மேபக் எக்ஸலெரோ... உலகின் மிக விலையுயர்ந்த கார்!

By Saravana

இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் உலகின் அதிக விலை கொண்ட மாடலாக மேபக் எக்ஸலெரோ குறிப்பிடப்படுகிறது. பழமையையும், புதுமையையும் குழைத்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த உயர்ரக சொகுசு கார் ஒரு பிரபல ஃபளூடா டயர் நிறுவனத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

ஃப்ளூடா நிறுவனம் தயாரித்த புதிய உயர்வகை டயரை சோதனை செய்வதற்காக இந்த கார் தயாரிக்கப்பட்டது. கலைநயமும், சொகுசும் வழிந்தோடும் வகையில் டிசைன் செய்யப்பட்ட இந்த காரின் விலை, வாங்கிய பிரபலம் உள்ளிட்ட பல கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன் போட்டி

டிசைன் போட்டி

இந்த காரை வடிவமைப்பதற்காக ஃபோர்ஸீம் என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கிடையே டிசைன் போட்டி நடத்தப்பட்டது. அதில், 24 வயதுடைய ஃபெடரிக் என்ற மாணவர் வடிவமைத்த கார் டிசைன் தேர்வு செய்யப்பட்டு, அதன் டிசைன் தாத்பரியங்கள் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டது.

டிசைன்

டிசைன்

பழைய மேபேக் டிசைன் தாத்பரியங்களுடன் மேபக் 57 லிமோசின் கார் அடிப்படையாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டது. டூரினில் உள்ள ஸ்டோலா என்ற நிறுவனம் கட்டமைத்து கொடுத்தது.

பாகங்கள்

பாகங்கள்

இந்த காரில் கார்பன் ஃபைபர், அலுமினியம் உள்ளி்ட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 550எச்பி பவரை அளிக்கும் 5.9லி வி12 எஞ்சின் 700எச்பி பவரை அளிக்கும் வகையில் ட்யூனிங் செய்து பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0-96 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும் 2.6 டன் எடை கொண்ட இந்த சொகுசு கார். மணிக்கு 351 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

ஒரேயொரு கார்

ஒரேயொரு கார்

இது ப்ளூடா நிறுவனத்தின் புதிய வகை டயரை சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாடல். எனவே, ஒரே ஒரு கார்தான் தயாரிக்கப்பட்டது. மேலும், சோதனை முடிந்தபின் இதனை தனிநபர் பயன்படுத்துவதற்கான சான்றையும் பெற்றுவிட்டனர்.

பந்தம்

பந்தம்

மேபக் மற்றும் ப்ளூடா டயர் நிறுவனமும் இதுபோன்ற இணைந்து புதிய கார் மாடலை உருவாக்குவது புதிதல்ல. கடந்த 1938ல் மேபக் எஸ்டபிள்யூ38 லிமோசின் காரில் தனது புதிய டயரை பொருத்தி செயல்விளக்கம் செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

2011ல் இந்த காரை அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைகலைஞர் வில்லியம்ஸ் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் 8 மில்லியன் டாலர் விலையாக குறிப்பிடப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.48.6 கோடிக்கு விற்பனையானதாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2014, 13:39 [IST]
English summary
The Maybach Exelero is a high-performance sports car designed and built by German luxury car manufacturer Maybach. It was presented in May 2005 in Berlin, Germany.Famous rapped Bryan ‘Birdman’ Williams did purchase the car in 2011 for the $8 million price.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+