வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த உல்லாச கப்பல்ல போயிரணும்! ஒவ்வொரு விஷயத்தையும் கேக்க கேக்க ஆசை அதிகமாகுது!
உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல் (World's Largest Cruise Ship) தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இது பயணிகளுக்கு சேவையாற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகான் ஆஃப் தீ சீஸ் (Icon of the Seas) உல்லாச கப்பலை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் (Royal Caribbean International) நிறுவனத்தால், ஐகான் ஆஃப் தீ சீஸ் உல்லாச கப்பல் இயக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில், உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல் என்ற பெருமையை வொண்டர் ஆஃப் தீ சீஸ் (Wonder of the Seas) வைத்துள்ளது.

ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கூற்றுப்படி, வொண்டர் ஆஃப் தீ சீஸ் உல்லாச கப்பலுடன் ஒப்பிடும்போது, ஐகான் ஆஃப் தீ சீஸ் உல்லாச கப்பல் 6 சதவீதம் பெரியது. ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலின் பிரம்மாண்டத்தை, நாங்கள் இங்கே வழங்கியுள்ள புகைப்படங்களின் மூலமாக நீங்கள் காண முடியும்.
ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலின் நீளம் 1,200 அடி ஆகும். அதாவது 365 மீட்டர்கள். அதே நேரத்தில் இதன் மொத்த எடை 2,50,800 டன்கள் ஆகும்! இதற்கே ஆச்சரியப்பட்டு விட வேண்டாம். இந்த செய்தியில் இன்னும் ஆழமாக செல்ல செல்ல ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலின் பிரம்மாண்டம் உங்களை இன்னும் ஆச்சரியப்படுத்தும்.

ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலில் மொத்தம் 8,000 பேர் பயணம் செய்ய முடியும். சுமார் 5,600 பயணிகள், 2,400 ஊழியர்கள் என 8,000 பேரை சுமந்து செல்லும் திறனை ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பல் பெற்றுள்ளது. ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலில் மொத்தம் 6 வாட்டர் ஸ்லைடுகள் இருக்கின்றன. இதற்கு கேட்டகரி 6 என பெயரிடப்பட்டுள்ளது.
இதுதவிர 7 நீச்சல் குளங்களும் இருக்கின்றன. ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலின் முதல் பயணம் வரும் ஐனவரி 27ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் இருந்து, ஐகான் ஆஃப் தி சீஸ் தனது முதல் பயணத்தை தொடங்கவுள்ளது.
ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலில், ஆயிரக்கணக்கான தாவரங்கள் அடங்கிய பார்க் இருக்கிறது. இங்கே இருப்பவை அனைத்தும் உண்மையான தாவரங்கள் ஆகும். அத்துடன் நீங்கள் இந்த உல்லாச கப்பலில், நீச்சல் குளத்தில் குளித்து கொண்டே மது அருந்துவதற்கான வசதியும் உள்ளது. கேட்கும்போது குதூகலமாக இருக்கிறது அல்லவா!
ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலின் சோதனை ஓட்டத்தின்போது, மெயின் இன்ஜின்கள், பிரேக் மற்றும் அதிர்வுகள் உள்பட அனைத்து அம்சங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில், ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பல் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்துள்ளது.
ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன், ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பல் தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் பயணிகளின் சேவைக்கு வருவதற்கு முன்பாக ஐகான் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பல் மீண்டும் ஒரு முறை சோதனை செய்து பார்க்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐகான் ஆஃப் தி சீஸ் போன்ற உல்லாச கப்பல்களில் ஒரு முறையாவது பயணம் செய்து பார்த்து விட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் என்ன இதற்கான கட்டணம்தான் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே இதுபோன்ற உல்லாச கப்பல் பயணங்கள், செல்வந்தர்களுக்குதான் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








