நல்லவேளை, இந்த லிஸ்ட்டில் நானும் இல்ல, என்னோட வண்டியும் இல்ல...!!

By Saravana

சில வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள், அந்த சாலையில் செல்லும் பலருக்கும் அச்சுறுத்தல்களாகவே செல்கின்றனர். கவனக்குறைவு, தாறுமாறாக ஓட்டுதல், சிக்னல் ஜம்ப் என இவர்களை விஞ்சுவதற்கு ஆளில்லை.

அவர்களில் பெரும்பாலானோர் செய்கைகளும்ம், அவர்கள் பொதுவாக பயன்படுத்தும் வாகனங்களுக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது. அதுபோன்று, எனது அனுபவத்தில் தினசரி அச்சுறுத்தலாக செல்லும் வாகனங்களையும், அதன் ஓட்டுனரின் ஓட்டும் முறைகளையும் வைத்து இந்த செய்தித் தொகுப்பை வழங்கியுள்ளேன்.

01.இன்டிகா டாக்சி

01.இன்டிகா டாக்சி

பெரும்பாலான இண்டிகா டாக்சி ஓட்டுனர்கள் மிகுந்த அலட்சியம், கவனக்குறைவாக ஓட்டுவதை தினசரி கண்கூடாக பார்க்க நேர்கிறது. தாறுமாறாக ஓட்டுதல், பின்னால் வரும் வாகனங்களை பற்றி கவலை கொள்ளாமல் செல்போனில் பேசியபடி ஓட்டுவது என இன்டிகா ஓட்டுனர்களின் அடாவடியால் பாதிக்கப்பட்ட கதைகள் இங்கே ஏராளம்.

02.ஆட்டோரிக்ஷா

02.ஆட்டோரிக்ஷா

சைக்கிள் கேப்பில் கூட ஆட்டோரிக்ஷாக்களை செலுத்துவதும், திடீர் என கட் அடித்து பீதி கிளப்புவதும் இவர்களது வாடிக்கை. ஆட்டோரிக்ஷா ஓட்டும் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் இந்த அச்சுறுத்தல்களை பிறருக்கு தருவதை தினசரி காணலாம்.

03.சுமோ

03.சுமோ

அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்வதிலும், திரும்ப கொண்டு வருவதற்கும் பயன்படும் பெரும்பாலான சுமோ கார்களின் வேகத்தை பார்த்து அலர்ஜியாக இருக்கிறது. ஐந்தடி சந்தில் கூட ஐம்பதுக்கு கிமீ வேகத்துக்கும் மேலாக செல்வது இவர்களுக்கு கைவந்த கலை.

04.இன்னோவா

04.இன்னோவா

நெடுஞ்சாலையில் இன்னோவா புழக்கம் அதிகம். அதேபோன்று, அதிவேகத்தில் செல்லும் இன்னோவா கார்களால் தடுமாறும் கார்களும், வாகனங்களும் மிக அதிகம்.

 05.ஸ்விஃப்ட்

05.ஸ்விஃப்ட்

இன்னோவாவுக்கு தம்பி இந்த ஸ்விஃப்ட். தாங்கள் ஸ்விஃப்ட் ஓட்டுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அதிவேகத்தில் கட் அடித்து கட் அடித்து செல்வது இந்த ஓட்டுனர்களுக்கு கைவந்த கலை. ஆனால், சடன் பிரேக் போட்டு பின்னால் வரும் வாகனங்களை தடுமாற செய்வதிலும் இவர்கள் கில்லாடிகள்.

06.டொயோட்டா எட்டியோஸ்

06.டொயோட்டா எட்டியோஸ்

டாக்சி சந்தையை மட்டுமல்ல, இன்றைய நகரச்சாலைகளையும் டாக்சி அவதாரத்தில் ஆக்கிரமித்திருப்பது மட்டுமல்ல, அதிவேகத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது இந்த காரை ஓட்டும் ஓட்டுனர்களின் பழக்கம். குறிப்பாக, ஏர்போர்ட் டாக்சி போர்டு மாட்டிக் கொண்டு செல்லும் இந்த எட்டியோஸ் கார்களின் வேகம் நிச்சயம் பயணிப்பவருக்கும், பக்கத்தில் செல்வோர்க்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே இருக்கின்றன.

07.ஹோண்டா டியோ

07.ஹோண்டா டியோ

டியோ ஓட்டும் பலரும் யுவன், யுவதிகளே. நெருக்கடியான போக்குவரத்து நெரிசலில் பிற வாகனங்களுக்குள் இருக்கும் கேப்பில் புகுந்து சென்று அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வழக்கம் இவர்களிடம் எப்போதும் உண்டு. அதைவிட, சிக்னலிருந்து சீறிப்பாயும் சீமாட்டிகளின் வேகம் அனைவரையும் அச்சமடைய வைக்கிறது. பலரிடமும் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

08.டிவிஎஸ் மொபட்

08.டிவிஎஸ் மொபட்

சூப்பர் பைக் வைத்திருப்பவர்கள் கூட எந்த இடத்தில் வேண்டுமோ அங்குதான் தங்களது வேகத்தை காண்பிக்கின்றனர். ஆனால், இந்த டிவிஎஸ் மொபட்டை பயன்படுத்துவோரின் வேகமும், ஓட்டும் முறையையும் சில வேளையில் அச்சுறுத்தலை தருவதோடு, எஞ்சின் கழன்று தரையில் விழும் வேகத்தில் ஓட்டுகின்றனர்.

 09.வாட்டர் டேங்கர்

09.வாட்டர் டேங்கர்

முன்னால், பின்னால் வாகனங்கள் செல்லும் நினைப்பே இல்லாமல், ஏதோ காலியான ரோட்டில் செல்வது போன்ற ஒரு இருமாப்புடன் செல்வது இவர்கள் வழக்கம். முன்னால் செல்லும் டூ வீலர்கள் மற்றும் பாதசாரிகள் இவர்களது கண்களுக்கு எறும்பு போலத்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

 10.டிராக்டர்

10.டிராக்டர்

கிராமங்களாகட்டும், நகரங்களாகட்டும் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் செல்லும் இந்த டிராக்டர்களால் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம். அதேபோன்று, கட்டுமானத் துறை, சாலைப் பணிகளில் இன்று இன்றியமையாத வாகனம் டிப்பர். இந்த டிப்பர் டிரக்களின் அரக்கத்தனமான வேகமும், அதிலிருக்கும் பாரமும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயம்தான்.

சரிதானுங்களே?!

சரிதானுங்களே?!

இங்கே நான் சொன்ன கருத்துக்களையும், ஓட்டுனர்களின் பழக்கத்தையும் நீங்க ஒப்புக்கொள்கிறீர்களா?

Article Published On: Friday, March 20, 2015, 15:56 [IST]
English summary
We list down a few vehicles which we personally feel belongs to the worst car drivers list. Does you car fall in this list?
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+