியலில் காணலாம்.

 10. லண்டன் சிட்டி ஏர்போர்ட், இங்கிலாந்து

10. லண்டன் சிட்டி ஏர்போர்ட், இங்கிலாந்து

லண்டன் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த விமான ஓடுபாதையில் விமானங்கள் இறங்கும்போது பயணிகள் தேம்ஸ் நதியின் அழகையும், லண்டன் மாநகரை கழுகு பார்வை மூலமாக காணும் பாக்கியத்தையும் பெற முடியும். லண்டன் பாராளுமன்றம் மற்றும் பிக் பென் மணிக்கூண்டையும் காண முடியும்.

09. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

09. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

இரவு நேரத்தில் மின்னொளியில் மிதக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அழகை காண்பதற்கு காண கண் கோடி வேண்டும். அதனை இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானப் பயணிகள் நிச்சயம் அனுபவிக்க வாய்ப்புண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை LAX என்று குறிப்பிடுகின்றனர். அமரிக்காவின் எண்டெவர் விண்வெளி ஓடம், இங்குதான் கடைசியாக தரையிறங்கியது. அதன் பின் அது காட்சி பொருளாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image Source- Wikicommons

08. பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம், செயிண்ட் மார்ட்டென்

08. பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம், செயிண்ட் மார்ட்டென்

கரிபீயன் தீவுகளில் உள்ள இந்த விமான நிலையம், கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால், இந்த ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவது பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும். அத்துடன், விமானங்கள் மிக தாழ்வாக வந்து இறங்குவதை காண்பதற்காகவே, இந்த ஓடுபாதையை ஒட்டிய கடற்கரையில் ஏராளமானோர் குவிகின்றனர். சில சமயம் விமான எஞ்சினின் சப்தத்தையும், காற்று விசையும் கீழே நிற்பவர்களை சாய்க்கும் அளவுக்கு இருக்கும். அத்துடன் தாழ்வாக பறந்து தரையிறங்கும்.

mage Source - Wikimedia Commons

07. டோனிகல் விமான நிலையம், அயர்லாந்து

07. டோனிகல் விமான நிலையம், அயர்லாந்து

இது கடற்கரையை ஒட்டி, இணையாக அமைந்திருக்கும் ஓடுபாதை. மேலும், பச்சை பசேல் என படர்ந்திருக்கும் புல்வெளிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் ஓடுபாதை இயற்கை அழகை ரசிப்பவர்களை வியக்க வைக்கும். ஒருபுறம் நெடிதுயர்ந்த மலையும், ஒருபுறம் கடற்கரையும் விமான பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.

Image Source

06. பில்லி பிஷப் டொரண்டோ சிட்டி ஏர்போர்ட், கனடா

06. பில்லி பிஷப் டொரண்டோ சிட்டி ஏர்போர்ட், கனடா

கனடா நாட்டின் டொரண்டோ நகரின் ஒன்டோரியோ ஏரிக்கு நடுவே மிக அழகிய பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் விமான நிலையம். இந் விமான நிலையத்தை தண்ணீர் வழி போக்குவரத்து சாதனங்கள் மூலமாகவே அடைய முடியும். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்ப்பது போன்ற தரையும், தண்ணீரும் பின்னி பிணைந்து கிடக்கும் அழகு பார்ப்போரின் மனதை கொள்ளை கொள்ளும்.

Image Source - Wikimedia Commons

05. சாபா ஏர்போர்ட், கரிபீயன் நெதர்லாந்து

05. சாபா ஏர்போர்ட், கரிபீயன் நெதர்லாந்து

மலைகள் சூழ்ந்த கரிபீயன் நெதர்லாந்து தீவுகளில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் பயணிகளுக்கு மட்டுமல்ல, விமானிகளுக்கும் ஒவ்வொரு முறையும் த்ரில்லை வழங்கும். உலகின் மிக குறைவான வர்த்தக விமான ஓடுபாதை கொண்ட விமான நிலையம் இதுதான். இது வெறும் 396 மீட்டர் மட்டுமே ரன் வே கொண்டது. ஓங்கி உயர்ந்த மலை கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Image Source - Wikimedia Commons

04. பாரா ஏர்போர்ட், ஸ்காட்லாந்து

04. பாரா ஏர்போர்ட், ஸ்காட்லாந்து

கடற்கரையிலேயே அமைந்திருக்கும் விமான நிலையம். அலைகள் அதிகம் எழும்பும்போது இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை தண்ணீரில் மூழ்கிவிடும் என்பதால், விமானங்கள் இயக்க முடியாது. ஆனால், இது பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்று அடித்துக் கூறலாம்.

Images Source

03. குயின்ஸ்டவுன் ஏர்போர்ட், நியூசிலாந்து

03. குயின்ஸ்டவுன் ஏர்போர்ட், நியூசிலாந்து

இயற்கை அழகை அள்ளிப் போர்த்திக் கொண்டு கிடக்கும் சொர்க்க பூமியான இடத்தில் அமைந்திருக்கும் விமான நிலையம். ஆறுகள், மலைகள், ஏரிகள் சூழ்ந்த பகுதிக்கு நடுவே பச்சை பசேலே படர்ந்திருக்கும் புல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது இதன் ஓடுபாதை. ஒவ்வொரு முறை இந்த ஓடுபாதையில் தரையிறங்கும்போதும் பயணிகள் தெவிட்டாத இயற்கை அழகை அள்ளி பருகும் வாய்ப்பை பெறுகின்றனர்.

Image Source

02. நைஸ் கோடே டி அஸுர் ஏர்போர்ட், பிரான்ஸ்

02. நைஸ் கோடே டி அஸுர் ஏர்போர்ட், பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம் இது. பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் மட்டுமின்றி, அருகிலுள்ள மொனாக்கோவின் அருகாமையிலுள்ள சர்வதேச விமான நிலையமாகவும் செயல்படுகிறது. கடற்கரையோடு இயைந்து நிற்கும் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓர் புதிய அனுபவத்தை பயணிகள் பெறலாம்.

Image Source - Wikimedia Commons

01. மால்டா ஏர்போர்ட், மால்டா

01. மால்டா ஏர்போர்ட், மால்டா

கடலில் மணல் திட்டுகளுக்கு நடுவில் நெருக்கமாக அமைந்திருக்கும் வீடுகள், அங்குள்ள கோட்டை வழியாக விமானங்கள் தாழ்வாக மால்டா விமான நிலையத்தை நெருங்கும்போது, கண்களுக்கு அறுசுவை விருந்து படைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.

Image Source

உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்

உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Take a look at the Top 10 most scenic airport approaches according to survey conducted by PrivateFly.com, a private jet charter booking site.
Story first published: Friday, April 22, 2016, 14:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark