Just In
- 46 min ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 53 min ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 1 hr ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- 2 hrs ago
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
Don't Miss!
- News
நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஈபிள் கோபுரத்தை விடவும் உயரம்... இந்தியாவில் கட்டப்பட்டுவரும் உலகிலேயே உயரமான இரயில் மேம்பாலம்...
உலகிலேயே உயரமான இரயில் பாதை ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதிக்கு மேலே கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் தீவிரமாக கட்டப்பட்டுவரும் இந்த இரயில் மேம்பால பணிகள் 2022ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 467 மீட்டரில் மையத்தை கொண்ட இந்த பாலம் கீழே தரையில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள குதும்பினார் கோபுரத்தின் உயரம் 72 மீட்டர் மற்றும் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரம் 324 மீட்டர் ஆகும். ஆனால் இந்த இரயில் மேம்பாலம் இவை அனைத்தையும் காட்டிலும் உயரமான இடத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள இரயில் பாதையாக விளங்கவுள்ள இந்த பாலம் அதிகப்பட்சமாக 266kmph காற்று வேகத்தை எதிர் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துடன் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பரமுல்லா இரயில் இணைக்கும் விதமாக 272கிமீ நீளத்தில் கட்டப்பட்டுவரும் இரயில் தடவாள பணிகளும் 2022ல் நிறைவு பெற்றுவிடும் என தெரிகிறது.

இந்த உயரமான இரயில் பாலம் குறித்து ஜம்மு & காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா கூறுகையில், ரூ.27,949 கோடியில் 161கிமீ தூரத்திற்கான இரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்ட இந்த பணிகளில் கத்ராவில் இருந்து பனிஹல் நகரங்கள் இடையே பணிகள் தான் மீதியாக உள்ளன.

இதனால் 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்னதாக இந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளவர், இந்த திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க செயல்படுத்தும் முகவர்களுக்கான உதவிகளை உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார்.

359 மீட்டர் உயரத்தில் உலகிலேயே உயரமான இரயில் மேம்பாலமாக விளங்கவுள்ள இதனுடன் ரியசி, அஞ்சி நல்லா பகுதியில் கட்டப்பட்டுவரும் இந்தியாவின் முதல் கேபிள் இரயில் பாலமும் இணையவுள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜூரி-பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதிகளை இணைக்கும் விதமாகவும் இரயில் பாதையை கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிக்களுக்கு சின்கா கட்டளையிட்டுள்ளார். ஜம்மு-பூஞ்ச் இணைப்பு 223கிமீ இரயில் பாதை பணிகள் ரூ.22,768 கோடி செலவில் 2017ல் முடிக்கப்பட்டது.

அதன்பின் 39 கிமீ நீளத்தில் பரமுல்லா - குப்வாரா இணைப்பு பணிகள் ரூ.3,843 கோடியில் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மொத்தம் 1,315 மீட்டர் நீளத்தில் வெடிகுண்டு மற்றும் நில அதிர்வுகள் போன்றவற்றை தாங்கும் விதத்தில் இந்த இரயில் பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அவ்வளவு உயரத்தில் அதிக காற்று திசை வேகத்தால் இரயிலின் இயக்கம் தடைப்படாமல் இருக்க சமிக்ஞை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. -20 டிகிரி வரையிலான வெப்பநிலையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்ற இந்த மேம்பாலத்திற்காக 5,462 டன் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் இரயில் அதிகப்பட்சமாக 100kmph என்ற வேகத்தில் இயங்கலாம் என கூறப்படுகிறது. பொறியியலாளர்களின் கை வண்ணத்தில் உருவாகும் இந்த மேம்பாலத்தை காண இப்போதே ஆர்வமாக உள்ளது. அம்பு வடிவிலான தோற்றத்தில் கட்டப்படும் இந்த பாலம் மொத்த 7 மணிநேர பயணத்திற்கான இந்த இரயில் தண்டாள பணிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Image Courtesy: AFCONS