குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான சேவையை வழங்கும் டாப் - 10 விமான நிறுவனங்கள்!

By Saravana

விமானப் பயணங்களில் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து இருக்கும் சூழலில், மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கிய குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் டாப் - 10 விமான நிறுவனங்களின் பட்டியலை ஏர்ரேட்டிங்க்ஸ்.காம் வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இயக்கப்பட்ட சேவைகளின் அடிப்படையில், விபத்துக்கள் குறைவான அல்லது விபத்தே இல்லாத பயணத்தை வழங்கிய விமான நிறுவனங்களை புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தேர்வு செய்து, அதில் டாப் 10 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படியல் வரிசைப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில்கொள்க.

வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ்

வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ்

கனடா நாட்டின் குறைந்த கட்டண சேவை விமான நிறுவனம். அமெரிக்கா, ஐரோப்பா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரிபீயன் நாடுகளுக்கு விமான சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. 1996ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் தற்போது 141 விமானங்கள் உள்ளன. 100 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. நீண்ட தூர வழித்தடங்களில் போயிங் 737 நெக்ஸ்ட் ஜெனரேஷன் மற்றும் போயிங் 767 விமானங்களை பயன்படுத்துகிறது. பிற வழித்தடங்களில் பாம்பார்டியர் க்யூ400 விமானத்தை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகிறது.

வோலரிஸ் ஏர்லைன்ஸ்

வோலரிஸ் ஏர்லைன்ஸ்

மெக்ஸிகோ நாட்டின் குறைந்த கட்டண சேவை விமான நிறுவனம். 2005ம் ஆண்டு சேவையை துவங்கிய இந்த நிறுவனத்திடம் தற்போது 55 விமானங்கள் உள்ளன. 68 நகரங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது.

வெர்ஜின் அமெரிக்கா

வெர்ஜின் அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் 2007ம் ஆண்டிலிருந்து குறைந்த கட்டண சேவையை வழங்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்திடம் தற்போது 58 விமானங்கள் உள்ளன. 24 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

டியூஐ ப்ளை

டியூஐ ப்ளை

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த குறைந்த கட்டண சேவை விமான நிறுவனம். 1981ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த விமான நிறுவனத்திடம் 9 விமானங்கள் உள்ளன. 53 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

தாமஸ் குக் ஏர்லைன்ஸ்

தாமஸ் குக் ஏர்லைன்ஸ்

இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் ஏர்லைன்ஸ் நிறுவனம். 29 விமானங்களை வைத்திருக்கும் இந்த நிறுவனம், ஐரோப்பா, ஆப்ரிக்கா, கரிபீயன், வட அமெரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களை சேர்ந்த 95 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியா

ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த குறைந்த கட்டண விமான நிறுவனமும் பாதுகாப்பான சேவை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 70 விமானங்களுடன் 35 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை பயன்படுத்துகிறது. ஜெட்ஸ்டார் ஏசியா ஏர்வேஸ், ஜெட்ஸ்டார் பசிஃபிக் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட்ஸ்டார் ஜப்பான் ஆகியவையும் ஜெட்ஸ்டார் குழுமத்தின் கீழ் செயல்படும் இதர விமான நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்புளூ

ஜெட்புளூ

அமெரிக்காவின் குறைந்த கட்டண விமான நிறுவனம். அமெரிக்காவின் 5வது பெரிய விமான நிறுவனமாகவும் விளங்குகிறது. மொத்தம் 213 விமானங்களுடன் 97 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

எச்கே எக்ஸ்பிரஸ்

எச்கே எக்ஸ்பிரஸ்

ஹாங்காங்கை சேர்ந்த இந்த விமான நிறுவனம் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான சேவையை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. சீனா, ஜப்பாந், கொரியா, தாய்வான் உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் தனது சேவையை வழங்கி வருகிறது. 2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 12 விமானங்கள் உள்ளன. 23 நகரங்களுக்கு சேவையளிக்கிறது.

ப்ளைபி

ப்ளைபி

1979ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் குறைந்த கட்டண சேவையில் பிரபலமான ஐரோப்பிய விமான நிறுவனம். 73 விமானங்களுடன் 102 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

ஏர் லிங்கஸ்

ஏர் லிங்கஸ்

அயர்லாந்து நாட்டை சேர்ந்த விமான நிறுவனம். 1936ல் சேவையை துவங்கிய இந்த நிறுவனம் உலகின் பழமையான விமான நிறுவனங்களில் ஒன்று. இந்த விமான நிறுவனத்திடம் 46 விமானங்கள் உள்ளன. 82 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
world's safest top 10 low cost airlines for 2016.
Story first published: Friday, January 8, 2016, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X