வந்தே பாரத் ரயிலுக்கு போட்டியாக சீனா உருவாக்கிய சூப்பர் ரயில்! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சீனாவை சேர்ந்த ரயில் கட்டுமான நிறுவனம் உலகின் முதல் கார்பன் பைபர் ரயிலை கட்டுமானம் செய்து வருகிறது. விரைவில் இந்த ரயிலை அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண ரயிலுக்கும் இந்த கார்பன் பைபர் ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? இதனால் மக்களுக்கு எல்லா பலன்? இந்த ரக ரயிலை பயன்படுத்துவதால் ரயில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும்? இதில் உள்ள அம்சங்கள் என்னென்ன? என்ற விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
ரயில் கட்டுமானம் தற்போது நவீனமாக மாறி வருகிறது. உலகில் உள்ள பல்வேறு ரயில் கட்டுமான நிறுவனங்கள் எல்லாம் சிறப்பான ரயில்களை கட்டுமானம் செய்ய துவங்கி விட்டார்கள். இந்தியாவும் வந்தே பாரத் போன்ற ரயில்களை கட்டுமானம் செய்து ரயில் கட்டுமான துறையில் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் முதன்முறையாக கார்பன் பைபர் கொண்டு ரயிலை கட்டமைத்துள்ளார்கள்.

சீனாவை சேர்ந்த ரயில் கட்டுமான அமைப்பான சீனா ரயில்வே கட்டுமான கார்ப்பரேஷன்-னின் துணை நிறுவனமான குவிண்டோ ஸிஃபாங் ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற நிறுவனம் தற்போது கார்பன் பைபர் மூலம் இயங்கும் ரேபிட் டிரான்ஸிட் ரயிலை உருவாக்கியுள்ளார்கள். மெட்ரோ போன்ற பயன்பாட்டிற்கான ரயிலை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த ரயிலுக்கு அந்நிறுவனம் சென்ரோவோ 1.0 என பெயர் வைத்துள்ளார்கள். இந்த ரயிலை நிறுவனம் கட்டுமானம் செய்து தங்கள் ஆலையில் வைத்தே வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இந்த ரயில் தான் உலகின் முதல் கார்பன் பைபர் மூலம் தயாரிக்கப்பட்ட ரயிலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கார்பன் பைபர் என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு இருக்கிறது? சாதாரண ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என நீங்கள் கேட்கலாம். பொதுவாக ரயில் கட்டுமானம் செய்யும்போது ஸ்டீல், அலுமினியம், உள்ளிட்ட மெட்டல்களை வைத்து தான் உருவாக்குவார்கள். இப்படியாக உருவாக்கப்படும் போது ரயிலின் எடை அதிகமாக இருக்கும். ரயிலின் எடை அதிகமாக இருக்கும் போது அதை இழுத்துச் செல்லும் திறனும் அதிகம் தேவைப்படும்.
இதனால் மின்சக்தி அல்லது எரிபொருள் அதிகம் தேவைப்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் ரயிலில் எடையை குறைக்கும் பட்சத்தில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தலாம். அல்லது மின்சாரம் மூலம் இயங்கும் ரயில் என்றால் மின்சக்தியையும் மிச்சப்படுத்தலாம். இது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதே நேரம் ஸ்டீல், அலுமினியம் போன்ற விஷயங்கள் எல்லாம் துரு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஏற்கனவே இருக்கும் மெட்டல்களில் கார்பன் மூலக்கூறுகளை சேர்ப்பதன் மூலம் அதை கார்பன் ஃபைபர் பொருளாக மாற்றுகிறார்கள். இந்த பொருளை வைத்து தான் இந்த ரயில்வே முழுமையாக கட்டமைத்துள்ளார்கள். தற்போது ரயிலை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஸ்டீலை விட இந்த கார்பன் ஃபைபர் பொருட்கள் 75% எடை குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இதனால் ரயிலின் ஒட்டுமொத்த எடை 11% வரை குறைந்துள்ளது.
இதனால் இந்த ரயிலை இயக்கும்போது 7 சதவீதம் வரை குறைவான எரிபொருள்தான் செலவாகிறது. இதனால் இந்த ரயிலை இயக்கும்போது ரயிலுக்கு தேவையான எரிபொருள் மட்டுமல்லாமல் ரயில் இயங்கும் தண்டவாளங்களில் ஏற்படும் தேய்மானமும் குறைந்துள்ளது. இந்த ரயிலில் துருப்பிடிக்கும் அம்சங்கள் மிக குறைவாக இருப்பதால் 30 ஆண்டுகள் வரை இந்த ரயிலை எந்த சர்வீஸூம் இல்லாமல் பயன்படுத்த முடியும்.
இந்த ரயிலின் எரிபொருள் செலவு குறைவாக இருப்பதால் இதன் மூலம் ஓராண்டிற்கு 130 டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைக்க முடியும். இது 100 ஏக்கர் நிலத்தில் மரங்களை வளர்த்தால் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு குறையுமோ அந்த அளவிற்கு இது சிறிய மாற்றத்தால் கார்பன் டை ஆக்சைடு குறைகிறது. சீன ரயில்வே கட்டுமான நிறுவனம் இந்த ரயிலை மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளது.
இந்த ரயில் அதிகபட்சமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மெட்ரோ ரயில்கள் எல்லாம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்த ரயில்வே கட்டுமானம் செய்த அந்த நிறுவனம் முழுமையாக இந்த ரயில் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்க டிரைவர்கள் யாரும் தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரயில் போக்குவரத்து மக்களுக்கு இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை வருங்காலங்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால் ரயில் கட்டுமானத்தில் அதிக நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டிய அவசியமாக இருக்கிறது. இதில் சீனா மிக முக்கியமான ஒரு சாதனையை செய்துள்ளது என சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









