உலகின் அதிவேக டாப் - 10 பயணிகள் விமானங்கள்!

By Saravana

பிற போக்குவரத்தை காட்டிலும் விமான பயணம் மிக விரைவான போக்குவரத்து சாதனமாக இருக்கிறது. பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சில மணிநேரங்களில் சென்றடையும் விமான பயணங்கள் பலருக்கும் ஆறுதலான விஷயம்தான்.

இருப்பினும், அடிக்கடி பயணிப்பவர்களுக்கும், வர்த்தக ரீதியிலான பயணிப்பவர்களுக்கும், நாள் ஒன்றுக்கு 24 மணிநேரமே போதுமானதாக இல்லை என்பவர்களுக்கும், இவற்றைவிட விரைவான பயண ஆப்ஷனை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்ட உலகின் 10 அதிவேக பயணிகள் விமானங்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. செஸ்னா சிஜே3

10. செஸ்னா சிஜே3

அமெரிக்காவை சேர்ந்த செஸ்னா விமான நிறுவனம் உருவாக்கிய சிறிய வகை பயணிகள் விமானம். ஒரு நாளைக்கு 24 மணிநேரமே போதவில்லை என்று காலில் றெக்கை கட்டி பறக்கும் பெரும் செல்வந்தர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட விமான மாடல். மணிக்கு 769 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் இரண்டு வில்லியம்ஸ் எஃப்ஜே44 டர்போ எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் ராக்வெல் காலின்ஸ் புரோ லைன் 21 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒரு விமானி இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் 6 பயணிகள் செல்ல முடியும். உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, கேபினில் கூடுதல் வசதிகளுடன் மாறுதல்களை செய்து கொள்ளலாம். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,408 கிமீ தூரம் வரை பறக்கும். 7.49 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

09. பம்பார்டியர் சிஆர்ஜே1000

09. பம்பார்டியர் சிஆர்ஜே1000

கனடா நாட்டை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான பம்பார்டியர் தயாரிக்கும் பயணிகள் விமானம். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 104 பேர் பயணிக்க முடியும். மணிக்கு அதிகபட்சமாக 870 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிடி சிஎஃப்34-8சி5ஏ1 மாடல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருமுறை எரிபொருள் நிர்ப்பினால், 3,132 கிமீ தூரம் வரை பறக்கும். 46.37 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

 08. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550

08. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550

அமெரிக்காவில் தயாரான உயர்வகை தனிநபர் பயன்பாட்டு விமான மாடல். 55 மில்லியன் முதல் 57 மில்லியன் டாலர் விலை கொண்டது. 18 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த விமானம் மணிக்கு 941 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக மணிக்கு 1,062 கிமீ வேகம் வரை இயக்க முடியும். மேலும்,ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 12,501 கிமீ தூரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் பிஆர் 710 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹனிவெல் பிரைமஸ் எபிக் ப்ளேன் வியூ ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 57 மில்லியன் டாலர் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

07. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650

07. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650

அமெரிக்காவின் கல்ஃப் ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. இதுவும் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்தது. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 12,964 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 18 பேர் பயணிப்பதற்கான இடவசதி உள்ளது. இந்த விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் பிஆர் 725 ஏ1 12 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹனிவெல் ப்ளேன்வியூ 2 காக்பிட் ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 981 கிமீ வேகம் வரை பறக்கும். 62 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

 06. போயிங் 747- 8

06. போயிங் 747- 8

போயிங் நிறுவனத்தின் ஜம்போ பயணிகள் விமான வகையை சேர்ந்தது. அதிகபட்சமாக 988 கிமீ வேகத்தில் பறந்து செல்லும். இந்த விமானத்தில் 700 பேர் வரை பயணிக்க முடியும். இந்த பிரம்மாண்ட விமானத்தில் 4 ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஇஎன்எக்ஸ் 2பி67 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ராக்வெல் காலின்ஸ் ஏவியோனிக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

05. டஸ்ஸால்ட் ஃபால்கன் 900 இஎக்ஸ்

05. டஸ்ஸால்ட் ஃபால்கன் 900 இஎக்ஸ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு. இதுவும் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்தது. இந்த விமானத்தில் 18 பேர் பயணிக்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 7,399 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த விமானத்தில் மூன்று ஹனிவெல் டிஎஃப்இ 731-60 எஞ்சின்களும், டஸ்ஸால்ட் 3டி ஈஸி காக்பிட் ஏவியோனிக்ஸ் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 1,065 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானத்தின் விலை மதிப்பு 36 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

04. ஏர்பஸ் ஏ380

04. ஏர்பஸ் ஏ380

தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமையை பெற்றது இந்த ஜம்போ ரக விமானம். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் தயாரிப்பு. இரண்டு தளங்களை கொண்ட இந்த விமானம ஏ380 700, ஏ380 800 மற்றும் ஏ380 900 ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. ஏ380 800 மற்றும் ஏ380 900 மாடல்களில் 4 ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 970பி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தேல்ஸ் ராக்வெல் ஹனிவெல் காம்போ ஏவியோனிக்ஸ் சிஸ்டம் கொண்டது. மூன்று மாடல்களுமே அதிகபட்சமாக 1,087 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. 301 மில்லியன் டாலர்கள் முதல் 337.5 மில்லியன் டாலர்கள் வரையிலான விலை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

03. செஸ்னா சிட்டேஷன் எக்ஸ்

03. செஸ்னா சிட்டேஷன் எக்ஸ்

இதுவும் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்தது. 12 பேர் வரை பயணிக்க முடியும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 5,686 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். மணிக்கு 1,126 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் 2 ரோல்ஸ்ராய்ஸ் ஏஇ3007சி1 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஹனிவெல் ப்ரைமஸ் 2000 ஆட்டோபைலட் ஏவியோனிக்ஸ் சிஸ்டம் கொண்டது. 21.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.

02. கன்கார்டு

02. கன்கார்டு

உலகின் அதிவேக விமானங்களின் பட்டியலில் கன்கார்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், விமான போக்குவரத்து வரலாற்றில் முத்திரை பதித்த பயணிகள் விமானம். 1976ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. 20 கான்கார்டு விமானங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ஒலியைவிட இருமடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. மணிக்கு 2,179 கிமீ வேகம் வரை செல்லும் அபரிமிதமான திறன் படைத்த விமானம். அதிகபட்சமாக 128 பேர் பயணிக்கலாம். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 7,250 கிமீ தூரம் வரை பயணிக்கும். மீண்டும் இந்த விமானத்தை பறக்க

 01. டுபோலெவ் டியூ144

01. டுபோலெவ் டியூ144

1968 முதல் 1984ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட உலகின் முதல் சூப்பர்சானிக் பயணிகள் விமானம். ஆனால், பாதுகாப்பு குறைபாடு பிரச்னைகள் எழுந்ததையடுத்து, இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. மொத்தம் 55 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 140 பேர் பயணிக்க கூடிய இந்த விமானம் மணிக்கு 2,430 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் கோலிசோவ் ஆர்டி 3651 டர்போஜெட் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. கான்கார்டு அளவுக்கு வெற்றிகரமான மாடலாக இல்லை என்பது விமான துறையினரின் கருத்து.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's Fastest Passenger Planes in History.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X