இவர்தான் உலகின் வயதான விமான பைலட்... வயசு 'ஜஸ்ட்' 95 தான்!!

By Saravana

இன்றைய நிலையில் 50 வயதை தாண்டிவுடனேயே பலர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனால், படத்தில் இந்த 95வயது முதியவர் இன்றைக்கும் விமானத்தை இயக்கி அசத்துகிறார்.

விமானத்தை இயக்கும் தகுதியுடைய உலகின் மிக வயதான பைலட் என்ற அங்கீகாரத்தை தந்து சாதனை பதிவுப் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருக்கிறது கின்னஸ் புத்தகம். இவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அமெரிக்க பிரஜை

அமெரிக்க பிரஜை

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் கேமரூன் பார்க் பகுதியை சேர்ந்த பீட்டர் வெப்பர் தான் தற்போது விமானத்தை இயக்கும் தகுதியுடைய உலகின் வயதான விமான ஓட்டி என்ற பெருமைக்குரியவர்.

தள்ளாத வயதிலும் ஆர்வம்

தள்ளாத வயதிலும் ஆர்வம்

1919ம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி பிறந்த வெப்பருக்கு தற்போது 95வயது ஆகிறது. செஞ்சூரியை நோக்கி செல்லும் இந்த நேரத்திலும் தனது விமானம் ஓட்டும் ஆர்வத்தை அவர் விடவில்லை.

பழுத்த அனுபவம்

பழுத்த அனுபவம்

அமெரிக்க விமானப்படையில் வெப்பர் பணிபுரிந்தவர். முதல் இரண்டாம் உலகப்போர் மற்றும் வியட்நாம் போரில் போர் விமான பைலட்டாக பங்கெடுத்துள்ளார். மேலும், கொரிய போரில் விமான பயிற்சியாளராகவும் பணிபுரிந்தவர். 1970ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். விமானம் ஓட்டுவதில் 72 ஆண்டுகள் அனுபமிக்கவர்.

சாதனை நிகழ்வு

சாதனை நிகழ்வு

கடந்த மார்ச் 30ந் தேதி குட்டி விமானத்தை இயக்கி காண்பித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் வெப்பர் இடம் பிடித்தார். அன்றைய நாளில் அவர் 95 வயது 147 நாட்கள் உடையவராக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

தற்போது குட்டி விமானத்தை இயக்குகிறார். சமீபத்தில் அவர் டைமண்ட் டிஏ20 குட்டி விமானத்தை இயக்கியுள்ளார். மாதத்திற்கு குறைந்தது 2 முறையாவது விமானத்தை இயக்கிச் செல்வதை பொழுதுபோக்காக செய்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

விமானத்தை பற்றி...

விமானத்தை பற்றி...

சாதனை நிகழ்வின்போது அவர் இயக்கி காண்பித்த டைமண்ட் டிஏ20 குட்டி விமானம் ஆஸ்திரிய நாட்டு தயாரிப்பு. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானம் 256 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1,013 கிமீ தூரம் வரை பயணிக்கும். 529 கிலோ எடை கொண்டது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 21, 2015, 13:43 [IST]
English summary
The oldest active pilot is Peter Weber Jr (USA, b. 7 November 1919), who aged 95 years and 143 days still regularly flies light aircraft, as verified on 30 March 2015.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+