500 கிலோ தங்கக் கட்டியில் செதுக்கப்பட்ட உலகின் காஸ்ட்லி லம்போர்கினி கார்!

உலகின் மோட்டார் வாகன ஆர்வலர்களின் கனவு கார் பிராண்டுகளில் ஒன்று லம்போர்கினி. லம்போர்கினி கார் பிராண்டுக்கு இருக்கும் மதிப்பை உணர்ந்து, தங்கத்திலான லம்போர்கினி மாதிரி கார் மாடல் ஒன்றை ஜெர்மனியை சேர்ந்த பிரபல வடிவமைப்பு நிபுணர் ராபர்ட் வில்ஹெம் குல்பெனும் அவரது நிறுவனத்தின் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

பெரும் விலை மதிப்பு கொண்ட இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

கடந்த 12 ஆண்டுகளாக விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் கற்களிலிருந்து சொகுசு கார் மாடல்களை ராபர்ட் வில்ஹெம் குல்பெனின் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதில், 4 கின்னஸ் சாதனைகளை படைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட கார் மாடல்தான் இது.

 கார் மாடலின் விபரம்

கார் மாடலின் விபரம்

லம்போர்கினி அவென்டேடார் LP 700- 4 காரின் மாதிரியாக கொண்டு இந்த தங்க காரை 1:8 என்ற விகிதத்திலான ஸ்கேல் மாடலாக உருவாக்கியுள்ளனர்.

 500 கிலோ தங்கக்கட்டி

500 கிலோ தங்கக்கட்டி

அரை டன் தங்கக்கட்டியில் இருந்து இந்த காரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உருப்பெற வைத்துள்ளனர். அதுசரி, 500 டன் தங்கக்கட்டியிலிருந்து உருப்பெற்ற இந்த காரின் இறுதியாக பெற்ற தங்கத்தின் எடை எவ்வளவு தெரியுமா?

 வெறும்...

வெறும்...

இறுதி வடிவம் பெற்ற பிறகு இந்த காரில் இருந்த தங்கத்தின் எடை 25 கிலோ மட்டுமே. ஆனாலும், அந்த 25 கிலோ தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்றே உங்களுக்கே தெரிந்திருக்கும். அதற்கு ஏன் 500 கிலோ தங்கக்கட்டியை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா... கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அந்த தங்கக்கட்டி பயன்படுத்தப்பட்டதாம்.

 விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த காரை 7.3 மில்லியன் டாலர்கள் விலையில் விற்பனை செய்ய ராபர்ட் வில்ஹேம் குல்பென் எஞ்சினியரிங் நிறுவனம் முடிவு செய்தது. அதில், 6.50 லட்சம் டாலர்கள் ஒரு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கார்பன் ஃபைபர் சட்டம்

கார்பன் ஃபைபர் சட்டம்

இந்த கார் கார்பன் ஃபைபர் சேஸீயின் அடிப்படையில் தங்க காராக வடிவமைக்கப்பட்டது. இந்த காரின் ஹெட்லைட்டுகளில் விலையுயர்ந்த வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு இருக்கைகளின் துணியிலும் தலா 700 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

கின்னஸ் சாதனைகள்

கின்னஸ் சாதனைகள்

4 கின்னஸ் சாதனைகளை படைக்கும் விதத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டது.

01. உலகின் மிகவும் விலையுயர்ந்த கார் மாடல்.

02. இந்த காருக்கான குண்டுதுளைக்காத கண்ணாடியிலான காட்சிப் பெட்டி

03. உலகின் மிகவும் சொகுசான ஆபரணச் சின்னம்

04. 500 கிலோ தங்கக்கட்டியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரே கார்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2015, 14:22 [IST]
English summary
Carved out of a 500kg solid block of gold, the latest lavish creation from Italian luxury sports car maker Lamborghini has gone on sale for $7.3m.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+