உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

உலகின் முதல் ஹோவர் பைக் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வீடியோ மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதற்காக நித்தம் ஒரு புதுமையான போக்குவரத்து சாதனம் உருவாக்கி வெளியிடப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் இந்த புதுமையான போக்குவரத்து சாதனங்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம்.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

அந்த வகையில், ஹோவர் என்று குறிப்பிடப்படும் புதுமையான பறக்கும் போக்குவரத்து சாதனங்களை உருவாக்கும் பணிகள் இப்போது தீவிரமடைந்துள்ளன. அதாவது, தரையிலிருந்து சில மீட்டர் உயரத்தில் இவை மேல் எழும்பி பறக்கும் சாதனங்களையே ஹோவர் என்று குறிப்பிடுகின்றனர்.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

அதாவது, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அதிநவீன சாதனமாக இதனை குறிப்பிடலாம். அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் என்ற நிறுவனம் ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹோவர்-பைக் சாதனத்தை உருவாக்கி உள்ளது.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

அண்மையில் இந்த புதிய ஹோவர்-பைக்கை ஒரு உள் அரங்கத்தில் வைத்து வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. மேலும், அந்த சோதனையின் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

ஸ்கார்ப்பியான்-3 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஹோவர் பைக் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே அமர்ந்து ஓட்டிச் செல்லும் வகையில் வடிவமைப்பு பெற்றிருக்கிறது.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

ட்ரோன் மற்றும் க்வாட்காப்டர் ஆகிய இரண்டு போக்குவரத்து சாதனங்களின் தொழில்நுட்பங்களின் கலவமையாக இந்த ஹோவர் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாலையில் எப்படி பைக்கை இயக்குகிறோமோ, அதேபோன்று, வானில் பறக்கும் போது இந்த ஹோவர் பைக்கை கட்டுப்படுத்தி செல்ல முடியும்.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

அதிகபட்சமாக 120 கிலோ எடையை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது. அதாவது, ஓட்டுனர், அவர் அணிந்திருக்கும் கவச உடை சேர்த்து 120 கிலோவுக்குள் இருத்தல் அவசியம். தரையிலிருந்து 33 அடி உயரம் வரை பறக்கும் இந்த ஹோவர் பைக் மணிக்கு 48 கிமீ வேகத்தில் செல்லும்.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

இந்த ஹோவர் பைக்கில் நவீன சாஃப்ட்வேர் கொண்ட இசியூ மூலமாக இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். எனவே, பாதுகாப்பான உயரத்திலும், வேகத்திலும் செல்லும் வகையில் புரோகிராம் செய்து கொள்ள முடியும்.

உலகின் முதல் பறக்கும் 'ஹோவர் பைக்' வெற்றிகரமாக சோதனை!!

சோதனை ஓட்டத்தின்போது பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு இந்த ஹோவர் பைக்கை ஒருவர் ஓட்டி சோதனை செய்கிறார். மிக அழகாக மேல் எழும்பி பறக்கிறது. இந்த ஹோவர் பைக் ரோட்டரி எஞ்சின்கள் மூலமாக இயங்குகிறது.

உலகின் முதல் பறக்கும் கார் மற்றும் பறக்கும் ட்ரோன் டாக்சி போன்றவை அறிமுகமாகி வரும் இந்த நேரத்தில், உலகின் முதல் ஹோவர் பைக்கும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The video footage captures the world's first hoverbike being tested in a warehouse. The quadcopter drone lets riders to navigate just like a motorbike.
Story first published: Thursday, February 23, 2017, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X