அமெரிக்கா, சீனாலாம் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க! உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இந்திய பஸ்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் டூவீலர் (Electric Two Wheeler) மற்றும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகிய வாகனங்களின் வரிசையில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களும் (Electric Bus) அதிகளவில் இயங்க தொடங்கி விட்டன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், தொலை தூர பயணங்களுக்கு தற்போது எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் தொலை தூர பயணங்களை எலெக்ட்ரிக் பஸ்களில் மேற்கொள்வதற்கு பயணிகள் மத்தியில் தயக்கம் இருந்து வருகிறது.

இடையில் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் நிறுத்தப்படும் என்பதுதான் இதற்கு காரணம். எனவே இந்த பிரச்னையை களையும் வகையில் புத்தம் புதிய அதிநவீன எலெக்ட்ரிக் பஸ் ஒன்று பெங்களூர் (Bangalore) நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Veera Mahasamrat EV

வீர மஹாசாம்ராட் (Veera Mahasamrat) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீர வாகனா (Veera Vahana) மற்றும் எக்ஸ்போனென்ட் எனர்ஜி (Exponent Energy) ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, வீர மஹாசாம்ராட் எலெக்ட்ரிக் பஸ்ஸை பெங்களூரில் அறிமுகம் செய்துள்ளன.

இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸில், 320 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆக கூடிய உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exponent Charger

இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸின் பேட்டரியில் சார்ஜ் நிரப்புவதற்கு ஆகும் நேரமும், வழக்கமான ஐசிஇ பஸ்களில் எரிபொருள் நிரப்புவதற்கு ஆகும் நேரமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. எனவே பயணிகளுக்கு தடையில்லா பயணங்களை வழங்கும் வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான ஐசிஇ பஸ்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட, வீர மஹாசாம்ராட் எலெக்ட்ரிக் பஸ்ஸை இயக்குவதற்கு 30 சதவீதம் வரை குறைவாகவே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெங்களூர்-ஐதராபாத் வழித்தடத்தில் மட்டும் இந்த வீர மஹாசாம்ராட் எலெக்ட்ரிக் பஸ்ஸை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் வரும் காலங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், விரைவாக சார்ஜ் ஆக கூடிய இந்த வீர மஹாசாம்ராட் எலெக்ட்ரிக் பஸ்ஸை பயணிகளின் சேவையில் ஈடுபடுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும்பட்சத்தில், பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகிலேயே வேகமாக சார்ஜ் ஆக கூடய எலெக்ட்ரிக் பஸ் (World's Fastest-charging Electric Bus) என்ற பெருமையை, வீர மஹாசாம்ராட் பெற்றுள்ளது. இப்படி ஒரு பெருமையை தன்வசம் வைத்துள்ள எலெக்ட்ரிக் பஸ், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான ஒரு செய்திதான்!

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 13:30 [IST]
English summary
Worlds fastest charging electric bus veera mahasamrat ev all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+