கின்னஸ் சாதனை படைத்த உலகின் அதிக எடையுடைய மிதிவண்டி!

Written By:

ஏதாவது ஒரு விதத்தில் சாதித்து விட வேண்டும் துடிப்பு எல்லோரிடத்திலும் இருக்கும். அதுபோன்று ஒரு துடிப்புடன் இருந்த ஜெர்மானியர் ஒருவர் உலகின் அதிக எடையுடைய மிதிவண்டி ஒன்றை தயாரித்துள்ளனர்.

மிதிவண்டி என்றவுடன் வீட்டில் ஒரு ஓரமாக வைத்து விடலாம் என்ற நினைப்பை இந்த மிதிவண்டி உடைக்கிறது. ஆம், இந்த மிதிவண்டியை நிறுத்துவதற்கு தனி கராஜ் அமைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

ஜெர்மனியின் டென்மார்க் எல்லையோரத்தில் உள்ள சிறிய நகரில் வசிக்கும் பிராங்க் டோஸ் [49] என்பவர்தான் இந்த சைக்கிளை உருவாக்கியிருக்கிறார். இதற்கு அவரது மனைவியும், அருகில் வசிப்பவர்களும் அதீத ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

சுமார் ஒரு டன் எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மிதிவண்டியில் உலோக சட்டங்களை வெல்டிங் செய்து பிரம்மாண்ட அடிச்சட்டத்துடன் கட்டமைத்துள்ளார். பார்ப்பதற்கே மிக வித்தியாசமாக இருக்கிறது.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

அதன் முன்னும், பின்னும் விவசாய டிராக்டரின் இரண்டு ராட்சத சக்கரங்களை பொருத்திவிட்டார். நடுவில் படிக்கட்டு போல அமைந்திருக்கும் அடிச்சட்டத்தில் அமர்ந்து ஓட்ட முடியும்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

மேலும், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக இதனை ஓட்டிக் காட்டுவது அவசியம். அதற்கு தகுந்தாற்போல் இதனை இயங்கும் கட்டமைப்புடன் உருவாக்கியிருக்கிறார்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

கின்னஸ் சாதனையின்போது 500 யார்டு [457 மீட்டர்] தூரம் ஓட்டிக் காண்பித்து ஆச்சரியப்படுத்தினார்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

இந்த பிரம்மாண்ட வாகனம் கால்களால் மிதித்து இயங்குவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

இந்த மிதிவண்டியை கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் கிரேன் மூலமாக எடை போட்டு, அதனையும் குறித்துக் கொண்டனர்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மிதிவண்டி!

தற்போதைக்கு உலகின் அதிக எடை கொண்ட மிதிவண்டி என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. இதற்கு பிராங்க் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது மனைவியும் பெருமையும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: German man has built a bicycle weighing nearly a tonne weight.
Story first published: Wednesday, September 7, 2016, 10:34 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos