50 வருசத்துக்கு முன்னாடி நடந்த கார் திருட்டு! இப்ப ரூ 22ஆயிரம் கோடி ஒர்த் என்ன நடந்தது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய கார் திருட்டு எங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கார் திருட்டை ஒரு நாட்டின் அரசாங்கமே செய்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் ஒரு நாட்டின் அரசே மிகப்பெரிய கார் திருட்டை செய்துள்ளது. அதுவும் இப்பொழுதல்ல 1974களிலேயே செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கார் திருட்டு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. என்னதான் கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் திருடர்கள் எப்படியாவது ஹேக் செய்து வாகனங்களை திருடி பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர். இதை தடுக்க கார் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். முன்பை விட தற்போது கார் திருட்டு குறைந்து இருக்கிறது என்றாலும், தொடர்ந்து திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கிறது.

worlds biggest car theft

இப்படியாக உலகில் நடந்த மிகப்பெரிய கார் திருட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா ஒரு நாட்டின் அரசாங்கமே இந்த கார் திருட்டை செய்துள்ளது. இதைப் பற்றி தான் இங்கே காணப்படுகிறோம். இது சமீபத்தில் நடந்த சம்பவம் அல்ல இது 1974-ம் ஆண்டு நடந்த சம்பவமாகும். இந்த திருட்டை செய்வது வடகொரியா நாடு தான். அந்த நாடு ஒரு மிகப்பெரிய கார் நிறுவனத்திடம் இருந்து உலகிலேயே மிகப்பெரிய காத்திருட்டை செய்துள்ளது.

1974-ம் ஆண்டு சுவீடன் அரசும் வடகொரிய அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இயந்திரங்களை சுவீடன் அரசு வடகொரியா அரசுக்கு வழங்க முன் வந்தது. அப்பொழுது வடகொரியாவில் தொழிற்சாலை பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டு மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எல்லாம் வந்த நாட்டில் உருவாக்கப்பட்டன.

worlds biggest car theft

அதற்கு தேவையான இயந்திரங்களை எல்லாம் சுவீடன் அரசு அந்நாட்டிற்கு கடனாக வழங்கி உதவி செய்தது. இந்த இயந்திரங்களுடன் அந்நாட்டு அரசு சுமார் 1000 வால்வோ 144 செடான் கார்களையும் அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த கார்களை அந்நாட்டில் டாக்ஸிகளாக பயன்படுத்த சுவீடன் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த வால்வோ 144 கார்களுக்கான பணத்தை இன்று வரை வடகொரியா அரசு சுவீடன் நாட்டிற்கு திரும்ப செலுத்தவில்லை.

இது நடந்து சுமார் 50 ஆண்டுகளாக உள்ள நிலையில் தற்போது வடகொரியா அரசு இந்த 1000 வால்வோ கார்களுக்கு தற்போது 322 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 22,00 கோடி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

worlds biggest car theft

இன்று வரை சுவீடன் அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை வடகொரிய அரசுக்கு இந்த நிலுவைத் தொகை குறித்த இன்வாய்ஸ் நோட்டீஸை அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு வடகொரியா அரசு எந்தவித பதிலையும் அளிக்காமல் தவிர்த்து வருகிறது. இதனால் இந்த பணம் நிலுவைத் தொகையாக இருக்கிறது.

சுமார் 5 ஆண்டுகளாக 1000 கார்களுக்கு பணம் வரவில்லை என்பதால் இது உலகிலேயே மிகப்பெரிய கார் திருட்டாக பார்க்கப்படுகிறது. இந்த 1000 கார்களுக்கான பணம் தராதது வடகொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை கெடுத்தது. பல ஆண்டுகளாக இந்த இரு நாடுகளும் தற்போது நட்பு உறவில் இல்லாமல் இருக்கிறது. தற்போது சுவீடன் அரசு இந்த தொகையை வடகொரியாவில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையாகவே வைத்துள்ளது.

மேலும் வட கொரியா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஏற்ற நாடு அல்ல, நம்பகத்தன்மையற்ற நாடாக இருக்கிறது. குறிப்பாக பணப்பரிவர்த்தனைகளில் அந்நாடு மிக மோசமாக செயல்படுகிறதாக சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெளியுறவு மிக மோசமான நிலைமையில் சென்றது. தற்போது வரை இரு நாடுகளும் சரியான நட்புறவில் இல்லை.

இந்த 1000 வால்வோ கார்களுக்கான ஆர்டரை வழங்கியவர் தற்போது வடகொரியா நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங் என்பவர் ஆவார். சுவீடன் அரசு இந்த ஆயிரம் கார்களை வால்வோ நிறுவனத்தில் இருந்து வாங்கி திரும்ப அளித்தது.

ஆனால் வடகொரியா அரசு பணத்தை தராததால் சுவீடன் அரசு அந்நாட்டின் கஜானாவில் உள்ள பணத்தை எடுத்து 1000 கார்களை தயாரித்து கொடுத்த வால்வோ நிறுவனத்திற்கு செட்டில் செய்தது. இந்த பணத்தை வடகொரியாவில் இருந்து திரும்பப் பெரும் முயற்சியில் அப்பொழுது தீவிரமாக இறங்கியது.

இதை முதலில் சுவீடன் அரசு ஒரு கார் திருட்டாக பார்க்கவில்லை. பணம் திரும்ப பெறுவதில் ஏதோ காலதாமதம் ஏற்படுகிறது என்றே கருதினர். இதனால் அவர்கள் வடகொரிய அரசிடம் முதலில் இந்த பணத்தை திரும்ப பெற அழுத்தம் கொடுத்து பார்த்தனர். அதன் பின்பு எச்சரிக்கை விடுத்து பார்த்தனர்,

அதன் பின்பு நட்புறவில் விரிசல் ஏற்படுத்தி பார்த்தனர். ஆனால் எதற்கும் செவி சாய்க்காத வடகொரியா அரசு இந்த பணத்தை திருப்பி தர மறுத்து இந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொண்டது. இன்று வரை உலகில் நடந்த மிகப்பெரிய காசிற்காக இந்த சம்பவம் தான் பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வடகொரியா ஒரு சர்வாதிகார தன்மை நிறைந்த நாடாக இருக்கிறது. இந்த நாடு மற்ற உலக நாடுகளுடன் பெரும்பாலும் ஒத்துப் போகாமல் இருப்பதால் இந்த நாடு பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. வெகு சில நாடுகளுடன் மட்டுமே இந்த நாடு நட்பு உறவை பேணி வருகிறது. தற்போது உலக அமைதிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 19:56 [IST]
English summary
Worlds biggest car theft north korea volvo 114
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X