உலகின் மிகப்பெரிய 'மிதக்கும் மாளிகை' அறிமுகம் - சிறப்பம்சங்கள்!

Written By:

உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகை அமெரிக்காவை சேர்ந்த 4யாட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

கோடீஸ்வரர்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருங்கே ஈடு செய்யும் விதத்தில், அத்துனை சிறப்பம்சங்களுடன் இந்த பிரம்மாண்ட மிதக்கும் மாளிகையை கட்டி வருவதாக 4யாட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

டிசைனர்

டிசைனர்

ஆடம்பர படகு வடிவமைப்பில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கிறிஸ்டோபர் செய்மர் இந்த ஆடம்பர படகின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 வடிவம்

வடிவம்

டபுள் செஞ்சூரி என பெயரிபட்டப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு 200 மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆடம்பர படகு இரண்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான பரப்பளவை கொண்டிருக்கும். மேலும், 8 அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரத்தை கொண்டிருக்கிறது. அதாவது, தண்ணீர் மட்டத்திலிருந்து 26 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயனின் அஸ்ஸாம் என்ற ஆடம்பர படகுதான் உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகாக இருந்து வருகிறது. இது 180 மீட்டர் நீளம் கொண்டது. இதனை டபுள் செஞ்சூரி விஞ்சும் என தெரிவிக்கப்படுகிறது.

 வசதிகள்

வசதிகள்

7 அடுக்குகள் கொண்டதாக கட்டப்படும் இந்த டபுள் செஞ்சூரி ஆடம்பர படகில், 50 சூட் அறைகள், நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு பூங்கா, ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் நிறுத்துவதற்கான ஆங்கர் ஆகியவை இருக்கும்.

விருந்தினர்கள்

விருந்தினர்கள்

இந்த ஆடம்பர படகில் 126 விருந்தினர்களும், 100 பணியாளர்களும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. மேலும், பணியாளர்கள் மொபைல்போன் அப்ளிகேஷன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பணிகளை செவ்வனே செய்வதற்கான வசதியும் உண்டு.

விலை விபரம்

விலை விபரம்

டபுள் செஞ்சூரி ஆடம்பர படகிற்கு 770 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆர்டர் கொடுத்தால் 4 ஆண்டுகளில் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
It takes vision to design an outstanding superyacht, but it also takes vision to turn that design into reality. That is why 4Yacht has joined forces with renowned international designer Christopher Seymour to exclusively offer Double Century, a 200m superyacht that could become the largest private yacht built to date.
Story first published: Thursday, June 25, 2015, 13:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark