டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா? வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த கப்பலில் போயிடனும்!

டைட்டானிக் கப்பலை விட மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள ஐகான் ஆப் சீஸ் என்ற சொகுசு கப்பல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து தற்போது தனது பயணத்தை துவங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய கப்பலாக ஏகப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகிலேயே மிகப்பெரிய கப்பலாக கருதப்பட்ட கப்பல் டைட்டானிக் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் தனது முதல் பயணத்திலேயே பணிப்பாறையின் மீது மோதி கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்ட மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.

Worlds largest cruise

இந்த கப்பலை தொடர்ந்து தற்போது அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் என்ற நிறுவனம் டைட்டானிக்கை விட மிகப்பெரிய கப்பல் ஒன்றை தற்போது தயாரித்துள்ளது. இந்த கப்பலுக்கு "ஐகான் ஆப் சீஸ்" என பெயர் வைத்துள்ளது. இந்த கப்பல் சுமார் 1200 அடி நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் தான் எடை கொண்ட இந்த கப்பல் உலகின் மிகப்பெரிய கப்பலாக உள்ளது.

இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டு பல்வேறு முறை சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக இந்த கப்பல் பயன்பாட்டுக்கு வருகிறது என்று இந்த கப்பல் புளோரிடா மாகாணத்தில் இருந்து புறப்பட்டு வெப்பமண்டல பகுதியை சுற்றி வருகிறது. இந்தக் கப்பலில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2350 பேர் கப்பல் பணியாற்று ஊழியர்களாகவும் 7600 பேர் கப்பலில் உள்ள பயணிகளாகவும் இருப்பார்கள்.

Worlds largest cruise

இந்த கப்பலில் மொத்தம் 28 விதமான அறைகள் உள்ளன மொத்தம் 20 ஃப்ளோர்கள் கொண்டதாக இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கான கேளிக்கைக்காக 6 நீர் சறுக்குகள், ஏ7 நீச்சல் குளங்கள், ஒரு பணி சிறக்க வளையம் ஒரு தியேட்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளன.

இந்த கப்பலில் உள்ள பயணிகளை மகிழ்விப்பதற்காக சுமார் 17,000 சதுர அடி கொண்ட வாட்டர் பார்க் ஒன்று இதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் நீர் சறுக்குகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த கப்பலில் 82 அடி உயர டோம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் கப்பலுக்கு உள்ளே இருந்தே வெளியில் உள்ள விஷயங்களை பார்க்கும் படி ரம்மியமான வியூ கிடைக்கும் படி இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

Worlds largest cruise

இந்த கப்பலில் உள்ள பயணிகளை மகிழ்விப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட இசை வல்லுநர்கள் மற்றும் காமெடி செய்யும் நபர்கள் கப்பலில் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது ஷோ நடத்தி பயணிகளை மகிழ்விப்பார்கள். இதுபோக இந்த கப்பலில் பயணிகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பல் மொத்தம் ஏழு நாள் பயணம் செல்கிறது.

இந்த கப்பலை கட்டுமானம் செய்யும் போது மற்ற கப்பல்களை விட குறைவான அளவில் கார்பன் எமிஷன் ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைக்க விளைவிக்காத வகையில் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமானத்தை ஒரு இன்ஜினியரிங் மார்வெல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சிறப்பான கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணிக்க 7 நாள் பயணத்திற்கு 1800 அமெரிக்க டாலர் முதல் டிக்கெட்டுகள் விற்பனையாகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1.5 லட்சம் என்ற விலையில் டிக்கெட் விற்பனையாகி வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் 2026-ம் ஆண்டு வரை இந்த கப்பலில் பயணிக்க டிக்கெட் எதுவும் தற்போது இல்லை எல்லா டிக்கெடுக்களும் விற்று தீர்ந்து விட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் கரீபியன் நிறுவனம் கட்டுமானம் செய்துள்ள இந்த "ஐகான் ஆப் சீஸ்" என்ற கப்பல் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அதிசயம் என சொல்லலாம். இவ்வளவு அதிகமான மக்கள் ஒரே கப்பலில் பயணிக்க வசதி செய்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கான கேளிக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துள்ளது.இது நிச்சயம் நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 27, 2024, 18:35 [IST]
English summary
Worlds largest cruise icon of seas first voyage trip cost
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X