ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் இளவயது பெரும் கோடீஸ்வரி... யூஸ்டு கார்களை பயன்படுத்துகிறாராம்!

By Saravana

2016ம் ஆண்டின் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில், உலகின் மிகவும் இளவயது கோடீஸ்வரி என்ற பெருமையை நார்வே நாட்டை சேர்ந்த அலெக்ஸான்ட்ரா ஆன்டர்சென் பெற்றிருக்கிறார்.

மிக இளவயதில் எளிமையான சில விஷயங்களை இவர் கடைபிடிக்கிறார். அதில் ஒன்றாக, இவர் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கி பயன்படுத்துகிறார் என்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது.

ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியல்

உலகின் 67 நாடுகளை சேர்ந்த 1,810 பில்லியனர்களை தனது பட்டியலில் சேர்த்து வரிசைப்படுத்தியிருக்கிறது ஃபோர்ப்ஸ். அதில், உலகின் மிக இளவயது பெண் கோடீஸ்வரி என்ற பெருமையை அலெக்ஸான்ட்ரா பெற்றிருக்கிறார்.

 சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் பட்டியலில் உலகின் இளவயது பெண் கோடீஸ்வரி என்ற பட்டத்தை பெற்றிருக்கும் இவர், ஒட்டுமொத்த பட்டியலில் 1,475வது இடத்தையே பிடித்திருக்கிறார். இவரிடம் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

எப்படி வந்தது?

எப்படி வந்தது?

நார்வே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஃப்ரெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அதிபரான ஜோஹன் எஃப் ஆன்டர்சனின் மகள்தான் அலெக்ஸான்ட்ரா. கடந்த 2007ம் ஆண்டில் ஃப்ரெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை அலெக்ஸான்ட்ரா மற்றும் அவரது மூத்த சகோதரியான கேத்தரீனா(20) பெயர்களுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, தற்போது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் அலெக்ஸான்ட்ராவும் தற்போது இடம்பெற்றுள்ளார்.

யூஸ்டு கார்

யூஸ்டு கார்

தனது தந்தையின் கொள்கையின்படியே, இவர் புதிய கார்களை வாங்குவதை தவிர்த்து, யூஸ்டு கார்களை வாங்கி பயன்படுத்துகிறாராம். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரி கேத்தரீனாவும் யூஸ்டு கார்களையே பயன்படுத்துகிறாராம். அதேபோன்று, தண்ணீர் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

குதிரை பந்தய வீராங்கனை

குதிரை பந்தய வீராங்கனை

நார்வே நாட்டை சேர்ந்த அலெக்ஸான்ட்ரா தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். கார்களில் அதிக நாட்டம் செலுத்தாவிட்டாலும், அலெக்ஸான்ட்ரா குதிரை ஏற்றத்தில் ஆர்வமானவர். பெலமர் என்ற பெயர் கொண்ட குதிரையை அவர் வைத்திருக்கிறார். மேலும், பல்வேறு குதிரை பந்தயப் போட்டிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார்.

முதலிடத்தில்...

முதலிடத்தில்...

அலெக்ஸான்ட்ராவுக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஃபோர்ப்ஸ் இதழில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ். கம்ப்யூட்டரே உலகம் என்றிருந்தவரை, மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது அவரது மோட்டார் உலகம்தான். ஆம், பில்கேட்ஸ் போர்ஷே கார் பிரியர்.

போர்ஷே 911 டர்போ

போர்ஷே 911 டர்போ

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் துவங்கப்பட்டு சில ஆண்டுகளில் போர்ஷே 911 டர்போ காரை பில்கேட்ஸ் வாங்கினார். இந்த காரில் செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அவ்வப்போது குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த காரை 1990ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டார்.

விலை போகாத கார்

விலை போகாத கார்

டோரோதியம் என்ற ஏல நிறுவனம் பில்கேட்ஸ் பயன்படுத்திய 1979 ஆண்டு மாடல் போர்ஷே 911 டர்போ காரை ஏலத்தில் விற்பனை செய்தது. 80,000 டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த கார் வெறும் 62,000 டாலருக்கு மட்டுமே விலை போனது. இந்த காரில் 300 எச்பி பவரை அளிக்கும் 3.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

போர்ஷே 911 கரீரா

போர்ஷே 911 கரீரா

பில்கேட்ஸ் கராஜில் 1999 போர்ஷே 911 கரீரா கேப்ரியோலெட் கார் ஒனறும் இடம்பிடித்தது. பல கார் பிரியர்களை கட்டிப்போட்ட இந்த உயர்வகை கார் மாடல் பில்கேட்ஸ் மனதையும் சுண்டி இழுத்துள்ளது. வேக விரும்பியான பில்கேட்ஸுக்கு போர்ஷே கரீரா கார் எந்தளவு கவர்ந்தது என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

கரீரா பெர்ஃபார்மென்ஸ்

கரீரா பெர்ஃபார்மென்ஸ்

போர்ஷே 911 கரீரா காரில் 296 எச்பி பவரை அளிக்கும் 3.4 லிட்டர் 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டும். இதுதவிர, மிகவும் பிரத்யேகமான போர்ஷே கார் ஒன்றையும் அடம் பிடித்து பில்கேட்ஸ் தனது கராஜில் இணைத்தார். அது எந்த மாடல் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

போர்ஷே 959

போர்ஷே 959

போர்ஷேவிடமிருந்து வந்த மிகவும் பிரத்யேகமான கார் மாடல்களில் ஒன்று போர்ஷே 959. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கார்களை இறக்குமதி செய்வது எளிதான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த கார் சேகரிப்பாளர்களுக்கான மாடலாக குறிப்பிட்டு கிராஷ் டெஸ்ட்டுகளுக்கு உட்படுத்தவில்லை. இதனால், இந்த காரை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் எழுந்தன.

விடாத கேட்ஸ்!

விடாத கேட்ஸ்!

ஆனால், 500 கார்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் கார்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது வழக்கம். இதனை வைத்து பில்கேட்ஸ் போர்ஷே 959 காரை பெருமுயற்சிக்கு பின் இறக்குமதி செய்துள்ளார். தற்போதும் இந்த காரில் அவ்வப்போது செல்வது பில்கேட்ஸுக்கு பிடித்தமான ஒன்றாக தெரிவிக்கின்றனர்.

ஃபோர்டு ஃபோகஸ்

ஃபோர்டு ஃபோகஸ்

விலையுயர்ந்த கார் மட்டுமின்றி, தனது சொந்த நாட்டு தயாரிப்பான ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோக்ஸ் கார் மாடலையும் பில்கேட்ஸ் வைத்திருந்தார். 2008ம் ஆண்டு மாடல் ஃபோர்டு ஃபோகஸ் காரில் அவ்வப்போது செல்வதையும் வழக்கம். கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த 50 கார்களில் ஃபோர்டு ஃபோகஸ் கார் மாடலும் ஒன்று என இங்கிலாந்தை சேர்ந்த கார் என்ற ஆட்டோமொபைல் இதழ் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதர கார் மாடல்கள்

இதர கார் மாடல்கள்

போர்ஷே விரும்பியாக இருந்தாலும், பில்கேட்ஸ் வசம் இதர விலையுயர்ந்த மாடல்களும் இல்லாமல் இல்லை. மெர்சிடிஸ் பென்ஸ், லெக்சஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் பில்கேஸ்ட் கூறியிருக்கிறார். வாஷிங்டன் மேன்சனில் உள்ள பில்கேட்ஸ் வீட்டு கராஜில் 10க்கும் அதிகமான கார் மாடல்கள் உள்ளன. அடுத்து, உங்களுக்கு நன்கு அறிமுகமான உலகின் பெரும் பணக்காரரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் இந்த ஆண்டு பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருக்கிறார்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில், மூன்றாவது இடத்தில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் உள்ளார். மிக எளிமையான வாழ்க்கையை முறையை மேற்கொண்டு இவர், தனது காருக்கு டிரைவர் கூட வைத்துக் கொள்ளாமல் தானே ஓட்டிச் செல்வதாக தெரிவிக்கிறார். தற்போது கேடில்லாக் காரை பயன்படுத்துகிறார்.

தனி விமானம்

தனி விமானம்

வாரன் பஃபெட்டிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு பல தனி விமானங்களை வைத்து பயன்படுத்த முடியும். ஆனால், பொது விமான சேவைகளையே பயன்படுத்துகிறார். கொசுறுச் செய்தி: வாரன் பஃபெட்டுக்கு சொந்தமாக நெட்ஜெட்ஸ் என்ற பெரிய விமான நிறுவனமும் இருக்கிறது. சரி, அடுத்தது 5வது இடத்தை பிடித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் கராஜிற்கு எத்தனை மார்க் போடலாம் என்ற கணக்குடன் அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

கார் டீலர்

கார் டீலர்

அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன விற்பனை குழுமமான வான் டுயில் டீலரில் அதிக அளவு முதலீடுகளை செய்து கையகப்படுத்தினார். அத்துடன், சீனாவின் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்திலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார்.

எளிமை...

எளிமை...

ஃபேஸ்புக் மார்க் தினசரி பயன்பாட்டிற்கு ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார் பயன்படுத்துகிறார். இதுதவிர, அக்குரா டிஎஸ்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருக்கிறார். ஹோண்டா ஃபிட்[இந்தியாவில் ஹோண்டா ஜாஸ்] காரும் பயன்படுத்துகிறார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி 19.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 36வது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், மார்க் ஆகியோர் மிக எளிமையான கார்களை வைத்திருக்கும் நிலையில், பட்டியலில் 36வது இடத்தை பிடித்திருக்கும் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மோட்டார் உலகம் மிக பிரம்மாண்டமானது. பிரம்மிப்பை தருகிறது.

அம்பானி மோட்டார் உலகம்

அம்பானி மோட்டார் உலகம்

முகேஷ் அம்பானியிடம் சொந்தமாக பல நூறு கார்கள் உள்ளன. இதற்காக, அவரது மும்பை அன்டிலியா வீட்டின் இரு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி சர்வீஸ் மையமும் உள்ளது. இதுதவிர, தனி நபர் பயன்பாட்டுக்கான சொகுசு ஜெட் விமானங்கள், ஆடம்பர படகுகளும் உள்ளன.

அடிக்கடி பயன்படுத்தும் கார்கள்

அடிக்கடி பயன்படுத்தும் கார்கள்

முகேஷ் அம்பானி மேபக் 62 காரை அதிகம் பயன்படுத்துகிறார். இதன் விலை ரூ.5 கோடி என தெரிவிக்கப்படுகிறது.

இதர கார்கள்

இதர கார்கள்

அடிக்கடி பயன்படுத்தும் மாடல்கள் மேபக் 62 தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆகிய கார்களையும் அவ்வப்போது பயன்படுத்துகிறார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் ஒரே தளத்தில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

வீட்டிலேயே ஹெலிகாப்டர் தளம்

வீட்டிலேயே ஹெலிகாப்டர் தளம்

அன்டிலியா வீட்டின் மேல் தளத்தில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன. மேலும், ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது.

தனி விமானங்கள்

தனி விமானங்கள்

முகேஷ் அம்பானியிடம் ஏர்பஸ் 319, ஃபால்கன் 900இஎக்ஸ் மற்றும் போயிங் பிசினஸ் ஜெட்2 ஆகிய மூன்று விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் முகேஷ் அம்பானிக்காக உட்புறத்தில் விசேஷமாக வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டவை.

ஆடம்பர படகு

ஆடம்பர படகு

முகேஷ் அம்பானியிடம் 20 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஆடம்பர படகு ஒன்றும் உள்ளது. நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், மசாஜ் அறை, பொழுதுபோக்கு வசதிளை கொண்டது. மூன்றடுகளையும் இணைக்கும் விதத்தில், லிஃப்ட் வசதியும் உண்டு. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில், 20 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த ஆடம்பர படகின் மின்சார தேவையில் 30 சதவீத அளவுக்கு சோலார் மின்தகடுகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

புல்லட் புரூஃப் கார்

புல்லட் புரூஃப் கார்

முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையடுத்து, பிஎம்டபிள்யூ 760ஐ என்ற குண்டு துளைக்காத காரை கடந்த ஆண்டு வாங்கினார். இந்த காரின் மதிப்பு ரூ.10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's Youngest Woman Billionaire Alexandra car Details.
Story first published: Saturday, March 5, 2016, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X