மொபைல்போன் புகழ் சியோமி நிறுவனத்தின் செக்வே ஸ்கூட்டர் அறிமுகம்!

Posted By:

மொபைல்போன் சந்தையில் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இந்தியாவிலும் சியோமி மொபைல் போன்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்தநிலையில், வர்த்தக விரிவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது சியோமி.

அதன்படி, தனது கீழ் செயல்படும் நைன்பாட் நிறுவனத்தின் வழியாக செக்வே ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. அத்துடன், செக்வே ஸ்கூட்டரின் விலையில் பன்மடங்கு குறைவான விலையில் ஒரு புதிய செக்வே மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. மிக குறைவான விலையில் வந்திருக்கும் இந்த சியோமி செக்வே ஸ்கூட்டர் பற்றிய செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.

நைன்பாட் நிறுவனத்தின் அறிமுகம்

நைன்பாட் நிறுவனத்தின் அறிமுகம்

சீனாவை சேர்ந்த நைட்பாட் நிறுவனம் புதிய வகை தனி நபர் போக்குவரத்து சாதனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் புகழ்பெற்ற செக்வே ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்த முனைந்தது. அதன்படி, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

சியோமி பெரும் முதலீடு

சியோமி பெரும் முதலீடு

சீனாவை சேர்ந்த சியோமி மொபைல்போன் நிறுவனம் 80 மில்லியன் டாலர்களை, நைட்பாட் நிறுவனத்துக்கு முதலீடாக வழங்கியது. சியோமி கொடுத்த முதலீட்டை அடிபபடையாக வைத்து, உலகின் புகழ்பெற்ற செக்வே ஸ்கூட்டர் நிறுவனத்தை நைட்பாட் கையகப்படுத்தியுள்ளது.

முதல் மாடல்

முதல் மாடல்

செக்வே ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், சியோமி நிறுவனத்தின் கீழ் செயல்படும் நைட்பாட் நிறுவனம் புதிய செக்வே ஸ்கூட்டரை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. நைட்பாட் மினி என்று அழைக்கப்படும் இந்த செக்வே ஸ்கூட்டர் மிக குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டப்படுள்ளது.

வர்த்தக கோட்பாடு

வர்த்தக கோட்பாடு

குறைவான விலையில் அதிக வசதிகளை கொண்ட மொபைல்போன்களை அறிமுகம் செய்து பெரிய மொபைல்போன் நிறுவனங்களின் மார்க்கெட்டை கலகலக்க வைத்தது சியோமி. அதே பாணியில் இந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது சியோமி- நைட்பாட் கூட்டணி.

 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

சியோமியின் நைட்பாட் மினி ஸ்கூட்டர் மின் மோட்டார் மூலமாக இயக்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சமநிலைப்படுத்தி தொழில்நுட்பம்

சமநிலைப்படுத்தி தொழில்நுட்பம்

இரண்டு சக்கரங்களை கொண்ட சிறிய தனிநபர் போக்குவரத்து சாதனமான இந்த ஸ்கூட்டர் தானியங்கி முறையில் சமநிலையை தக்க வைத்துக் கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், 15 டிகிரி சரிவான சாலைகளில் கூட ஏறும் திறன் கொண்டது.

எடை குறைவு

எடை குறைவு

இந்த செக்வே ஸ்கூட்டர் வெறும் 12.8 கிலோ மட்டுமே எடை கொண்டது. எனவே, கையாள்வதும், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதும் மிக எளிது.

ஐரோப்பாவில் விற்பனை

ஐரோப்பாவில் விற்பனை

முதல்முறையாக நைட்பாட் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டு இணையதளத்தில் நைட்பாட் மினி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த மினி செக்வே ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்லும் திட்டம் நைட்பாட் - சியோமி கூட்டணிக்கு உள்ளது.

விலை

விலை

நைட்பாட் மினி ஸ்கூட்டர் 315 டாலர்கள் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது செக்வே நிறுவனத்தின் ஸ்கூட்டரின் விலையுடன் ஒப்பிடும்போது, 20 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் செய்திகள் உடனுக்குடன்...

ஆட்டோமொபைல் செய்திகளையும், சுவாரஸ்யங்களையும் அள்ளி தந்து வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

ஃபேஸ்புக் பக்கம்

டுவிட்டர் பக்கம்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chinese company Xiaomi has launched a small Segway device, the Ninebot mini, for a mere $315 (£203).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark