உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரியை தயாரித்து அசத்திய சகோதர்கள்!

உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளைப் போன்றே ஒரு மாதிரி மோட்டார் சைக்கிளை மீண்டும் உருவாக்கியுள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜெர்மனியைச் சேர்ந்த 'கோட்லியப் டேம்லர்' என்பவரால் 1885 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'ரீட்வாகன்' என்று பெயரிடப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் உலகின் முதல் மோட்டார் சைக்கிள் என்று கருதப்படுகிறது. இதனை இரண்டு சகோதர்களும் அவர்களின் நண்பர்களும் சேர்ந்து மீண்டும் மறுஉருவாக்கம் செய்துள்ளனர்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

1885 ஆம் ஆண்டில் டேம்லரால் உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மரசக்கரங்கள் கொண்டதாகும். நவீன மோட்டார் சைக்கிள்களின் முன்னோடியாக இது பார்க்கப்படுகிறது. இது தயாரிக்கப்பட்ட நூற்றாண்டை முன்னிட்டு இதைப் போன்றே ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்க எண்ணினர் சகோதரர்கள் இருவர். இது நடந்தது 1984ஆம் ஆண்டில்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

அமெரிக்காவைச் சேர்ந்த ராய் பெஹ்னர் மற்றும் ரே பெஹ்னர் என்ற இருசகோதரர்களின் இந்த முயற்சிக்கு அவர்களின் நண்பர்களான ஜிம் கார்ல்டன் மற்றும் ஹாஃப்மேன் ஆகியோரும் கைகோர்த்தனர். முதலில் இந்த யோசனையை ஜிம் தான் முன்மொழிந்துள்ளார், அவரிடம் முதல் மோட்டார் சைக்கிளின் ஒரு புகைப்படம் இருந்துள்ளது.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

இணையமோ அல்லது கூகுள் போன்ற நவீன கால உதவிகள் அல்லாத காலகட்டத்தில் வெறும் ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அளவீடுகள் எதுவும் இல்லாமல் இதனை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதாக இருந்திருக்க முடியாது. எனினும் இதனை டேம்லர் உருவாக்கிய மோட்டார் சைக்கிளின் நூற்றாண்டு தினத்திற்குள்ளாக தயாரிக்க திட்டம் தீட்டினர்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

சகோதர்களின் வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள கேரேஜ் ஒன்றினை இதற்காக பயன்படுத்தினர், கிட்டத்தட்ட 9 மாதங்கள் இதற்காக நால்வரும் கடுமையாக உழைத்து 1885ல் டேம்லரால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரியை 33 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினர்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

இவர்களின் கடின முயற்சியால் உருவாக்கப்பட்ட மாதிரி மோட்டார் சைக்கிளை 1985ஆம் ஆண்டில், சரியாக நவம்பர் 10 ஆம் தேதி டேம்லர் உருவாக்கிய அதே தினத்தில் முடித்து, அதில் சவாரி செய்தும் காண்பித்தனர். தற்போது இந்த மோட்டார் சைக்கிள் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ‘மோட்டார்சைக்கிள் ஹால் ஆஃப் ஃபேம்' என்ற மோட்டார் சைக்கிள்களுக்கான மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

கிட்டத்தட்ட 33ஆண்டுகளுக்கு முன்னர், இதனை உருவாக்கிய சகோதர்களில் ஒருவரான ரே பெஹ்னர் அந்த மியூசியத்திற்கு, தாங்கள் உருவாக்கிய மோட்டார் சைக்கிளை காண முதல் முதலாக வருகை புரிந்தார்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

தங்களின் முயற்சி குறித்து அவர் விவரித்த போது, "இந்த மோட்டார் சைக்கிளை நாங்கள் உருவாக்க திட்டமிட்டபோது பிளூபிரிண்ட் போன்ற துல்லியமான அளவீடுகள் எதுவுமின்றி வெறும் ஒரு புகைப்படத்தை மட்டுமே கொண்டு வேலையை தொடங்கினோம்".

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

"நான் மரவேலை செய்பவன், அதனால் இந்த மோட்டார் சைக்கிள் ஃபிரேம் மற்றும் சக்கரங்கள் உருவாக்கும் பணியில் நான் முதலில் இறங்கினேன். எனது சகோதரன் ரே இதற்கான பொறியியல் வேலைகளை செய்தார்"

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

"கார்ல்டன் மற்றும் ஹாஃப்மேன் ஆகியோர் தினமும் சிறு சிறு வேலைகளில் உதவி புரிந்து வந்தனர், இந்த வேலை அவ்வளவு எளிதானதாக எங்களுக்கு அமையவில்லை"

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

"ஒரிஜினல் மோட்டார் சைக்கிளைவிடவும் நாங்கள் உருவாக்கிய மோட்டார்சைக்கிள் அளவில் சற்று பெரியது. எப்பொழுதும் ஒரிஜினலை போன்றே நகல் தயாரிப்பது என்பது துல்லியமாக இருப்பதில்லை" என ரே மேலும் கூறினார்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

மாதிரி மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பணி 1984ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, நவம்பர் 10, 1985 ஆண்டு நிறைவடைந்தது. உலகின் முதல் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்ட நூற்றாண்டு தினத்தில் இந்த மாதிரி மோட்டார் சைக்கிளில் 11 மைல்கள் பயணித்துள்ளனர் இவர்கள்.

உலகின் முதல் மோட்டார் சைக்கிளின் மாதிரி இதுதான்!

நவீன காலத்தில் சீறிப்பாயும் வேகத்தில் பைக்குகள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது 1885ல் டேம்லர் தயாரித்த மோட்டார்சைக்கிள் தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

வேகத்தில் சிறந்த கவாசகி நிஞ்சா ஹச்2 கார்பன் பைக்கின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2017, 12:00 [IST]
English summary
Two brothers, along with their friends, recreated the world’s first motorcycle 30 years ago, using only a photograph.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+