உலகின் காஸ்ட்லி மேக் டிரக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய மலேசிய சுல்தான்!
உலகின் மிகவும் காஸ்ட்லியான மேக் டிரக்கை மலேசியாவின் ஜோஹர் மாகாண சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்.
மிகவும் ஆடம்பரமான வசதிகளை கொண்ட இந்த காஸ்ட்லியான டிரக், ஆஸ்திரேலியாவில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட சூப்பர் லைனர் மேக் டிரக் குறித்த சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மேக் டிரக்
அமெரிக்காவை சேர்ந்த மேக் நிறுவனம் டிரக் மற்றும் பஸ் தயாரிப்பில் மிக பழமையானதும், பாரம்பரியம் மிக்கதுமாக விளங்குகிறது. 1900ம் ஆண்டு மேக் பிரதர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தற்போது வால்வோ குழுமத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஆலையில் மேக் டிரக்குகள் உற்பத்தியாகின்றன.

ஆஸ்திரேலியர்களின் கைவண்ணம்
மேக் டிரக் நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவுதான் இந்த டிரக்கை கஸ்டமைஸ் செய்துள்ளது. கஸ்டமைஸ் பணிகள் முடிந்ததையடுத்து, தனது நீண்ட நாள் கனவு வாகனமாக கருதிய, இந்த டிரக்கை பார்ப்பதற்காக, பிரிஸ்பேன் நகருக்கு சென்றிருக்கிறார் ஜோஹர் மாகாண சுல்தான் இஸ்மாயில். மேலும், பிரிஸ்பேன் நகரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட டிரக் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்புகள்
இந்த மேக் டிரக்கில் லெதர் இருக்கைகள் மற்றும் ஷோபா செட், நவீன கருவிகளுடன் கூடிய சமையலறை, இரண்டு ப்ளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சி பெட்டிகள், சோனி ப்ளே ஸ்டெஷன், பின்புறத்தில் பார்ட்டி நடத்துவதற்கான குடையுடன் கூடிய மேஜை என்று மிக அசத்தலாக இருக்கிறது.

இது தங்க புலி
இந்த டிரக்கின் பானட் பகுதியில் கட்டித் தங்கத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிறிய புலி சிலை ஒன்றும் உள்ளது. இது சுல்தானின் அந்தஸ்தை பரைசாற்றும் அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

பிரத்யேக வண்ணம்
ஜோஹர் மாகாண அரசின் கொடியை நினைவூட்டும் விதத்தில், நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு
இந்த மேக் டிரக்கின் பாதுகாப்புக்காக அனைத்து பகுதிகளையும் உள்ளிருந்து பார்ப்பதற்காக 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்
இந்த சூப்பர் லைனர் டிரக்கில், 6 சிலிண்டர்கள் கொண்ட 16 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது.

விலை மதிப்பு
இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட மேக் டிரக் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் கூடுதலான விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே தற்போதைக்கு அதிக விலை மதிப்பு கொண்ட மேக் டிரக் இதுவாகத்தான் குறிப்பிடப்படுகிறது.

டெலிவிரி
ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு கப்பல் மூலமாக இந்த டிரக் எடுத்துச் செல்லப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த மேக் டிரக் ஜோஹர் சுல்தான் கைக்கு கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சுல்தான் புகழாராம்
மேக் டிரக்கை எதிர்பார்த்தைவிட சிறப்பாக கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளதாக, மேக் டிரக் ஆஸ்திரேலிய பிரிவை ஜோஹர் சுல்தான் இஸ்மாயில் புகழ்ந்துள்ளார். மேலும், தனது நீண்ட நாள் கனவு வாகனமாகவும் இதனை குறிப்பிட்டுள்ளார்.

01. அமெரிக்கர்களின் பொழுதுபோக்கு கார்...
02. உலகின் மிகப்பெரிய விமானப்படைகள்...
03.கூடுதல் பாரம் ஏற்றிய வாகனங்களின் அலப்பறைகள்...

எமது ஃபேஸ்புக் பக்கம்
எமது டுவிட்டர் பக்கம்


Click it and Unblock the Notifications