2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

Written By:

ஜெர்மன் நாஜிப்படையின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். சுமார் 7 கோடி மனித உயிர்களை காவு வாங்கிய இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டவரும் இவரே. அமெரிக்க, ஜப்பானிய, பிரிட்டன் படைகளை எதிர்த்து போரில் இறங்கிய ஹிட்லரின் நாஜிப்படையில் வலிமையான பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கிய, என்ணற்ற போர்த் தளவாடங்களும், வாகனங்களும் இருந்தன. அதில் நாஜிப்படையினரால் பயன்படுத்தப்பட்ட 'Kettenkrad’ எனும் ஆஃப்ரோடிங் மோட்டார்சைக்கிளும் ஒன்று.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

ஜெர்மன் ராணுவத்தால் 'SdKfz 2' என்று அழைக்கப்பட்ட இந்த ராணுவ பயன்பாட்டு வாகனம் பாதி மோட்டார்சைக்கிளாகவும், பாதி ஆஃப் ரோடிங் வாகனமாகவும் விளங்குகிறது. Kettenkrad எனப்படும் இதில் Ketten என்றால் செயின், krad என்றால் மோட்டார்சைக்கிள் என ஜெர்மானிய மொழியில் அர்த்தமாகும். செயினால் இயங்கும் மோட்டார் சைக்கிள் என்பதை Kettenkrad குறிக்கிறது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

பார்ப்பதற்கு பீரங்கி கவச வாகனத்தைப்போல் காட்சியளித்தாலும், அடிப்படையில் அதைப்போன்று தான் இதுவும் இயங்குகிறது. வீல்களுக்கு பதிலாக கவச வாகனத்தில் இருக்கும் சங்கிலியால் இணைக்கப்பட்ட சக்கரங்கள் இதிலும் உள்ளது. எனினும் இதன் முன்புறத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருக்கும் ஹேண்டில்பார் உள்ளது. இதன் மூலமே இந்த வாகனத்தை இயக்க முடியும்.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் ராணுவத்தின் சிறந்த வாகனங்களுள் ஒன்றாக திகழ்ந்த இந்த Kettenkrad மோட்டார்சைக்கிள்கள் 1939ஆம் நாஜிப்படையினருக்காக ஜெர்மானிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது. கடின நிலப்பரப்பிலும் எளிதாகச் செல்லும் திறன் கொண்டதால், போர் முனைப் பகுதிகளுக்கு இலகுவாக எடுத்துச்செல்லப்பட்டு இவை பயன்படுத்தப்பட்டது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

அக்காலத்தில் ஜெர்மானிய விமானப்படையினரால் போர்த் தளவாடங்களை இழுத்துச் செல்லும் (tow) வாகனமாகவும் இவை பயன்படுத்தப்பட்டது. மலைப் பாங்கான இடங்களுக்கு வலிமையான துப்பாக்கிகளை சுமந்து செல்லவும், போர் விமானங்கள் மூலமாக போர் முனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த மோட்டார்சைக்கிள்.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

இரண்டு பேர் அமரும் வகையிலான இந்த மோட்டார்சைக்கிளில் சிறிய ரக துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் போரில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான தளவாடப் பொருட்களை அழித்துவிட்டது நாஜிப்படை. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொற்ப எண்ணிக்கையிலான இதைப்போன்ற வாகனங்கள் உலகில் ஒரு சில மட்டுமே எஞ்சியுள்ளது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

இதில் ஒரு Kettenkrad மோட்டார்சைக்கிளை Bonhams எனப்படும் பிரிட்டிஷ் ஏல நிறுவனம் ஏலத்தில் விட இருக்கிறது. இந்நிறுவனம் அரிய கலைப்பொருட்களை ஏலத்தில் விடும் உலகின் முன்னணி நிறுவனமாகும். தற்போது ஏலத்தில் விடப்பட இருக்கும் Kettenkrad மோட்டார்சைக்கிள் 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகும்.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

Bonhams ஏல நிறுவனத்தினர் Kettenkrad மோட்டார்சைக்கிளை வரும் மார்ச் 19ஆம் தேதி நடக்க இருக்கும் ஏல நிகழ்ச்சியில் ஏலத்தில் விட உள்ளனர். இது 50 லட்ச ரூபாய் முதல் 65 லட்ச ரூபாய் என்ற விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

1939 ஆம் ஆண்டு முதலாக 1948ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட இந்த டேங்க் மோட்டார்சைக்கிள்கள், இரண்டாம் உலகப் போர் காலகட்டமான 1941 முதல் 1945 ஆண்டு வரை ஜெர்னானிய நாஜிப்படையினரால் பயன்படுத்தப்பட்டது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

மூன்று மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும், 1.2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் 1,560 கிலோ எடை கொண்டதாகும். இதில் ஒரு டிரைவர் இருக்கையும், இரண்டு பயணிகள் இருக்கையும் உள்ளது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

Kettenkrad மோட்டார்சைக்கிளில் 4 சிலிண்டர்கள் கொண்ட வாட்டர் கூல்டு 1,478 சிசி ஓபல் ஒலிம்பியா இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 36 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் கார்களில் உபயோகிக்கப்படுவதைப் போன்ற காலால் இயக்கப்படும் 3 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

அக்காலகட்டத்தில் இந்த டேங்க் மோட்டார்சைக்கிள்கள் மொத்தமே 8,000 என்ற எணிக்கையில் தான் தயாரிக்கப்பட்டன். இதில் பெரும்பாலனவை நாஜிப்படையினரால் அழிக்கப்பட்டுவிட்டன. பல உயிர்களை காவு வாங்கிய நாஜிப்படையினருக்கு இந்த மோட்டார்சைக்கிள்கள் பெரும் உதவி புரிந்தன என்பது வேதனைதரக்கூடிய வரலாறு ஆகும்.

2ஆம் உலகப் போர் காலத்திய ஆஃப் ரோடிங் பைக் இதுதான்

அதிகபட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இதுவே இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட வேகமான ஆஃப் ரோடிங் வாகனமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 2017 கேடிஎம் சூப்பர் ட்யூக் 1290 ஆர் பைக்கின் படங்கள்: 

English summary
This former army vehicle once reaped devastation on British troops in the field.
Story first published: Tuesday, March 14, 2017, 13:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark