உலகின் சிறந்த விமானம் நிலையமாக சிங்கப்பூர் சாங்கி தேர்வு!

By Saravana

உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை தொடர்ந்து 4-வது ஆண்டாக பெற்று அசத்தியிருக்கிறது சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம். இரண்டாவது இடத்தை சியோல் இன்சியோன் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை மூனிச் விமான நிலையமும் தொடர்ந்து தக்க வைத்துள்ளன.

உலகின் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் அமைப்பு. விமான முனையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான சொகுசு வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில், இந்த பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் வெளியிட்டிருக்கிறது. உலக அளவில் 13 மில்லியன் பயணிகள் அளித்த கருத்துக்களின் அடிப்படையில், உலகின் சிறந்த விமான நிலையங்களின் டாப் 10 பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதில், எந்தெந்த விமான நிலையங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை பெற்றிருக்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் சிறப்பம்சங்களை அடுத்தடுத்து 3 ஸ்லைடுகளிலும், அதைத்தொடர்ந்து, உலகின் டாப் 10 விமான நிலையங்களையும் காணலாம்.

நம்பர்- 1 சிங்கப்பூர்

நம்பர்- 1 சிங்கப்பூர்

சுற்றுலாவுக்கும், வர்த்தகத்தற்கும் பெயர் பெற்று விளங்கும் சிங்கப்பூரில் அமைந்துள்ள சாங்கி விமான நிலையத்தில் மூன்று முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 66 மில்லியன் பயணிகள் வரை பயன்படுத்தும் வசதிகள் கொண்டது.

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிகள்

பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் விமான நிலையம் என்ற பெருமையையும் சிங்கப்பூர் சாங்கி பெற்றுள்ளது. இந்த விமான நிலையத்தின் 2வது மற்றும் 3வது முனையத்தில் திரையரங்குகளும், 2வது முனையத்தில் பூங்காவும், முதல் முனையத்தில் உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. குறிப்பாக, இதன் ரூஃப்டாப் நீச்சல் குளம் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சாங்கி சிறப்புகள்

சாங்கி சிறப்புகள்

கடந்த 2014ம் ஆண்டு நான்காவதாக புதிய முனையத்தை அமைக்கப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது. அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் இந்த முனையத்தின் மூலம் 16 மில்லியன் பயணிகளை கையாள முடியும். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையங்களால் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு கடும் போட்டி இருக்கிறது. எனவே, 5வது முனையத்தை அமைக்கவும் சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளது. இது தற்போதைய விமான நிலையத்தைவிட பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர்- 2 சியோல்

நம்பர்- 2 சியோல்

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 39.2 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வசதி கொண்டது. 70க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன. 2005ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கொரியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் சுகாதாரம், உணவு வகைகளுக்கு பெயர் போனது.

நம்பர்- 3 மூனிச்

நம்பர்- 3 மூனிச்

விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பு மிகுந்த விமான நிலையம் ஜெர்மனியில் உள்ள மூனிச் விமான நிலையமாகும். ஆண்டுக்கு 37.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த விமான நிலையத்தின் உள்ளலங்கார வேலைப்பாடுகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். உணவு மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு சிறந்த ஐரோப்பிய விமான நிலையம் என்ற பெருமை கொண்டது.

 நம்பர் - 4 டோக்கியோ

நம்பர் - 4 டோக்கியோ

கடந்த ஆண்டு பட்டியலில் 6வது இடத்தில் இருந்த, ஐப்பானிய தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு 4வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இந் விமானம் ஆண்டுக்கு 62.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வசதிகொண்டது. இது மூன்று முனையங்களை கொண்டது. ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகள் வந்துசெல்வதற்கான வசதியை பெற்றிருக்கிறது. பாதுகாப்பு, சுத்தம் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு இந்த விமான நிலையம் பிரபலமாக இருக்கிறது.

நம்பர்- 5 ஹாங்காங்

நம்பர்- 5 ஹாங்காங்

கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த ஹாங்காங் விமான நிலையம், இந்த ஆண்டு பட்டியலில் ஒருபடி கீழே இறங்கி 5வது இடத்தை பிடித்துள்ளது. சீனாவின் சிறப்பு அந்தஸ்து கொண்ட சிறந்த சுற்றுலா நகரமான ஹாங்காங்கில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 53.3 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் வசதி கொண்டது. இந்த விமான நிலையமும் உலகின் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் ஒன்று. சுகாதாரம் மற்றும் பொருட்களை கையாள்வதில் சிறந்த விமான நிலையமாக பெயர்பெற்றது. ஷாப்பிங் செய்வதற்கும் ஏற்ற விமான நிலையமாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த விமான நிலையத்தில் கோல்ஃப் மைதானம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் உள்ளன.

நம்பர்- 6 சுபு சென்ட்ரயர் நகோயா

நம்பர்- 6 சுபு சென்ட்ரயர் நகோயா

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம், 6வது இடத்தை பிடித்துள்ளது. கரைக்கு அருகில் கடலில் அமைக்கப்பட்ட மூன்றாவது ஜப்பானிய விமான நிலையம். இந்த விமான நிலையம் பஸ், ரயில், படகு மற்றும் வாகனப் போக்குவரத்துடன் சிறப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையமும் ஷாப்பிக் செய்வதற்கு ஏற்ற சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது. 3வது தளத்தில் வரி இல்லா பொருட்கள் விற்பனையகமும் செயல்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டும் நடக்கிறது.

நம்பர்- 7 ஸூரிச்

நம்பர்- 7 ஸூரிச்

கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த இந்த விமான நிலையம், தற்போது ஒருபடி முன்னேறி, ஏழாவது இடத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப்பூமியாக கூறப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள ஸூரிச் விமான நிலையம் பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. இந்த விமான நிலையத்தில் இருக்கும் தானியங்கி சுரங்க ரயில் சேவையும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஒன்று. இந்த விமான நிலையத்தில் பொருட்களை வீட்டிற்கோ அல்லது குறிப்பிடும் இடத்திற்கே வந்து டெலிவிரி கொடுக்கும் வசதியும் இருக்கிறது. ஆண்டுக்கு 24.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

நம்பர்-8 லண்டன் ஹீத்ரூ

நம்பர்-8 லண்டன் ஹீத்ரூ

கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த ஹீத்ரூ விமான நிலையம், இந்த ஆண்டு 8வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆண்டுக்கு 69.4 பயணிகள் வந்து செல்லும் லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையம், 2011ல் உலகின் மூன்றாவது பரபரப்புமிக்க விமான நிலையமாக பெயர் பெற்றது. இந்த விமான நிலையத்தின் 5வது முனையம் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடமாக விருது பெற்றது. பயணிகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பொது போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்கான 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக ஸ்கைட்ராக்ஸ் அறிவித்தது.

நம்பர்- 9 கன்சாய்

நம்பர்- 9 கன்சாய்

இந்த ஆண்டு பட்டியலில் மூன்று ஜப்பானிய விமான நிலையங்கள் ஆக்கிரமித்துவிட்டன. ஆம், டாப் 10 பட்டியலில் ஜப்பானிலுள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் 9வது இடத்தை பெற்றிருக்கிறது. ஒசாகா விமான நிலையம் அதிக பயணிகள் நெருக்கடியால் அவதிப்பட்டதையடுத்து, 1994ம் ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இதுவும் கடலில் செயற்கையாக அமைக்கப்பட்ட மண் திட்டில் கட்டப்பட்ட விமான நிலையம். இந்த விமான நிலையத்தில், தரை இறங்குவதற்கு விமான நிலையங்களுக்கு அதிக பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பல நிறுவனங்கள் தவிர்க்க துவங்கின. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கியது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடந்த 2013ம் ஆண்டு ஜப்பானிய அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியுடன் செயல்பட்டு வருகிறது.

10. தோஹா

10. தோஹா

கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் 10வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விமான நிலையம், வெகு விரைவாக டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளது. இந்த விமான நிலையில், உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380ஐ தரை இறக்கும் வசதி கொண்டது. இந்த விமான நிலையத்தில் 2 கிமீ தொலைவு கொண்ட இரண்டு ஓடுபாதைகள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு 29 மில்லியன் பயணிகளை கையாளும் திறன்கொண்டது. பயணிகளுக்கான சொகுசு வசதிகள், ஷாப்பிக் செய்வதற்கான வசதிகளுடன் வசீகரிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2016, 12:29 [IST]
English summary
Tamil World's Top 10 International Airports Listed By Skytrax.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+