உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

லண்டனில் உள்ள மேக்ஸி-காஸி என்ற சீட் தயாரிப்பு நிறுவனம் உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக்குடன் கூடிய சீட்டை தயாரித்துள்ளது.

கார்களின் பாதுகாப்பு அம்சம் பெருகி வருகிறது. மக்களும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய கார்களையே அதிகம் விரும்பு வாங்குகின்றனர்.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இதையடுத்து கார் நிறுவனம் பல சோதனைகளை செய்து பல பாதுகாப்பு அம்சங்களை காரில் பொருத்தி வருகிறது. இதில் சில அம்சங்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த கார்களிலும் அது இடம் பிடிக்கிறது. சில சரியாக வேலை செய்யாமல் உதவாமல் போகிறது.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஏர்பேக் அம்சம் தான். கார்கள் விபத்திற்குள்ளானால் அடுத்த சில விநாடிகளிலேயே ஏர் பேக் வெளியாகி இந்த விபத்து மூலம் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இந்த ஏர் பேக் இருந்ததால் பலர் விபத்துகளில் இருந்து உயிர் தப்பியுள்ளனர். சில பெரும் விபத்துகளில் கூட காரில் இருந்தவர் சிறு காயம் கூட இல்லாமல் இருந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இப்படி ஏர்பேக் காரின் ஒரு முக்கிய அம்சமாகவே மாறிப்போன நிலையில், அதில் இருந்த ஒரே குறை குழந்தைகள் காரில் இருக்கும் போது அவர்களுக்கு தகுந்தார் போல் வேலை செய்யாது என்பது தான். குழந்தைகள் காரில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் ஏர் பேக் இருந்தாலும் அதன் மூலம் குழந்தைகளை காக்கும் வாய்ப்பு குறைவுதான்.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இந்நிலையில் லண்டனில் உள்ள மேக்ஸி-காஸி என்ற சீட் தயாரிப்பு நிறுவனம் உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக்குடன் கூடிய சீட்டை தயாரித்துள்ளது.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இதில் கார் விபத்தில் சிக்கும் போது குழந்தையின் கழுத்து, தோள்பட்டை, முகம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் ஏர்பேக் விரிவடைந்துவிடும். இதனால் விபத்தில குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இந்த சீட்டில் 2 அடி முதல் 3.5 அடி உயரம் உள்ள குழந்தைகள் உட்காரலாம். இந்த இருக்கையின் அடிப்பகுதி 360 டிகிரி சுழலக்கூடியவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பொருத்தவும், அகற்றவும் முடியும். இது குறித்த விளக்க வீடியோவை கீழே காணுங்கள்

இந்த சீட்டை காரில் ஏற்கனவே உள்ள சீட்டின் மேலேய பொருத்தமுடியும். சீட்டிற்கு அடியில்உள்ள சென்சார் மூலம் கார்விபத்திற்குள்ளாவதை உணர்ந்து ஏர் பேக் விரிவடையும். இந்த சீட்டில் சீட் பெல்ட் வசதியும் உள்ளது.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

இது குழந்தையை விபத்தில் இருந்து 55 சதவீதம் பாதுகாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்பேக் கார் விபத்தில் சிக்கிய 0.05 நொடிகளிலேயே ஏர் பேக் விரிந்துவிடும். இதனால் உடனடி பாதுகாப்பு கிடைக்கும். இது குறித் விளக்க வீடியோவை கீழே காணுங்கள்

இது குறித்து மேக்ஸி-காஸி நிறுவனத்தனிர் கூறும் போதும் மேலும் ஏர்பேக் கொண்டு சில தயாரிப்புகளை செய்யவிருக்கின்றோம். குறிப்பாக பைக்கில் செல்பவர்களுக்கான ஏர்பேகும் எங்கள் திட்டத்தில் உள்ளது.

உலகின் முதல் ஏர்பேக் உடன் கூடிய குழந்தைகளுக்கான சீட் அறிமுகம்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏர்பேக் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்து விட்டது. இதன் விலை இந்திய பண மதிப்பில் ரூ 51,000. தற்போது மேக்ஸி-காஸி நிறுவனம் குழந்தைகளுக்கான ஏர்பேக்கில் இந்த ஒரு தயாரிப்பை மட்டுமே தொடர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's First Child Car Seats With Airbags Launched In The UK. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X