உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல் என்ற பெருமையை சிம்பொனி ஆஃப் தி சீஸ் கப்பல் பெற இருக்கிறது. இந்த கப்பலின் படங்கள், சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

சொகுசு கப்பல் சேவையில் அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரிபீயன் நிறுவனம், மிதக்கும் நகரம் போன்ற உலகின் மிக பிரம்மாண்ட சொகுசு கப்பல்களை சேவைக்கு பயன்படுத்தி வருகிறது. ஆசிஸ் ஆஃப் சீஸ், ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் போன்ற உலகின் மிக பிரம்மாண்ட உல்லாச கப்பல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

அந்த வரிசையில், இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமான புதிய உல்லாச கப்பலை ராயல் கரிபீயன் நிறுவனம் விரைவில் சேவைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் வகையில் இருப்பது குறித்த படங்களை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

மிதக்கும் நகரமாக வர இருக்கும் இந்த புதிய சிம்பொனி ஆஃப் த சீஸ் கப்பல் 16 அடுக்குகளை கொண்டதாக கட்டப்பட்டு இருக்கிறது. 16 கால் பந்து மைதானங்கள் அளவுக்கு இடவசதி கொண்டது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

சிம்பொனி ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலில் 2,774 விருந்தினர்கள் அறைகள் இருக்கும். தற்போது உலகின் மிக பிரம்மாண்டமான உல்லாச கப்பலாக வலம் வரும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலைவிட கூடுதலாக 27 அறைகளை கொண்டது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலில் 5,470 விருந்தினர்கள் தங்கும் இடவசதி கொண்டது. சிம்போனி ஆஃப் தி சீஸ் கப்பலில் 5,500 விருந்தினர்கள் பயணிக்க முடியும்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

இந்த கப்பலில் இருக்கும் ஃபேமிலி சூட் அறை 1,346 சதுர அடி பரப்பளவு கொண்டது. சாதாரணமாக நம் ஊர்களில் கட்டப்படும் 3 பெட்ரூம் வீடுகளுக்கு இணையான இடவசதியை இந்த ஒரு அறை பெற்றிருக்கும். இந்த அறையில் 8 பேர் தங்க முடியும்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

இந்த அறையில் 3டி சினிமா ரூம், பாப்காார்ன் தயாரிப்பு எந்திரம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. 212 சதுர அடி பரப்பளவுக்கான பால்கனியும் உண்டு.

Trending On DriveSpark Tamil:

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

அதேபோன்று, ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பல் 2,26,963 டன் எடை கொண்டதாக இருக்கும் நிலையில், புதிய சிம்பொனி ஆஃப் தி சீஸ் கப்பல் 2,30,000 டன் எடை கொண்டதாக கட்டப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

பொதுவாக இதுபோன்ற கப்பல்களில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுவர். இதனால், க்யூவில் நிற்கும் நிலை இருக்கிறது. இதனை தவிர்ப்பதற்காக, மொபைல் அப்ளிகேஷன் மூலமாக எளிதாக சோதனை செய்யும் முறை இந்த கப்பலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறிய சோதனைக்கு பின்னர், நேரடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு விருந்தினர் நேரடியாக செல்ல முடியும்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

உட்புறத்தில் பிரம்மாண்ட டிவி திரைகள், பொழுதுபோக்கு வசதிகள், ரோபோ எந்திரம் மூலமாக மது வகைகள் பரிமாறும் வசதி என்று மிகச் சிறப்பான வசதிகளையும், அனுபவத்தையும் பெறும் வகையில் இந்த கப்பல் கட்டப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

கப்பலின் தரை தளத்தில் பிரம்மாண்ட பூங்கா, ரெஸ்ட்டாரண்டுகள், சினிமா தியேட்டர்கள் போன்ற உல்லாச கப்பல்களில் இடம்பெறும் பொதுவான வசதிகளும் இந்த கப்பலில் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் சிம்பொனி ஆஃப் தி சீஸ்!

இந்த கப்பல் 1,188 அடி நீளமும், 215 அடி அகலமும், 16 அடுக்குகளை கொண்டதாக கட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள தனது பாசறைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் மியாமி துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் உல்லாச கப்பல்களுக்கான புதிய துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் முதல் பயணத்தை துவங்க இருக்கிறது.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 11:32 [IST]
English summary
world's biggest cruise ship symphony of the seas- first look.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+