WWE வீரர் டிரிபிள் எச் எத்தனை கார்களை வச்சிருக்காரு தெரியுமா? எப்பா அம்பானி கொஞ்சம் ஓரமா நில்லுப்பா!

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் டிவி ஷோக்களில் டபிள்யூ.டபிள்யூ.இ- (WWE)யும் ஒன்றாகும். இந்த சண்டை ஷோவின் முன்னணி நாயகனாக டிரிபிள் எச் இருக்கின்றார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் வீரர்களில் ஒருவராகவும் இவர் இருக்கின்றார். அதேவேளையில், இவர் ஒரு மிகப் பெரிய செல்வந்தராகவும் காட்சியளிக்கின்றார். இவரின் இப்போதைய நெட்வொர்த் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகின்றது.

பணத்தை போலவே அதிக எண்ணிக்கையில் இவர் கார்களையும் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், டிரிபிள் எச் இடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். குறிப்பாக, அவரிடத்தில் உள்ள மிக மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Wwe star trible h car collection

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 760 Li M Sports): இந்த காரின் மதிப்பு சுமார் 1.60 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகின்றது. இதன் இந்திய மதிப்பு ஒரு கோடியே 32 லட்ச ரூபாய் ஆகும். இதனால்தான் டிரிபிள் எச் இடம் இருக்கும் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் பார்க்கப்படுகின்றது.

மேலும், டிரிபிள் எச் வைத்திருக்கும் சற்று பழைய கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. 2010லேயே இந்த காரை வாங்கிவிட்டதாகவும், இந்த காரில் தனக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை அவர் செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதன் விளைவாகவே அந்த காரின் மதிப்பு கோடியை தாண்டியிருக்கின்றது. இதன் வழக்கமான விலை நாம் மேலே பார்த்ததைவிட மிக மிக குறைவாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கடிலாக் எஸ்கலேட் (Cadillac Escalase): டிரிபிள் எச் தன்னுடைய தினசரி பயன்பாட்டிற்கு இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார். சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் தயாரிப்பு இது என்பதால் இந்த காரை தன்னுடைய வழக்கமான பயணங்களுக்கு அவர் பயன்படுத்தி வருகின்றார். அதேவேளையில், இந்த காரின் உட்பக்கத்தையும் தன்னுடைய விருப்பத்திற்கு அவர் மாற்றி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், என்ன மாதிரியான மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறிய பார் போன்ற வசதிகள் எல்லாம் இந்த காரில் இருப்பதாக கட்டுக்கதைகள் இணையத்தில் உலா வந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஸ்யூவி காரின் மதிப்பு 76,600 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் ஆகும். இந்திய மதிப்பில் 63 லட்ச ரூபாய் ஆகும்.

லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan): உலகின் விலை உயர்ந்த மற்றும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய சூப்பர் கார் மாடலாக ஹூராகேன் காட்சியளிக்கின்றது. இந்த காரில் லம்போர்கினி நிறுவனம் வி10 வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.2 செகண்டுகளிலேயே எட்டிவிடும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.22 கோடி ஆகும். இந்தியாவில் சில முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom): அதானே இந்த கார் இல்லாம மில்லியனரா.. அப்படிதான் நம்மை கேட்க செய்கின்றது இந்த கார். இந்த கார் மாடல் இல்லாத உலக செல்வந்தர்களைக் காண்பது மிக மிக அரிது. இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி குடும்பத்திடம்கூட இந்த கார் மாடல் இருக்கின்றது. அந்த அளவிற்கு பிரபலமான கார் மாடலே ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் ஆகும். இதன் மதிப்பு ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே பயன்படுத்தி வருகின்றார் டிரிபிள் எச்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்த உலகில் ஒரு சிலர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர் இந்த மல்யுத்த வீரர் என்பது அவரு வைத்திருக்கும் கார்களின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இவரிடத்தில் விலை உயர்ந்த கார்கள் மட்டுமின்றி தனி விமானமும் இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 5:00 [IST]
English summary
Wwe star trible h car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+