உலகின் முதல் மின்சார பயணிகள் விமானத்திற்கு ஆர்டர் குவிகிறது!
சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத வாகனங்களை உருவாக்கும் பணிகள் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், முழுவதும் மின் ஆற்றலில் இயங்கும் உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பறப்பதற்கு தகுதியுடைய விமானம் என்று சீன அரசு சான்று வழங்கியதையடுத்து, இந்த விமானத்தின் டெலிவிரி துவங்கியுள்ளது. மேலும், இந்த விமானத்திற்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பு
இந்த மின்சார பயணிகள் விமானத்தை சென்யாங் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகமும், சீனாவின் வடகிழக்கில் உள்ள லயோனிங் மாகாணத்தின் லயோனிங் ஜெனரல் ஏவியேஷன் அகடமியும் இணைந்து தயாரித்துள்ளன.

மாடல்
உலகின் முதல் மின்சார விமானமாக கூறப்படும், இந்த விமானத்திற்கு RX1E என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த விமானம் 14.5 மீட்டர் அகலமும், 230 கிலோ எடை சுமக்கும் திறனும் கொண்டது. இந்த விமானத்தை 3,000 மீட்டர் உயரம் வரை பறக்கும்.

சார்ஜ்
வெறும் 2 மணி நேரத்தில் இந்த விமானத்தின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியுமாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை பறக்கும். அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் பறக்கும்.

பயன்பாடு
பைலட் பயிற்சி, சுற்றுலாத் துறை, வானிலை துறை மற்றும் மீட்புப் பணிகளில் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும்.

விலை
ஒரு விமானத்திற்கு 1.63 லட்சம் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

டெலிவிரி
முதல் 2 விமானங்கள் லயோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுவரை 28 விமானங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications