பாதுகாப்பான சேவையை வழங்கும் உலகின் டாப் 20 விமான நிறுவனங்கள்!

By Saravana

விரைவான, மனதிற்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் விமானப் பயணங்கள் சில சமயங்களில் பேராபத்தில் முடிந்து விடுகின்றன. வானிலை உள்ளிட்ட சமாச்சாரங்கள் ஒரு புறம் இருந்தாலும், மனித தவறு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள்தான் முக்கிய விஷயமாகிவிடுகிறது. இதற்கு காரணம் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்குவதும், விமானிகளின் தவறான முடிவுகளும் காரணமாகிவிடுகிறது.

ஆனால், சிறப்பான பராமரிப்பு மற்றும் தகுதியும், திறமையும் மிக்க ஊழியர்களை கொண்டிருக்கும் சில விமான நிறுவனங்கள் விபத்து என்ற பேச்சுக்கே இடமில்லாமல் விமானங்களை இயக்கி வருகின்றன. அதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதத்தில், ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் என்ற தளம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் பயணிகளுக்கு மிக பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் டாப் 20 விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச விமான போக்குவத்து அமைப்பில் பதிவு செய்திருக்கும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 407 விமான நிறுவனங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதில் கடந் ஆண்டு விபத்தில்லா சேவையை வழங்கியிருக்கும் நிறுவனங்களுக்கு மதிப்பெண்களை வழங்கி, பட்டியலிட்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

20. வெர்ஜின் ஆஸ்திரேலியா

20. வெர்ஜின் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனம் வெர்ஜின் ஆஸ்திரேலியா. ஏர்லைன்ஸ்.காம் பாதுகாப்பு தரவரிசை பட்டியலில் 20வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டில் இரண்டு விமானங்களுடன் சேவையை துவங்கிய இந்த நிறுவனத்திடம் தற்போது 110 விமானங்கள் உள்ளன. 50 நகரங்களுக்கு விமான இணைப்பு சேவையை வழங்கி வருகிறது.

 19. வெர்ஜின் அட்லான்டிக்

19. வெர்ஜின் அட்லான்டிக்

இங்கிலாந்தை சேர்ந் இந்த நிறுவனம் கடந்த 1984ம் ஆண்டு விமான சேவையை துவங்கியது. தற்போது 40 விமானங்களுடன் 31 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. ஏர்பஸ், போயிங் வைடு பாடி ரக விமானங்களை வட அமெரிக்கா, கரிபீயன், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கி வருகிறது.

18. யுனைடைட் ஏர்லைன்ஸ்

18. யுனைடைட் ஏர்லைன்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த யுனைடைட் ஏர்லைன்ஸ் உலகின் மிக பழமையான விமான சேவை நிறுவனங்களில் ஒன்று. சிகாகோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் பாதுகாப்பான விமான பயணத்தை வழங்குவதில் 18வது இடத்தை பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது 718 விமானங்களை 375 நகரங்களுக்கு இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 85,000 பேர் பணியாற்றுகின்றனர்.

17. ஸ்விஸ் ஏர்லைன்ஸ்

17. ஸ்விஸ் ஏர்லைன்ஸ்

2005ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 17வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிறுவனத்திடம் 16 விமானங்கள் உள்ளன. 36 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. லூஃப்தான்ஸா குழுமத்தின் அங்கமாக செயல்டுகிறது.

16. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

16. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

தமிழகத்தினர் அதிகம் பயணிக்கும் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1972ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 109 விமானங்கள் உள்ளன. 64 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. இந் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக சில்க் ஏர், ஸ்கூட் மற்றும் டைகர்ஏர் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

15. ஸ்கேன்டிநேவியன் ஏர்லைன் சிஸ்டம்

15. ஸ்கேன்டிநேவியன் ஏர்லைன் சிஸ்டம்

டென்மார்க்-நார்வே-ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியின் விமான சேவை நிறுவனமாக செயல்படுகிறது. இந்த நிறுவனத்திடம் 139 விமானங்கள் உள்ளன. 104 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. ஐரோப்பாவின் பழமையான விமான நிறுவனங்களுள் ஒன்று.

14. லூஃப்தான்ஸா

14. லூஃப்தான்ஸா

தமிழர்கள் மேலை நாடுகளுக்கு செல்வதற்கு லூஃப்தான்ஸா விமான சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனம்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 19 துணை விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்திடம் தனியாக 266 விமானங்கள் உள்ளன. சென்னை உள்பட உலகின் 220 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

13. கேஎல்எம் ஏர்லைன்ஸ்

13. கேஎல்எம் ஏர்லைன்ஸ்

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஏர்பிரான்ஸ்- கேஎல்எம் கூட்டணியில் செயல்படுகிறது. உலகின் மிக பழமையான விமான சேவை நிறுவனமாக கூறப்படுகிறது. 116 விமானங்களுடன் 138 நகரங்களுக்கு சேவை வழங்குகிறது.

12. ஜப்பான் ஏர்லைன்ஸ்

12. ஜப்பான் ஏர்லைன்ஸ்

பட்டியலில் 12வது இடத்தில் இருக்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ், ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனம். 197 விமானங்களை வைத்திருக்கும் இந்த நிறுவனம் 92 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

11. ஹவாயியன் ஏர்லைன்ஸ்

11. ஹவாயியன் ஏர்லைன்ஸ்

அமரிக்காவின் மிக பழமையான மற்றும் அந்நாட்டின் 8வது பெரிய விமான சேவை நிறுவனம். இந்த நிறுவனத்திடம் 52 விமானங்கள் உள்ளன. 28 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

10. ஃபின்ஏர்

10. ஃபின்ஏர்

பின்லாந்து நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம். இந்த நிறுவனம் 60 ஐரோப்பிய நகரங்களுக்கும், 13 ஆசிய நகரங்களுக்கும் விமான சேவை அளித்து வருகிறது. 72 விமானங்களுடன் 88 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. உலகின் பழமையான விமான நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு, தொடர்ந்து பாதுகாப்பான சேவை அளிக்கும் விமான நிறுவனம் என்ற பெருமையையும் பெற்று வருகிறது.

09. இவிஏ ஏர்

09. இவிஏ ஏர்

தைவான் நாட்டு விமான சேவை நிறுவனம். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நகரங்களுக்கு விமான சேவையை அளிக்கிறது. 63 விமானங்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் 74 நகரங்களுக்கு சேவை அளிக்கிறது.

08. எதிஹாட் ஏர்வேஸ்

08. எதிஹாட் ஏர்வேஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனம். 119 விமானங்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் 90 நகரங்களுக்கு சேவை அளித்து வருகிறது. சொகுசான, பாதுகாப்பான சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது.

 07. எமிரேட்ஸ்

07. எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம். பாதுகாப்பான சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருக்கிறது. 1985ம் ஆண்டு துவங்கப்பட் இந்த நிறுவனம் தற்போது 245 விமானங்களை கொண்டு 164 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஏர்ப்ஸ ஏ380 விமானங்களை இயக்குவதுடன் மொத்தமாக 140 ஏ380 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது.

06. கத்தே பசிஃபிக் ஏர்வேஸ்

06. கத்தே பசிஃபிக் ஏர்வேஸ்

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களுள் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. அதேநேரத்தில், உலகின் மூன்றாவது பெரிய விமான சேவை நிறுவனம் என்பதையும் குறிப்பிட வேண்டும். 187 விமானங்களுடன் செயல்படும் இந்த நிறுவனம் 177 நகரங்களுக்கு சேவை அளிக்கிறது. உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனம் என்ற பெருமையை 4 முறை பெற்றிருக்கிறது கத்தே பசிஃபிக்.

05. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

05. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டு சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் இந்த நிறுவனத்திடம் 953 விமானங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 344 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

04. ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ்

04. ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ்

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளை அளிக்கிறது. இந்த நிறுவனத்திடம் 208 விமானங்கள் உள்ளன. 73 நகங்களுக்கு சேவையளித்து வருகிறது. இதனை ஐந்து நட்சத்திர விமான சேவை நிறுவனமாக ஸ்கைட்ராக்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

03. அலாஸ்கா ஏர்லைன்ஸ்

03. அலாஸ்கா ஏர்லைன்ஸ்

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களில் டாப்-3 பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது அலாஸ்கா ஏர்லைன்ஸ். 1932ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது. 147 விமானங்களுடன் 104 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

02. ஏர் நியூஸிலேண்ட்

02. ஏர் நியூஸிலேண்ட்

நியூஸிலாந்து நாட்டின் பொதுத் துறை நிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் 16 நாடுகளில் 51 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. 106 விமானங்களை வைத்திருக்கிறது. 2010ம் ஆண்டின் சிறந்த விமான சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

 01. காந்தாஸ்

01. காந்தாஸ்

ஒரு சிறிய விபத்து கூட இல்லாமல் இயக்கப்பட்ட விமான நிறுவனம் என்ற பெருமையுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந் காந்தாஸ் உலகின் மிகவும் பாதுகாப்பான சேவையை வழங்கும் விமான நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது. கேஎல்எம் மற்றும் அவியன்கா ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 1920ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 1921 முதல் விமான சேவையை வழங்கி வருகிறது. உலகின் பழமையான மூன்றாவது விமான சேவை நிறுவனம். 131 விமானங்களுடன் 85 நாடுகளுக்கு சேவையளித்து வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு இடமில்லை...

பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு இடமில்லை...

இந்த பட்டியலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
world's safest airlines for 2016.
Story first published: Wednesday, January 6, 2016, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X