நீர்மூழ்கியில் இருக்கும்போது செல்போன் வேலை செய்யுமா? கடலுக்குள் மூழ்கிய பின் தொடர்பு கொள்ள என்ன செய்வார்கள்?
"நீர் மூழ்கி கப்பலில் நாம் இருக்கும்போது நம்முடைய செல்போன் வேலை செய்யுமா?" இத்தகைய கேள்வி நம்மில் பலருக்கு எழும்பியிருக்கக் கூடும். குறிப்பாக, சமீபத்திய டைட்டானிக் நீர் மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து பலரின் மனதில் இந்த கேள்வி எழும்பி இருப்பதை எங்களால் அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே இந்த கேள்விக்கான பதிலை இப்பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
நீர் மூழ்கி கப்பலில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது நம்முடைய செல்போனுக்கு டவர் கிடைக்குமா என்கிற சந்தேகம் உங்களில் பலருக்கு எழும்பி இருக்கக் கூடும். குறிப்பாக, பல தசாப்தங்களுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலை, கடலுக்கு அடியில் பார்வையிட சென்ற டைட்டானிக் நீர் மூழ்கி கப்பல் விபத்தைச் சந்தித்த பின்னர் இந்த சந்தேகம் உங்களுக்கு வலுவாக எழும்பி இருக்கக்கூடும்.

இதற்கான எங்களுடைய பதில் கடலுக்கு அடியில் "செல்போன் வேலை செய்யாது" என்பதே ஆகும். அதாவது, செல்போன் ஒழுங்காக வேலை செய்யும். ஆனால், அதற்கு டவர்தான் கிடைக்காது. ஆகையால், தொலைதொடர்பு செய்வது என்பது சாத்தியமில்லாதது. வீட்டுக்குள் இருக்கும் போதே, ஏன் நடு ரோட்டில் இருக்கும்போதே செல்போனுக்கு சரியா டவர் கிடைக்காது, நீர் மூழ்கி கப்பலில் இருக்கும்போது அது எப்படி ஒழுங்கா கிடைக்கும் என்று தானே நினைக்குறீங்க.
உங்களின் எண்ணம் சரிதான். வீட்டுக்க உள்ளே இருக்கும்போது நம்மை சுற்றிலும் பல்வேறு கட்டிடங்கள் இருக்கும். மேலும், பெரிய பெரிய தடுப்பு சுவர்கள் இருக்கும். இதன் காரணத்தினால் செல்போனுக்கு சிக்னல் சரியாக வந்த சேருவதில் சிக்கல் ஏற்படும். ஆனால், கடல் பரப்பு அப்படி இருக்காது, அது, சமதளமாக இருக்கும்.

இருப்பினும், இங்கு சிக்னல்கள் சரியாக வந்து சேராது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கடல் நீரின் உப்புத் தன்மை என ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. இது செல்போன் சிக்னல்களை எளிதில் உடைத்தெறியுமாம். ஆகையால், கடலுக்குள் அடியில் செல்போன் சிக்னல்களால் பயணிக்க முடியாத சூழல் உருவாகின்றது.
செல்போன் சிக்னல்கள் உயர் ரேடியோ அதிர்வெண்களால் இயங்குகின்றன. 800 அல்லது 1900 மெகாஹெர்ட்ஸே செல்போனுக்கு உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்துகின்றன. இந்த அதிர்வெண்கள் நேர்கோட்டில் பயணிக்கும். இந்த மாதிரியான சூழலில் குறுக்கீடுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவை உடைய நேரிடும். இதையேதான் உப்பு நிறைந்த கடல்பரப்பிலும் செல்போனுக்கு வரும் சிக்னல்கள் சந்திக்கின்றன.

அப்படி என்றால் நீர் மூழ்கிக் கப்பல் கடலின் மேற்பரப்பிற்கு வந்தால் செல்போனுக்கு சிக்னலுக்கு கிடைக்குமா?.. இல்லை ஓரளவுக்கு நீர் மூழ்கி கப்பல் கரைக்கு அருகில் இருத்தல் வேண்டும். அப்போதே அதற்கு துள்ளியமாக சிக்னல்கள் சென்றடையும். செல்போன்களுக்கு சிக்னலைக் கடத்துவதில் செல்போன் கோபுரங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
ஓர் தரமான செல்போனால் சுமார் 72 கிமீ தொலைவில் உள்ள கோபுரத்தைக் கூட தொடர்பு கொள்ள முடியும். ஆனால், அதனால் துள்ளியமாக சமிக்ஞைகளை பெற்றுக் கொள்ள முடியுமா என கேட்டால் அது சந்தேகமே. எந்த அளவிற்கு டவருக்கு நெருக்கமாக இருக்கின்றோமே அந்த அளவிற்கு நல்ல சிக்னலை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விஷயம் நீர் மூழ்கி கப்பலில் இருக்கும்போது தடை படுகின்றது. நீர் மூழ்கி கப்பல்கள் குறைந்தபட்சம் 200 அடி முதல் 330 அடி வரையிலான ஆழத்தில் மூழ்கியே இருப்பவை. இந்த மாதிரியான சூழலில் அதை தொடர்பு கொள்ள மிக மிக குறைவான அதிர்வலை (ELF) அல்லது மிக குறைவான அதிர்வலை (VLF)களே பயன்படுத்தப்படும்.
இதைப் பயன்படுத்தியே இப்போதும் உலக நாடுகள் பல கடலுக்கு உள்ளே சென்ற நீர் மூழ்கி கப்பல்களைத் தொடர்பு கொள்கின்றன. இவற்றால் மிக நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆகையால் கடலுக்குள் மூழ்கி இருக்கும் நீர் மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள இவையே ஒரே வழியாகும்.
இந்த அதிர்வலைகளை கடல் நீராலும் ஒன்னும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இப்போதும் உலக நாடுகள் அதை (இஎல்எஃப் மற்றும் விஎல்எஃப்) பயன்படுத்தி வருகின்றன. இந்த குறைவான அதிர்வலைகள் 300 ஹெர்ட்ஸ் தொடங்கி 30 கிலோஹெர்ட்ஸ் வரை மட்டுமே இருக்கும்.
ஆனால், இந்த குறைவான அதிர்வெண் தகவல் பரிமாற்றத்தைக் குறைக்கின்றது. குறைவான தரவுகளை மட்டுமே அனுப்பி வைக்க இவை உதவும். இந்த பாதகமான சூழலை தவிர்க்கும் முயற்சியில் அமெரிக்கா போன்ற உலக நாடுகள் பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றன. கடல் பரப்பில் சிறிய மிதவை கருவிகளை மிதக்கவிட்டு அதன் வாயிலாக தகவல்களை விரைவாக கடத்தும் முயற்சியில் அது ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒருவேளை செல்போன்கள் கடலுக்குள் அடியிலும் செயல்படும் என்றிருந்தால் கடலில் மூழ்கி காணாமல் போன டைட்டானிக் நீர் மூழ்கி கப்பலை அது தொலைந்த அடுத்த கணமே எங்கு இருக்கின்றது என கண்டுபிடித்திருப்பார்கள். மேலும், நீர் மூழ்கியில் இருந்தவர்கள் என்னவானார்கள்? அவர்களின் உடல் எங்கு போனது என்பதுகூட தெரியாத நிலை இருந்திருக்காது.


Click it and Unblock the Notifications









