உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

வைரம் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

புகாட்டி, ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, மஸராட்டி மற்றும் மெக்லாரன் உள்ளிட்ட நிறுவனங்கள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களின் கார்களுக்கு உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் லக்ஸரி கார்களை வாழ்நாளில் ஒரு முறையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆனால் செல்வ செழிப்பில் திளைக்கும் வெகு சிலரால் மட்டுமே இந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. எஞ்சியவர்களின் கனவு நிறைவேறாமலேயே போய் விடுகிறது. இதற்கு காரணம் இந்த கார்களின் விலைதான். இதில், நீங்கள் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் என்றால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகதான் இருக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஏவியன் (Awain) என்ற நிறுவனம், உலகில் விற்பனை செய்யப்படும் மிக விலை உயர்ந்த கார்களுக்கு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாவிகளை உருவாக்கி வருகிறது. இதில், புகாட்டி, ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, மஸராட்டி மற்றும் மெக்லாரன் உள்ளிட்ட லக்ஸரி பிராண்டுகள் அடங்கும். ஏவியன் நிறுவனத்தின் வேலைப்பாடுகளுக்கு பாந்தம் (Phantom) ஒரு எடுத்துக்காட்டு.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதன் விலை 5,00,000 யூரோக்கள். இந்திய மதிப்பில் சொல்வதென்றால் ஏறத்தாழ 3.88 கோடி ரூபாய்!!! இந்த விலைக்கு இந்தியாவில் புத்தம் புதிய லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan Evo) காரை நீங்கள் வாங்கி விட முடியும். இந்த அரை மில்லியன் யூரோ விலைக்கு, ஏவியன் நிறுவனம் இதன் வெளிப்புற மேற்பரப்பில், 34.5 காரட் வைரம் மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஆபரண கற்களை வழங்குகிறது.இதுதவிர 175 கிராம் அளவிற்கு 18 காரட் தங்கமும் இடம்பெற்றிருக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதன் தனித்துவத்தை பராமரிப்பதற்காக ஒரே ஒரு பாந்தம் கீ செயின் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சற்று விலை குறைவான கீ செயின்களையும் கூட ஏவியன் நிறுவனம் விற்பனை செய்கிறது. செரினிட்டியை (Serenity) இதற்கு உதாரணமாக கூறலாம். இதன் விலை அதிகம் கிடையாது. 89,000 யூரோக்கள் மட்டும்தான். அதாவது இந்திய மதிப்பில் வெறும் 69 லட்ச ரூபாய் மட்டுமே.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அதிர்ச்சியடைய வேண்டாம். பாந்தமுடன் ஒப்பிடும்போது இதன் விலை பல மடங்கு குறைவுதான். இதில், 20 காரட் வைரம் மற்றும் 175 கிராம் தங்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதை விட குறைவான விலையில் நீங்கள் எதிர்பார்த்தால், ஏவியன் நிறுவனம் குவாண்டம் (Quantum) கார் கீ செயின்களை உங்களுக்கு வழங்குகிறது.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதன் விலை 49,000 யூரோக்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 38 லட்ச ரூபாய் மட்டும்தான். 3.6 காரட் வைரம் மற்றும் 175 கிராம் தங்கத்தால், குவாண்டம் கார் சாவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் செரினிட்டி மற்றும் குவாண்டம் ஆகிய கார் கீ செயின்கள் வெறும் 20 யூனிட்கள் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உருவாக்கப்படவுள்ளன.

உலகின் மிக விலை உயர்ந்த கார் சாவி இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இவ்வளவு விலை கொடுத்து கார் சாவியா? என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. சாமானியர்களால் இவற்றை வாங்குவது சாத்தியம் இல்லை என்றாலும், செல்வ செழிப்பு மிக்கவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவப்போவது உறுதி. முன்பெல்லாம் கார்கள்தான் ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும் அடையாளமாக பார்க்கப்பட்டன. இனி கார் சாவிகளும் அப்படி பார்க்கப்படும் சூழ்நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2019, 12:00 [IST]
English summary
World’s Most Expensive Car Key-Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+