பிரிட்டன் வீரர் கிரிஸ் மீகே டபுள்யூ.ஆர்.சி போட்டியில் த்ரில் வெற்றி!

Written By: Azhagar

டபுள்யூ.ஆர்.சி ரேலி மெக்ஸிகோ பந்தயத்தில் ஃபிரான்ஸ் கார் நிறுவனமான சிட்ரன் காரை ஓட்டிய வீரர் கிரிஸ் மீகே முதலிடம் பிடித்தார். இதற்கான இறுதி சுற்றில் வீரர் கிரிஸ் மீகே பந்தைய சாலையில் இருந்து திடீரென விலகி சென்றாலும், ஒருவாறு சமாளித்து மீண்டும் பந்தயத்தில் பங்கெடுத்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி ரேலி போட்டியில், ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பான சிட்ரன் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் காரை ஓட்டிய வீரர் கிரிஸ் மீகே முதலிடம் பிடித்தார். இறுதிச்சுற்றின் போது பந்தைய சாலையில் சிறிது தவறினாலும் லாவகமாக காரை ஓட்டி பார்வையாளர்களை ஈர்த்தார் வீரர் கிரிஸ் மீகே.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

இந்த வெற்றியால் வீரர் கிரிஸ் மீகே ஓட்டிய C3 WRC கார் அங்கு பல பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக இறுதி பந்தயத்தில் வீரர் கிரிஸின் கட்டுபாட்டிலிருந்து கார் நழுவி சென்றபோது அதை லாவகமாக ஓட்டி மீண்டும் பங்கெடுத்து வெற்றி எல்லையை தொட்டார். இந்த சாகசத்தால் வீரர் கிரிஸிற்கு, C3 WRC காருக்கும் ரசிகர்கள் உற்சாக கரகோஷம் கொடுத்தனர்.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

இந்த போட்டியில் எம் ஸ்போர்ட் காரை ஓட்டிய ஃபிரான்ஸ் நாட்டின் வீரர் ஸ்பேஸ்டியன் ஓகியர் 2வது இடம் பிடித்தார். இரண்டாவது நாளின் பந்தயத்தின் போது சில தவறுகளை செய்ததால் அவர் இந்த இடத்திற்கு தள்ளப்பட்டார், ஆனால் வீரர் சபாஸ்டியனின் தவறிலிருந்து கார் நிறுவனம் சில விஷயங்களை கற்றுக்கொண்டு, எம்-ஸ்போர்ட் காரின் உற்பத்தியில் சில மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

ஹூண்டாயின் ஐ20 கூப் வண்டியுடன் பங்கெடுத்த பெல்ஜிய நாட்டு வீரர் டபுள்யூ.ஆர்.சி ரேலி போட்டியில் 3வது இடம் பிடித்தார். எரிவாயுவின் ஃபில்டர் திடீரென சேதமடைந்ததால் பந்தயத்தில் பெரிய அவதியடைந்த அவர், சாதுர்யமாக வண்டியை ஓட்டி, வெற்றியுடன் முடித்தார், மேலும் பந்தயத்தில் இறுதி போட்டியாக அழைக்கப்படும் பவர் ஸ்டேஜ் பிரிவிலும் வெற்றிபெற்றார்.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

2வது இடம்பிடித்த ஃபிரான்ஸ் வீரர் ஓகியரின் குழுவை சேர்ந்த மற்றொரு வீரரான டனாக் போட்டியில் ஃபோடியத்தை தாண்டி நின்று 4வது இடம் பிடித்தார், ஹூண்டாயின் மற்றொரு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிய ஹைடன் பேடன் டபுள்யூ.ஆர்.சி ரேலி போட்டியில் 5வது இடத்தை பிடித்தார்.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

2வது சுற்றில் வெற்றிவாகை சூடிய ஜாரி-மட்டி லட்வாலா, யூ.ஆர்.சி ரேலிக்கான இறுதி பந்தயத்தில் 6வது இடம் பிடித்தார். இவர் டோயட்டாவின் புதிய தயாரிப்புடன் பந்தயத்தில் கலந்துகொண்டார். காரின் ஃபின் என்பனக்கூடிய பாகம் காரை மிகவும் தளர்வடைய செய்தது. இதனால் எஞ்சினும் பாதிப்படைந்து பந்தயத்தில் வீரர் ஜாரி-மட்டிலட்வாலாவை சோர்வடைய செய்தது. ஜாரி குழுவை சேர்ந்த மற்றொரு வீரர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 7வது இடம் பிடித்தார்.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

மூன்றாவதாக ஹூண்டாய் காருடன் போட்டியில் கலந்துகொண்ட டானி சோர்டாவிற்கு அதே எரிவாயு ஃபில்டர் பாதிப்பால் 8வது இடத்தை பெற்றார். டி-மேக் வண்டியை ஓட்டிய எல்ஃபின் இவான்ஸ் கடைசி இடமான 9வது இடத்தை பெற்றார்.

மெக்சிகோவில் நடைபெற்ற டபுள்யூ.ஆர்.சி கார் போட்டி

2017ம் ஆண்டிற்கான WRC Rally Mexico போட்டியின் வெற்றியாளர்கள்...

1. கிரிஸ் மீகே (சிட்ரன்): 3 மணிநேரம் 22 நிமிடம் 04.06 நொடிகள்

2. சபாஸ்டியன் ஓகியர் (எம்-ஸ்போர்ட்): +13.8 நொடிகள்

3. தியரி நுவில்லே (ஹூண்டாய்): +59.7 நொடிகள்

4. ஓட் டடாங்க் (எம்-ஸ்போர்ட்): +2 நிமிடம் 18.3 நொடிகள்

5. ஹைடன் பேடன் (ஹூண்டாய்): 3 நிமிடம் 32.9 நொடிகள்

இறுதி ஆட்டத்தில் கார் ஓட்டிய வீரர்கள் அசாத்தியமான அதிரடி ஆட்டம் இங்கே...

உலகின் மோசமான சாலையில் நடைபெற்ற 2017ம் ஆண்டிற்கான டக்கார் ரேலி மோட்டார் சைக்கிள் போட்டியின் வீரர்களின் சாகத்தை காண, கீழே உள்ள புகைப்பட தொகுப்பை பாருங்கள்

English summary
Citroen driver Kris Meeke has won the first gravel rally of the season, Rally Mexico. In the final stage, Meeke went off the road and somehow managed to get back on the road.
Story first published: Tuesday, March 14, 2017, 10:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark