உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

உலகின் மிக நீளமான விமானமாக கருதப்படும் 'ஏர்லேண்டர் 10' எனும் ஆகாயக் கப்பல், தனது சோதனையோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை 'ஏர்லேண்டர் 10' என்ற பெயரில் தயாரித்தது. உலகின் மிகப்பெரிய ஆகாயக் கப்பலான இது, 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

மேலும், இந்த ஆகாயக் கப்பல் ஹுலியம் வாயு அடங்கிய ராட்சத பலூன்களைக் கொண்டிருப்பதால், ஹெலிகாப்டரைப் போல நின்ற இடத்திலிருந்தே மேலே எழும்பி பறந்துவிடும். இதனால் இதற்கு ஓடுதளம் தேவையில்லை. தண்ணீர், பனி மற்றும் பாலைவனம் என பலத்தரப்பட்ட நிலப்பரப்பில் இருந்துகூட டேக் ஆஃப் செய்யவும், தரையிறங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

சுமார் 4 ஆயிரத்து 880 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறனும், ஆட்கள் இருந்தால் இரண்டு வாரங்களும், ஆட்கள் இல்லாதபட்சத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாகவும் இவ்விமானம் வானத்தில் வானத்தில் மிதக்கும் சக்தி கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

அமெரிக்க ராணுவத்தின் தேவைக்காக முதலில் இந்த ஆகாயக் கப்பல் உருவாக்கப்பட்டது. பிறகு இந்த முடிவை அமெரிக்கா ராணுவம் கைவிட்டதால் பயணிகள் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்டது. மணிக்கு 148 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லவும் 2 வாரம் வரை வானத்திலேயே பறக்கும் அளவிற்கு இந்த ஆகாய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்தின் உச்சகட்ட சாதனையாகும்.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

இந்த ஆகாய கப்பலை கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லண்டனில் உள்ள கார்டிங்டன் விமானதளத்தில் பரிசோதனைச் செய்யப்பட்டது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில், பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

இந்நிலையில், தற்போது 25 மில்லியன் யூரோ செலவில், இந்த ஆகாய கப்பல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தரையிறங்கும்போது விபத்து ஏற்படாமல் இருக்க புதிய அமைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளன. புதிதாக மாற்றியமைக்கப்பட்ட இந்த ஏர்லேண்டர் விமானம் லண்டனின் கார்டிங்டன் விமானத் தளத்தில் இருந்து தனது பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா? விரைவில் உலகமெங்கும்...

மூன்று மணி நேரம் தொடர்ந்து வானில் பறந்துவிட்டு, மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது. ஏர்லேண்டர் விமானம் இடைவிடாது பயணிக்கும் தன்மை கொண்டிருப்பதால் வான் வழியாக நாடு விட்டு நாடு செல்லும் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #off beat #ஆஃப் பீட்
English summary
Worlds Largest AirCraft Airlander 10 Takes To The Skies. Read in Tamil
Story first published: Saturday, January 19, 2019, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X