லேப்டாப் சைஸில் ஓர் போக்குவரத்து சாதனம்... ஜப்பான் எஞ்சினியர்கள் அசத்தல்!
லேப்டாப் சைஸில் ஓர் அசத்தலான போக்குவரத்து சாதனத்தை ஜப்பான் எஞ்சினியர்கள் உருவாக்கியுள்ளனர். பார்ப்பதற்கு லேப்டாப்பில் சக்கரங்களை மாட்டியது போல இருக்கிறது.
குறைந்த தூர போக்குவரத்திற்கு இது ஓர் அருமருந்தான போக்குவரத்து சாதனமாக இருக்கும் என்று இதனை உருவாக்கிய எஞ்சினியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த காரில் அப்படி என்னென்ன விஷேசங்கள் உள்ளன. பார்க்கலாம் வாங்க.

கோகோவா மோட்டார்ஸ்
கோகோவா மோட்டார்ஸ் என்ற ஜப்பானிய நிறுவனம் இந்த போக்குவரத்து சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதனை Walkcar என்று கோகோவா நிறுவன பொறியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

லேப்டாப் சைஸ்
வெறும் லேப்டாப் சைஸில் இருப்பதால், ஒரு பையில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். எடையும் அவ்வாறே. ஆம், 2 முதல் 3 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டது.

பேட்டரி
இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், உள்ளரங்கத்திலும், வெளிப்புறங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ப இரு மாடல்களில் கிடைக்கிறது.

ரேஞ்ச்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 11.2 கிமீ தூரம் வரை செல்லும். அதேபோன்று, அதிகபட்சமாக மணிக்கு 10 கிமீ வேகம் வரை தொடும். ஒருமுறை சார்ஜ் ஏற்றுவதற்கு 3 மணிநேரம் பிடிக்கும்.

முன்பதிவு
வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மோட்டார் பலகைக்கு ஆர்டர் எடுக்க கோகோவா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

எடை தாங்கும் திறன்
இந்த மோட்டார் பலகையில் 120 கிலோ எடையுடையவர்கள் வரை பயணிக்க முடியும். எந்தபக்கம் கால்களால் அதிக அழுத்தம் கொடுக்கிறோமோ, அந்த பக்கம் திரும்பும்.


Click it and Unblock the Notifications








