உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ்!

Written By:

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களை இயக்கி வரும் ராயல் கரீபியன் நிறுவனம் அடுத்து ஒரு பிரம்மாண்ட சொகுசு கப்பலை கட்டி வருகிறது. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த சொகுசு பயணிகள் கப்பல், உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையை விரைவில் பெற இருக்கிறது.

இப்போது இருக்கும் சொகுசு கப்பல்களைவிட அதிக எடை கொண்டதாக வரும் இந்த சொகுசு கப்பல் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கட்டுமானம்

கட்டுமானம்

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நசைர் துறைமுக பகுதியில் அமைந்திருக்கும் பாரம்பரியமிக்க எஸ்டிஎக்ஸ் ஷிப்யார்டில்தான் இந்த புதிய சொகுசு கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணி

கட்டுமானப் பணி

தற்போது இந்த கப்பலின் வெளிப்புற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. உட்புற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் 2,500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலுக்கு 9.70 லட்சம் சதுர அடி தரை விரிப்பும், 5 லட்சம் லிட்டர் பெயிண்ட்டும் தேவைப்படும்.

மிகப்பெரிய கப்பல்

மிகப்பெரிய கப்பல்

இந்த கப்பல் 1,187 அடி நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ஈஃபிள் டவரின் உயரத்தைவிட 164 அடி கூடுதல் நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது 16 அடுக்குமாடிகளை கொண்டது.

 விருந்தினர்கள்

விருந்தினர்கள்

இந்த கப்பலில் 2,747 பயணிகள் தங்குவதற்கான சொகுசு அறைகள் உள்ளன. இவற்றில், 5,400 பயணிகளும், 2,394 பணியாளர்களும் பயணிக்க முடியும்.

 வசதிகள்

வசதிகள்

இந்த சொகுசு கப்பலில் 20 சாப்பாட்டுக் கூடங்கள், பார் வசதி, திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும். இதுதவிர, மலையேற்றம், பனிச்சறுக்கு, பேஸ்கட் பால் மைதானம், ஸ்கேட்டிங், கோல்ஃப் மைதானம் மற்றும் கயிற்றில் தொங்கிச் செல்லும் விளையாட்டு என சகல விளையாட்டு மற்றும் பொழுது வசதிகளை பெற்றிருக்கும்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

முதல் பயணம்

முதல் பயணம்

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த கப்பல் முதல் பயணத்தை துவங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

01. உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்...

02. உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்...

03. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கை கலங்கடித்த கார் பந்தய வீரர்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
world's largest cruise ships, Harmony of the Seas' exterior construction was completed this week at the STX shipyard in Saint-Nazaire, France. The newest member of Royal Caribbean International's Oasis class of ships is now one step closer to full completion as her April 2016 debut approaches.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more