விமான பயணிகள் கவனத்திற்கு... இந்த விமான நிறுவனம் தான் உலகத்துலயே ரொம்ப மோசமாம்..
விமான சேவை அளிக்கும் உலகின் டாப்-5 நிறுவனங்கள் எது என்பது குறித்து ஆய்வுகள் அடிப்படையில் இந்த தொகுப்பில் தகவல்களை காணலாம்.
உலக அளவில் எண்ணற்ற விமான சேவை அளிக்கும் ஏர்லைன் நிறுவனங்களுள் எது சிறந்தது என்பது குறித்து ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

உலகில் உள்ள விமான நிறுவனங்களின் சேவைத் தரம் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாய்ஸ் என்ற அமைப்பு, உலகலாவிய அளவில் ஒரு சர்வேவை நடத்தியது.

அதிக விமான சேவைகள் உள்ள 8 நாடுகளில், 11,273 பயணிகளிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

இதன் முடிவில் உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான சேவை நிறுவங்கள் எது என்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

உலகம் முழுதும் மொத்தம் 73 விமான சேவை நிறுவனங்கள் இந்த சர்வேயில் கணக்கில் கொள்ளப்பட்டன.

இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் 73வது இடத்தை பெற்று உலகின் மோசமான விமான நிறுவனம் என்ற அவப்பெயரை எடுத்துள்ளது.

விமானம் ரத்து செய்யப்படுவது, காலதாமதமான விமான சேவை,
உள்கட்டமைப்பு, வாடிக்கையாளர் சேவை, நிறுவனத்தின் இணைய சேவை.

விமானத்தில் வசதிகள், இருக்கை, விமானத்தில் அளிக்கப்படும் உபசரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டன.

இந்த அம்சங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக பயணிகளின் திருப்தியில் 5-க்கு 1 ஸ்டார் என்ற மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளது ஜெட்ஸ்டார் நிறுவனம்.

இதே போல விமானத்தில் அளிக்கப்படும் வசதி அடிப்படையில் 10க்கு 4.51 மதிப்பெண்ணும், நிறுவனத்தின் இணையத்திற்கு 4.81 மதிப்பெண்கள் மட்டுமே அந்நிறுவனம் பெற்றுள்ளது.

சாய்ஸ் நிறுவனம் நடத்திய சர்வேயில் பங்குகொண்டவர்கள் ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தால் அதிகமான விமான ரத்து மற்றும் தாமதம் உள்ளிட்ட அசவுரியங்களை அனுபவித்ததாக கூறினர்.

ஜெட்ஸ்டார் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பெரிய விமான சேவை நிறுவனமாக விளங்கும் க்வாண்டாஸ்-ன் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

க்வாண்டாஸ் விமான நிறுவனம் ஒட்டுமொத்தமாக 5க்கு 3 மதிப்பெண் பெற்று 36வது இடம் பெற்றுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

சாய்ஸ் நிறுவனம் நடத்திய சர்வேவேயின்படி உலகின் டாப்-5 விமான நிறுவனங்களும் அவை வாங்கியுள்ள மதிப்பெண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- எமிரேட்ஸ் - 8.29
- ஏவியேன்கா - 8.17
- கத்தார் ஏர்வேஸ் - 8.15
- லக்ஸ்ஏர் - 8.1
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - 8.1

இந்த பட்டியலில் 73வது இடம்பிடித்து உலகின் மோசமான விமான சேவை நிறுவனம் என்ற அவப்பெயரை எடுத்துள்ள ஜெட்ஸ்டார் பட்ஜெட் விலையில் விமான சேவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








